நாயன்மார்கள்

பூசலார் நாயனார்

பூசலார் என்ற பெரியார் திருநின்றவூரில் அந்தணர் மரபில் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் திருவடிகளில் தமது உணர்வுகள் அனைத்தும் சாரும்படி செய்தவர். வேதம்;ரூபவ் நீதி முதலிய கலைகளை கற்று உணர்ந்தவர். மனிதப் பிறவியின் கடமையென்பது சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் பணி செய்வதே என எண்ணியவர்.பூசலார் சிவபெருமானுக்கு திருக்கோயில் ஒன்றை அமைக்க நினைத்தார். எவ்வளவோ வருந்தித் தேடியும் அதற்கான பொருள்கள் கிடைக்கவில்லை… அதனால் “இனி என் செய்வேன்” என வருந்தி ஆலோசித்தார். பின்பு தம் மனதாலேயே கோயில் எழுப்ப துணிந்தார். தம் மனக் கற்பனையாலேயே சிறிது சிறிதாக அதற்கு வேண்டிய திரவியங்களை தேடி சேர்த்துக் கொண்டார்.

சிவாகம விதிப்படி தச்சர்களையும்ரூபவ் நல்லதொரு நாளையும்ரூபவ் நல்ல வேளையையும் குறித்துக் கொண்டுரூபவ் திருக்கோயில் கட்டுவதற்குரிய சாதனங்களோடு அடிநிலை கோலினார். தம் மனதிற்குள் ஒரு கோயிலை அன்பின் நிறைவினாலேரூபவ் ஆசையினால் இரவிலும் கூடக் கண்துயிலாமல் கட்டலானார். சிற்ப வேலைப்பாடுகள் பொருந்த அடிவரி முதல் உபாதான வரி முதலாக வரும் அடுக்குகள் அனைத்தையும் மனத்தினாலே எழுப்பினார். நீண்ட நாட்கள் தம் மனதினுள் கோயிலை எழுப்பி ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். ஸ்தூபியையும் நட்டு சுதை வேலைகளைச் செய்து முடித்து கிணறெடுத்தார்ரூபவ் மதிலெடுத்தார்ரூபவ் திக்குளமும் எடுத்தார். தம் மனத்தாலேயே இப்படி கட்டிய திருக்கோயிலில்ரூபவ் நல்ல நாளையும்ரூபவ் நல்ல வேளையையும் சிவபெருமானை ஸ்தாபிக்க குறிப்பிட்டார்.

பல்லவ அரசனான காடவர்கோனான் காஞ்சிபுரத்தில் கற்கோயில் ஒன்றை கட்டி முடித்து அதில் சிவபெருமானை ஸ்தாபிக்க ஒரு நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் குறித்தார். அதற்கு முந்தைய நாளில் அரசனின் கனவில் தோன்றிரூபவ் “பூசல் என்பவன் திருநின்றவூரில் இருக்கிறான். நீண்ட நாளாக அவன் நினைத்து

நினைத்து மனதில் எழுப்பிய கோயிலை முதலில் அடைவோம்… அதனால்; நீ உன் பிரதி~;டை நாளை ஒத்தி வைப்பாயாக…” என சொல்லிவிட்டு பூசலாரின் மன கோவிலினுள் சென்றார். அரசன் எழுந்து பூசலாரின் பெருமையை உலகறிய செய்வதற்குரூபவ் “நான் அத்தகைய திருப்பணி செய்த மெய்யன்பரை சென்று வணங்க வேண்டும்” என பெருங்காதல் கொண்டான். அரசன் தமது சேனைகளுடன் திருநின்றவூரிற்கு சென்றுரூபவ் “இங்கு பூசலார் எழுப்பிய கோயில் எங்குள்ளது?” என்று வினவ அங்கிருந்தோர் அப்படி ஒன்றும் இங்கு கோயில் இல்லை என கூறரூபவ் அவர் வேதியர்களை அழைத்து அவர்களிடம் “மாசிலாப் பூசலார் தாம் யார்?” என்று கேட்டான்.

“அவன் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு வேதியன்.” என்று மறையவர்கள் சொல்லி பூசலாரை அழைத்து வருவதற்காக சென்றனர். அப்போது அரசன் அவர்களை அழைத்து வரவிடாமல் தாமாகவே பூசலாரிடம் நேரிலே சென்றார். “அடிகளே! இங்கு நீர் எழுப்பிய சிவபெருமான் கோயில் எங்குள்ளது? அந்தத் திருக்கோயிலின் பிரதிடை நாள் இன்று என்பதை சிவபெருமானின் அருளால் அறியப்பெற்றேன். அதனால் உம்மிடம் அடி வணங்க வந்தேன்!” என்று அரசன் பூசலாரை வணங்கி கேட்டான். 

இவ்வாறு மன்னன் கேட்டவுடன் பூசலார் நடந்த அனைத்தையும் கூறியவுடன்ரூபவ் காடவர்கோன் வியந்துரூபவ் “என்னே மெய்யன்பரின் பெருமை!” என அவரைப் போற்றி நாயனாரை தரைமீது விழுந்து தொழுது வணங்கி விடைப்பெற்றுக் கொண்டு தம் நகருக்கு பரிவார சேனைகளோடு புறப்பட்டார்.

பூசலாரும் தம் மனதில் அமைத்த கோவிலுக்குள் சிவபெருமானை ஸ்தாபித்து சில காலம் வழிபாடு செய்து இறுதியில் அம்பல வாணரின் பொன்னடி நிழலில் புகுந்தார்.

மேலும்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
மூர்த்தி நாயனார்
View Details
சண்டேசுர நாயனார்
View Details