சோழ வளநாட்டின் ஆதனூரில் புலையர் சேரியில் ஆதித்திராவிடர் மரபில்ரூபவ் நந்தனார் என்ற பெயருடைய ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இயற்கையாகவே சிவபெருமானிடம் மெய்யன்பு கொண்டவர். அவர் அந்த ஊரில் புலைமைத் தொழில் புரிந்து வந்தார். பறையடிக்கும் தொழிலுக்கென அந்த ஊரில் விடப்பட்டுள்ள தோட்டம் முதலான மானிய நிலங்கள் இவருக்கு இருந்தன. அவருடைய வாழ்வுக்கு அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயும் உணவும் பயன்பட்டன. பிறைசூடிய பெருமானிடம் அவர் பிறந்து உணர்வு தொடங்கியவுடனேயே பேரன்பு கொண்டுவிட்டார். சிவத்தையன்றி சிந்தையில் வேறு எதையும் நினைக்கமாட்டார்.
புலையராக அவர் பிறந்திருந்ததால்ரூபவ் சிவபெருமானுக்கு அக்குலத் தொழிலின் வழியே திருத்தொண்டு செய்ய வேண்டுமென்று கருதிரூபவ் அந்த நெறியிலேயே நின்று சிறந்து விளங்கினார். போரிகைரூபவ் மத்தளம் முதலான கருவிகளுக்குப் போர்வைத் தோலும் இறுகக் கட்டும்வார்களும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள்தோறும் நந்தனார் செய்து கொடுப்பார். நரம்பை வீணைக்கும் யாழுக்கும்ரூபவ் கோரோசனையை சிவார்ச்சனைக்கும் வழங்கி கோயில்களின் வாயிற் புறத்திலே நின்று இறைவனை தொழுதுரூபவ் பக்தியின் மிகுதியால் உள்ளுரப் பொங்கி எழுந்து ஆனந்தக் கூத்தாடியும் பாடியும் மகிழ்வார்.
திருப்புன்கூரில் கோயில் கொண்டிருக்கும் சிவலோக நாதருக்கு நந்தனார் திருப்பணி செய்ய விரும்பிரூபவ் ஆதனூரைவிட்டு கிளம்பி திருப்புன்கூருக்கு வந்து கோயிலின் வாசல் முன்பு இசைபாடிய வண்ணம் நின்றார். பறையராதலின் அவர் கோயிலினுள் நுழைய முடியவில்லை. சிவபெருமானை நேரில் கும்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட நந்தனாருக்கு சிவபெருமான்ரூபவ் தம்முன்பு சந்நிதியை மறைத்துக் கொண்டிருந்த இடபதேவரான நந்தியைச் சற்று விலகியிரக்கச் செய்து நந்தனாருக்கு காட்சி தந்து அருளினார். நந்தனார் அதைக் கண்டு ஆனந்தமுற்று தம் தோற்கருவியைக் கீழே வைத்துவிட்டு ஆண்டவனின் வாயிலின் முன் நின்றபடியே கீழே விழுந்து கும்பிட்டு எழுந்தார்.
பின்புரூபவ் அவர் அங்கிருந்து திரும்பும்போது ஒரு நிலம் திருக்கோயிலின் ஒருபுறத்தில் பள்ளமாக இருப்பதைக் கண்டு ஒரு பெரிய திருக்குளமாக அந்தப் பள்ளத்தை வெட்டி வைத்தார். நமது சொந்த ஊரான ஆதனூருக்குரூபவ் கோயிலை வலம்வந்து கும்பிட்டு முடித்துவிட்டு திரும்பினார்.
நந்தனார் அதன் பிறகு அருகாமையிலுள்ள சிவத்தலங்களுக்குச் சென்று வணங்கி திருப்பணிகளை செய்து வந்தார். அவர் ஒருநாள் தில்லைப் பொன்னம்பல நாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்டுரூபவ் சிதம்பர நகருக்கு போக வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியில் அன்று முழுவதும் நினைப்பில் கண்ணுறங்காமல் விழித்திருந்தார்.
பொழுது புலர்ந்தும் நந்தனாருக்கு நினைப்பு அகலவில்லை. தில்லையை நினைத்து மனமுருகிரூபவ் “அந்தோ! தில்லைக்கு நான் சென்றாலும் கோயிலுக்குள்ளே சென்று சிதம்பரநாதரின் ஆனந்த கூத்தை காணும்பேறு எனது குலத்திற்கில்லையே?” எனவும்ரூபவ் “எம்பெருமானின் திருவருள்தானே இதுவும்!” எனவும் நினைத்து அங்கு செல்லும் முயற்சியை கைவிட்டார். இருந்தாலும் சிதம்பர நாதரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலும் அதிகரித்ததால்ரூபவ் “நாளைப் போவேன்!” என முடிவு செய்வார். ஒவ்வொரு நாளும் இப்படி “நாளைக்குப் போவேன்”ரூபவ் “நாளைக்குப் போவேன்” என எண்ணி பல நாட்கள் கழித்தார். அவரை அதனால் எல்லோரும் “திருநாளைப் போவார்” என்று அழைத்தார்கள்.
