தன்னால் ஏற்படுத்தப்பட்ட கடல் நீர் அனைத்தும் உறுஞ்சப்பட்டதை அறிந்த வருணன் கடும்கோபம் கொண்டான். கண்கள் சிவக்க தோல்வி அடைந்துவிட்டோமே என நினைத்தான். பின் நீரை உறிஞ்ச காரணமான நான்கு மேகங்களை அழைத்து, இடைவிடாமல் மதுரையில் சொரியுங்கள் என ஆணையிட்டான்.
வருணனின் கட்டளையால் மதுரையின் எல்லா பகுதிகளிலும் மேக முழக்கம். ஆலங்கட்டி மழை. எங்கும் மின்னலின் ஒளி. எங்கும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது.
மழையின் காரணமாக அனைவரும் பசியில் வாடினர். இதை அறிந்த இறைவன் அதே நான்கு மேகங்களை அழைத்து மதுரை நகரை சுற்றி நான்கு பக்கத்திலும் கூடாரம் போல நின்று அனைவரையும் காத்திடுக என ஆணையிட்டார். பின் ஆலவாய்த் தலமே ஒரு மண்டபம் போல ஆகிவிட்டது. இதன் காரணமாக ஒரு மழை துளிகூட நகரத்திற்குள் புகவில்லை. இதை கண்ட அனைவரும் வியந்து போகினர். இதனால் வருணன் பயந்து உடனே மழையை நிறுத்த உத்தரவிட்டு, பின் ஈசனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
பொற்றாமரையில் நீராடி இறைவனை வழிபட்டவுடன், அவனைத் துன்புறுத்திய சலோதர எனும் நோய் அவனை விட்டு நீங்கியது.
பின் சமுத்திரத்தை அழைத்ததற்கும், அபிஷேக பாண்டியனை சோதிக்க நினைத்ததற்கும் என்னை மன்னித்தருள வேண்டும் என வேண்டினான். மதுரை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்ததே ஈசனின் 19 -ஆம் திருவிளையாடல்.
இறைவனின் 19 -ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் மழை, புயல் போன்றவற்றிலிருந்து காக்கப்படுவர். வயிற்று நோய்கள் எல்லாம் நீங்கும்.