பார்வதி தேவியின் அந்தப் புரக் காவலராகவும், சிவகணங்களில் ஒருவராகவும் இருந்தவர் நந்தீசர்! கௌரி என்ற பெயரில் பார்வதி தேவி ஒரு முறை சிவனை நினைத்து தவம் மேற்கொண்டிருந்தார்... பார்வதியை காண அடிலகன் என்ற மன்னர் வர அவரை சிவ சன்னிதானத்தில் பார்வதி தேவியின் அனுமதியின்றி நந்தீசர் உள்ளே செல்ல அனுமதித்து விட்டார்.
இதனால் கோவம் கொண்ட சிவபெருமான் நந்தீசரைப் பார்த்து நீ செய்த தவறின் காரணமாக பூலோகத்தில் பன்னிரண்டு வருடகாலம் சிலாதர் என்ற மகரிஷியின் மகனாக பிறப்பாய் என சாபமிடுகிறார். பூலோகத்தில் சிலாதர் - சித்ரவதி தம்பதியினருக்கு பல வருடகாலம் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இத்தம்பதியினர் வீட்டிற்கு வந்த சப்தரிஷிகள் குழந்தை இல்லா காரணத்தினால் இவர்கள் வீட்டில் உணவு உண்ண மறுத்துவிட்டனர்.
இதனால் மனம் நொந்த சிலாதர் சிவபெருமானிடம் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்த போது,"நீர் விரும்பும் மகனை அடைவாயாக" என வரமளித்து சிவபெருமான் மறைந்தார்.
சிலாதர் ஒரு முறை யாகம் செய்வதற்கு நிலத்தை உழுத போது அந்த இடத்தில் ஒரு மாணிக்கப் பெட்டியை கண்டார். பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ஜடா முடியுடன் நான்கு கரத்தினை உடைய நந்திதேவர் இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
"பிள்ளைக்கலி தீர வேண்டினால் இப்படி ஒரு ஜடாமுடி சாமியாரை அளித்து விட்டீர்களே?" என நினைத்த சமயம் மீண்டும் பெட்டியை திறந்து பார் என இறைவர் கூற மறுமுறை சிலாதர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் அழகான ஆண் குழந்தை இருந்தது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார் சிலாதர்.
தனக்கு வரமாக கிடைத்த குழந்தையை அள்ளி அனைத்து சீரும் சிறப்புமாக வளர்த்து வந்த சமயம் தன் குழந்தை பன்னிரண்டு வயதில் மித்திரர் வருணரால் மரணமடைவான் என சிலாதர் அறிந்து கண்ணீர் விட, சிலாதர் அனைத்தையும் அக்குழந்தையிடம் கூறி விட்டார்.
அனைத்தையும் அறிந்த அக்குழந்தை "நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்" என கூறி, சிவபெருமானை நினைத்து கடும் தவத்தில் ஈடுபட்ட போது சிவபெருமான் தோன்றி "சிவகணங்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் அதிகாரமும், பொறுப்பும் பெற்று, பித்ரு தேவரின் இதயக்கமலத்திலிருந்து தோன்றிய சயஞ் இருக்கும் பாக்கியத்தை நீ பெறுவாயாக" என நந்தீசருக்கு வரம் தந்தார் சிவபெருமான்.
நந்தீசர் ஏன் சிவபெருமானின் முன் மண்டியிட்ட நிலையில் உள்ளார் என்ற கேள்வி அனைவரின் மனதில் உள்ளதே? அதற்கான காரணம் பின்வருமாறு: ஒரு சமயம் நந்தீசர் யாரும் அறியாத ரகசியத்தை தன் சீடர்களுக்கு கூறிவிட்டார். வட நாட்டில் கயிலாயம் எனக்குச் சொந்த இடம், தசரதன் என் அம்மான், வியாசர் என் தம்பி, சந்திர சூரிய குலத்தவர் அனைவரும் எனது உறவினர்கள், தன்வந்திரி என் சீடன், அசுவினி தேவர்கள் எனது பேரர்கள். நான் சிவன் பெற்ற பிள்ளை. உமையவள் எனக்கு அன்னை.எனக்கு கயிலாய சித்தர் என்ற பெயர் சிவபெருமானின் அருளால் உண்டானது. திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அமுதக்கலசத்தோடு தோன்றிய தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அவதாரம்.
சிவன் உமையவளுக்குக் கூறிய இரகசியத்தை பரிபாஷையாகச் சொல்லாமல் வெளிப்படையாக சொன்னதன் காரணமாக சித்தர்கள் மற்றும் சிவனின் கோவத்திற்கு ஆளானதே சிவபெருமானின் முன் நந்தீசர் மண்டியிட்ட நிலையில் உள்ளதற்கான காரணம்