இப்படி பலநாட்கள் கழிந்தது. ஒருநாள் ஆதனூரிலிருந்து புறப்பட்டு தில்லை நோக்கிச் சென்றடைந்தார். அவர் சிதம்பர நகரின் எல்லையைக் கண்டதும் கீழே விழுந்து வணங்கி அந்தணர்கள் வளர்க்கும் யாகசாலைகளில் ஓம புகை பெருகி வருவதையும்ரூபவ் வேதம் ஓதும் இடங்களும் மடங்களும் நெருங்கியிருப்பதையும் பிறவற்றையும் கண்டுரூபவ் தமது குலத்தின் குறைப்பாட்டை நினைத்துரூபவ் அவர் கோயிலினுள் நுழைய முடியாமல் அவரது மனம் அதிர்ந்து நகருக்குள் நுழைவதற்கே அஞ்சி அஞ்சித் திருவெல்லையிலேயே நின்றுவிட்டார். “இந்த எல்லையிலுள்ள யாகசாலைகள்ரூபவ் வேத பாடசாலைகள்ரூபவ் திருமடங்கள் எல்லாவற்றையும் கடந்து சென்றால்ரூபவ் ஒரு கோட்டை ஊரைச் சுற்றி மதில் சூழ்ந்திருப்பதுபோல் தென்படுமாம்! குன்றுகள்போல் அக்கோட்டையின் திருவாசலுக்குள் புகுந்தால் பெரும் பெரும் மாளிகைகள் இருக்குமாம்! ஆகுதிகள் பொருந்திய மூவாயிரம் வேதிகைகள் அங்கெல்லாம் இருக்குமாம்! இப்படியெல்லாம் சொல்கிறார்களே! அப்படி இருக்கும்போது அத்திருநகருக்குள் நான் எப்படி புகுவேன்?” என்று நந்தனார் அஞ்சி அந்நகரின் மதிற்புறத்தின் மீதே உள்ளம் உருக கையெடுத்துக் கும்பிட்டு இரவு பகலாக திருவெல்லையை வலம் செய்து சுற்றி கொண்டிருந்தார்.
அவரது வருத்தத்தை போக்குவதற்காக அவர் கனவில் நடராஜ பெருமான் வந்துரூபவ் “நீ இந்தப் பிறவி ஒழிய தீயினில் மூழ்கி தில்லைவாழ் அந்தண வேதியர்களுடன் நம்மை வந்தடைவாயாக!” என உணர்த்தி அருளினார். அதுபோலவே அந்தணர்கள் ஒவ்வொருவரது கனவிலும் சென்று தீயமைத்து கொடுக்குமாறு கூறினார்.
அவர்கள் அனைவரும் பரிவு பெருக திருநாளைப் போவாரிடம் சென்றுரூபவ் “ஐயரே! அம்பலத்தில் ஆடும் ஆண்டவன் கட்டளைப்படி இங்கே வந்தோம்! நெருப்புமூட்டி எரிதலை உமக்கு அமைத்து தரப்போகிறோம்” என்று விளம்பினார்கள். நந்தனார் அதைக் கேட்டுரூபவ் “அடியேன் உய்ந்தேன்!” என கூறி அவர்களை தொழுதவுடன் மறையவர்களும் தீ மூட்டினார்கள். நந்தனார் தெற்கு மதிற்புறத்து திருவாயிலை அடைந்து அங்கு மூட்டப்பட்டிருந்த தீயை வலம் வந்து கும்பிட்டுரூபவ் தமது கையை கூப்பி மூட்ப்பட்டிருந்த தீயில் இறங்கினார். அதில் சாதிப் பொய்மையோடு அவருடைய மாயப் பொய்யுடலின் திருவுருவமும் ஒழிந்தது.
நந்தனார் மார்பில் பூணூலும் சடை முடியும் உள்ள புண்ணிய முனிவர் பெருமானாக புது வடிவம் பெற்று சிவ ஒளியுடன் தீயினின்றும் எழுந்தார். அவ்விதம் அவர் எழுந்தபோதுரூபவ் அந்தணப் பிருமன் செந்தாமரை மலரில் தோன்றியதுபோல தோற்றமளித்தார். தேவதுந்துபிகள் ஆகாயத்தில் முழங்கின. தேவர்கள் வானத்தில் மகிழ்ந்து ஆரவாரம் செய்து கற்பக மரங்களின் தெய்வீக மலர்களைப் பனி மழைப் போல பொழிந்தார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனாரை கைக்கூப்பி வணங்கினர்.
கூத்தப் பெருமானின் எல்லையை திருநாளைப்போவார் தில்லைவாழ் அந்தணர்களுடன் தெற்குத் திருக்கோபுரத்தைக் கண்டு தொழுது இறைஞ்சிய வண்ணம் விரைந்து சென்று பொன்னம்பலத்தினுள் புகுந்து எல்லையை அடைந்த பிறகு அவரை யாரும் காணவில்லை….
தில்லைவாழ் அந்தணர்கள் அதிசயித்துப் போனார்கள். அரும்பெரும் முனிவர்கள் துதித்தனர். ஆனந்த மயமான நடராஜப் பெருமான் தம்மை வந்தடைந்த திருநாளைப் போவாரின் வினைமாசினை அறுத்து தமது மலரடிகளைத் தொழுது கொண்டிருக்கும்படி பேரின்ப நிலையை நந்தனாருக்கு தந்தருளினார்.