தொண்டைவளநாட்டில்ரூபவ் பாலியாற்றின் வடகரையில் திருவேற்காடு என்னும் ஊரில் ஒரு வேளாளராக இருந்தவர் மூர்க்க நாயனார். இவர் தமக்கு அறிவு தோன்றிய நாளிலிருந்தே மெய்ப்பொருள் என்று சிவபெருமானின் திருவெண்ணீற்றையே கருதி வந்தார். சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து அவர் அதைப் பார்த்து மகிழ்ந்த பின்புதான் தான் உண்பது வழக்கமாக கொண்டிருந்தார்.
நாள்தோறும் அவர் தூய்மையான சோறுரூபவ் நெய்ரூபவ் சுவைமிக்க கறி வகைகள் போன்றவற்றை நன்றாகச் சமைத்து தம்மை அடைந்த சிவனடியார்களை வணங்கிரூபவ் உபசரித்துரூபவ் திருவமுதை அவர்களுக்கு செய்வித்துரூபவ் வேண்டிய பொருள்களை எல்லாம் அவர்களுக்கு கொடுத்துதவி அந்த தொண்டிலேயே பெரிதும் மகிழ்ந்து வந்தார்.
நாளுக்கு நாள் இப்படியிருக்குரூபவ் அடியவர்கள் கூட்டம் பெருகியது. மூர்க்க நாயனாரிடமிருந்த அனைத்தும் செலவாகியதால் பரம்பரை உரிமையான நிலம்ரூபவ் அணிகலன்கள் போன்ற பொருள்களை எல்லாம் விற்றுரூபவ் திருவமுதை அடியார்களுக்கு படைக்கும் திருத்தொண்டினில் மகிழ்ந்து வந்தார். எவ்வகைப் பொருளும் இல்லாத நிலைமை முடிவில் வந்து சேர்ந்தது. திருவமுது படைப்பதற்கு மேன்மேலும் வழியில்லாமல் வறுமையில் வாடிய அவர்ரூபவ் இனி பொருளுக்கு என்ன செய்வது என மனம் சோர்ந்துரூபவ் பின்பு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்டக் கருதினார். சூதாடுபவர் அந்த ஊரில் இல்லாததால்ரூபவ் அந்த ஊரிலிருந்து புறப்பட்டு பல திருப்பதிகளுக்கு சென்றார். உள்ளமுருகி ஆங்காங்கே உள்ள இறைவனைப் பணிந்துரூபவ் தொழுது ஆங்காங்கே சூதாடிரூபவ் சிவனடியார்களுக்கு அதன் மூலம் வரும் பொருளைக் கொண்டு அன்னமிடும் திருத்தொண்டைத் தொடர்ந்து செய்விப்பார். இப்படி கும்பகோணத்தை அவர் அடைந்தபோதுரூபவ் பல பொது இடங்களுக்கு அங்கு சென்று சூதாடிரூபவ் வெற்றி பெற்று அவற்றின் மூலம் கிடைக்கும் பொருட்களைரூபவ் தமக்கு இறைவன் திருவருளால் கிடைத்தனவாகக் கருதிரூபவ் திருவமுதை அடியார்களுக்குச் செய்து மகிழ்ந்திருந்தார்.
முதல் ஆட்டத்தில் அவர் சூதாடும்போது பணயப் பொருள்களை தோற்று இழப்பார். ஆனால் அதற்கு பின் வரும் ஆட்டங்களில் அனைத்திலும் வெற்றி பெற்றுப் பெரிய பணயப் பொருள்களை வாரிக் கொள்வார். தம் உடைவாளை உருவி ஆட்டத்தில் வாயுரைகளால் மாறுபடுவோரைக் குத்துவார். அவரை அதனால் உலகத்தார் நற்சூதர்ரூபவ் மூர்க்கர் என்ற அருமையான பெயர்களையிட்டு அழைத்து வந்தனர்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மூர்க்க நாயனார் பொருளைரூபவ் தமது கையாலும் தீண்டமாட்டார். தமக்காகவும் பயன்படுத்தமாட்டார். சமையல் செய்வோரிடம் அவற்றை கொடுப்பார். அவர்கள் அமுதாக்குவார்கள். அடியார்கள் யாவரும்திருவமுது செய்த பிறகுரூபவ் தாமும் கடைசிப் பந்தியில் அமர்ந்து அமுது செய்வார்.
சிலநாள் இவ்வாறுரூபவ் மூர்க்கநாயனார் கும்பகோணத்திலேயே திருத்தொண்டு செய்துரூபவ் குற்றங்களிலிருந்து இறைவனின் திருவருளினால் நீங்கப் பெற்றவரானார். இவ்வுலகை அவர் விடுத்த பின்புரூபவ் பூதகணங்கள் சிவபுண்ணியப் பேற்றால் சூழ்ந்து இசைபாடரூபவ் ஆனந்தத் தாண்டவம் செய்தருளும். சிவபெருமானின் உலகமாகிய சிவபுரத்தினில் புகுந்து பேரின்பமுற்றார்.