திருவிளையாடல் புராணம்

அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்

     அந்தணர் ஒருவர் புதூர் என்ற கிராமத்தில் தன் மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான்ஒரு நாள் தன் குடும்பத்துடன் மனைவியின் தந்தை வீட்டிற்கு நடந்து சென்றான்.

     வெகு தூரம் நடந்ததால் அந்தணரின் மனைவி களைத்து போய் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தாள்அந்தணரோ தண்ணீர் வாங்க சென்று விட்டார்குழந்தை விளையாடிக்கொண்டிருக்க, களைப்பு அதிகமானதால் அவள் மரத்தடியில் ஒரு துணியை விரித்து படுத்து உறங்கிவிட்டாள்

     அவள் படுத்த மரத்தின் கிளையில் முன் ஒரு நாள் வேடன் ஒருவன் பறவையை பிடிக்க விட்ட அம்பு மாட்டிக்கொண்டதுபறவை பறந்துவிட, அந்த அம்பை எடுக்காமல் அவன் சென்றுவிட்டான்.  

     அன்று காற்று பலமாக வீசியதுகாற்றின் வலிமை தாங்காமல் கிளையிலிருந்து அம்பு மரத்தடியில் படுத்திருந்த பெண்ணின் மார்பில் விழ, அவள் அக்கணமே இறந்துவிட்டாள்ஒன்றும் அறிய குழந்தையோ அவள் அருகிலே அமர்ந்திருந்தது.

     சிறது நேரத்தில் அந்தணன் தண்ணீர் எடுத்து வந்தான்மனைவியை பார்த்து அதிர்ச்சி அடைத்து, பலத்த சத்தத்துடன் கதறி அழுதான்மனைவி இருந்த இடத்தில் சுற்றி பார்த்த போது ஒரு வேடன் வந்துக் கொண்டிருந்தான்வேடனை பார்த்ததும் இவன்தான் அம்பு எய்திருப்பான் என நினைத்த அவன் வேடனை போய் அடித்தான்வேடனோ எனக்கும் நடந்தவற்றிற்கும் சம்மந்தம் இல்லை என கூறியும் அந்தணன் நம்பவில்லை.

     வேடன் தான் அனைத்திற்கும் காரணம் என நினைத்து அந்தணன் வேடனைக் கட்டி இழுத்துக் கொண்டு, தன் மனைவியையும் குழந்தையையும் சுமந்துக் கொண்டு மதுரைக்கு வந்து மன்னனிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதான்.

     அந்தணன் கூறியதை கேட்ட குலோத்துங்கனுக்கு குழப்பம் உண்டானதுவேடன் தனக்கும் இதற்கும் தொடர்பில்லை எனக் கூற, அவையில் உள்ளோரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைத்தனர்.

     மன்னனோ தந்தைக்காக கால்மாறி ஆடிய பெருமானின் சன்னதிக்கு சென்று, கடவுளை வணங்கிக் கொண்டு, தான் இது வரை நீதி தவறி எந்த ஒரு தீர்ப்பையும் வழங்கியது இல்லைஆனால் எனக்கு இப்படி ஒரு சங்கடமான சூழல் உருவாக்கி உள்ளதுநீதிநெறி தவறாமல் நீதி வழங்க எனக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டினான்.

     அப்போது ஒரு அசரீரி வந்து குலோத்துங்கனே, இன்று  வைசிய வீதியில் நடக்கும் திருமணத்திற்கு வந்து வாசல் திண்ணையில் காத்திருஅப்போது உன் குழப்பத்திற்கான விடை கிடைக்கும் என கூறி மறைந்தது.

      பின் அந்தணனும் அரசரும் திருமண வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தனர்திண்ணையில் அமர்ந்திருந்த இருவர் பேசிக்கொண்டிருக்க அதை அரசன் கேட்டுக்கொண்டிருந்தான்.  

     அதில் ஒருவன் மணமகன் உயிரைக் கவர்வது எவ்வளவு சங்கடம்? எனக் கேட்டான்அதற்கு மற்றொருவன் சங்கடம் எதற்குவிதி முடியும் என்றால் சிறு புல் தடுக்கினாலும்உயிர் போய் விடும்! அங்கே உள்ள பசுவின் கொம்பில் அமர்ந்தால் ஒரே குத்து நம் வேலை முடிந்துவிடும்பழி நம் மீது வரும் என அஞ்சத்தேவையில்லைபழி ஏற்கப்போவது பசுவாகத்தான் இருக்கும்நேற்று காலை ஒரு அந்தண பெண்ணின் மேல் வேடன் ஒருவன் முன்பு  விட்ட அம்பு விழுந்து அவள் இறந்தாள்.   அப்போது அங்கு எதேச்சையாக வந்த வேடன் மாட்டிக்கொண்டான் என பேசிக்கொண்டிருந்த சிறு நேரத்தில் இருவரும் சென்றுவிட்டனர்.  

     சிறிதுநேரத்தில் கல்யாணத்திற்காக மேளம் கொட்டப்பட்டதுஅதன் சப்தத்தைக் கேட்ட மாடு ஓடிவந்ததுமக்கள் எல்லாம் பயந்து ஓட ஆரம்பித்தனர்பிறகு மாட்டை கட்டிப்போட்டு விட்டு பார்த்தால், மணமகன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

     மாடு முட்டினால் மாடு வளர்த்தவர் பொறுப்பாக முடியாதுஅதுபோல பறவையை பிடிக்க முன் விட்ட அம்பு காற்றின் காரணமாக கீழே விழுந்தால் வேடன் பொறுப்பாக முடியாது.

     அந்தணனும் அரசனும் தன் தவறை உணர்ந்து வேடனை விடுதலை செய்யச் சொன்னதுடன், வேடனுக்கு பல பொருள்களைக் கொடுத்து அனுப்பினார்அந்தணருக்கு ஆறுதல் கூறி மறுமணம் செய்துக் கொள்ள கூறினார்.

     தனக்கு சிறப்பான நீதியை எடுத்து கூறிய நடராஜனின் வலதுக் காலுக்கு   குலோத்துங்கன் தண்டையை பூட்டி அழகு பார்த்தான்அந்தணப் பெண்ணின் கொலையை கண்டறிய அரசனுக்கு அருள் புரிந்ததே ஈசனின் 25 -ஆம் திருவிளையாடல்.

    இறைவனின் 25 -ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பாவங்கள் எல்லாம் நீங்கும்.