சிவபெருமான் பிட்சாடனராய் தாருகா வனத்திற்கு வந்தபோது சில ரிஷி பத்தினி பெண்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். சிவபெருமானோ அவர்களிடமிருந்த விலகி சென்றார். சிலர் அவருக்கு பால், நெய் போன்றவற்றை பிச்சையாக கொடுத்தனர். சிலர் ஆபரணங்களைக் கொடுத்தனர்.
அவர்களின் செயலைக் கண்டு கோபமடைந்தவர் வைசிய குலப் பெண்களாகப் பிறக்கக் கடவது, எவரின் ஸ்பரிசத்துக்காக அழைக்கிறீர்களோ, அவர் வளைச் செட்டியாக வந்து உங்கள் கரங்களைத் தொட்டு வளையல் அணிவிப்பார் என சபித்தார்.
சாபத்தின் காரணமாக பத்தினிப்பெண்கள் வைசியகுலப் பெண்களாகப் பிறந்தனர். ஈசனின் அருளால் அவர்களுக்கும் வளையல் அணிய வேண்டும் என ஆசை வந்ததும் ஈசனே வளையல்காரனாக மாறினார்.
ஈசன் பார்ப்பதற்கு வெள்ளை வேஷ்டி உடுத்தி, தோல் பட்டையில் துண்டுடன், சந்தானம் குங்குமம் பூசிக் கொண்டு, வாயில் வெற்றலையை மென்றுக் கொண்டு வளையல்களுடன் வளையல்காரனாக மாறி வந்தார்.
பெண்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான வளையல்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்க, ஈசன் உருவில் வந்த வளையல்காரர் பெண்களுக்கு அதை அணிவித்தார்.
அப்போது ஒரு ஏழை பெண் நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் அவளை நோக்கி நீ வளையல் வாங்கவில்லையா எனக் கேட்டார் வளையல்காரர். அதற்கு அப்பெண் என் வளையல் உடைந்துவிட்டது, வளையல் வாங்குவதற்கு என்னிடம் போதுமான அளவு காசு இல்லை எனக் கூறினால் வருத்தத்துடன்.
அவரோ உன்னிடம் காசு யார் கேட்டது? எனக் கூறி அவள் கையை இழுத்து, சொக்கநாதர் கோவிலுக்கு தண்ணர் தெளித்து சுத்தம் செய்யும் உன்னிடம் காசு கேட்பது தவறு என்று வளையலை அப்பெண்ணின் கையில் அணிவித்தார். வாங்கிய வளையளுக்கு காசுக் கொடுத்த பெண்களிடம் இந்த காசை போய் மீனாக்ஷி கோவில் உண்டியலில் போடும்படி கூறினார்.
பின் மற்றொரு பெண் வெறும் கையோடு நிற்பதைப்பார்த்தவர் உன் வளையலை கழற்றி வைத்திருக்கிறாயா? எனக் கேட்டபோது அவளோ உங்களிடம் வளையல் போட்டுக் கொள்ள நான் விரும்பி என் வளையலை கழற்ற நினைத்தேன், ஆனால் அதை கழற்ற முடியாத காரணத்தினால் நானே அதை உடைத்துவிட்டேன். எனக்கு வளையல் அணித்துவிடுங்கள் என தன் கையை நீட்டினாள்.
இப்படி அனைத்து மங்கைகளும் வளையளுக்கு ஆசைப்பட வளையல்காரராக வந்த சிவபெருமான் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி தன் கையாலே அவர்களுக்கு அணிவித்தார். வளையல்காரராக உருவெடுத்ததே ஈசனின் 32 -வது திருவிளையாடல்.
இறைவனின் 32 -வது திருவிளையாடலை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் மாங்கல்யம் பெருகும். கன்னி பெண்கள் நல்ல கணவனை அடைவார்கள்.