சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் அழகிய நகரில் ஏயர்கோக்குடி என்ற புகழ் வாய்ந்த குடியினர் வாழ்ந்து வந்தனர். சோழ மன்னர்களின் சேனாதிபதிகளாக வேளாண்மையில் சிறந்தவர்களான ஏயர்கோக்குடியினர் இடம்பெற்றனர். கலிக்காமர் என்றொருவர் இத்தகைய பெருமை வாய்ந்த குடியிலே வாழ்ந்து வந்தார். சிவபக்தரான அவர் பொங்கும் அன்போடு சிவனடியார்களின் திருவடிகளை வணங்கி அவர்களுக்கு பணிகளை செய்து சிறந்து வாழ்ந்தார். திருப்புன்கூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானிற்கு அனேகத் திருப்பணிகளைச் செய்துரூபவ் “உண்மையான செல்வம் என்பது திருநீற்றை விரும்பும் சிவபெருமானின் திருவடியே” என ஏயர்கோன் கலிக்காமர் கருதி இன்பமாக இறைவனைத் துதித்து வந்தார்.
நங்கைபரவையாரிடம் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானையே தூதனுப்பிய செய்தியை ஏயர்கோன் கலிக்காமர் கேள்விபட்டார். அவர் சுந்தரமூர்த்தி நாயனாரை “யார்தான் இச்செயலை செய்வார்?” என இகழ்ந்து குறை கூறினார். அதனால் கலிக்காமர் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி கொண்டிருந்த கருத்தை திருத்தும் பொருட்டுரூபவ் இனி சிவபெருமான் செய்த அருட்செயலின் வரலாற்றை காண்போம்.
அச்சமின்றி சிறிதும் மனம் நடுங்காமல் நம்பியாரூயஅரரான சுந்தரர்ரூபவ் தம்பிரானாரான சிவபெருமானையே ஒரு பெண்ணிடத்தில் தூதுவிட்டார் என்ற செய்தியை திருப்பெரு மங்கலத்திலிருந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் கேட்டு மனம் வெம்பி அதிசயித்தார். யார் இத்தகைய செய்கையை செய்வார்? என சுந்தரமூர்த்தி நாயனாரை அவர் குறைக் கூறிக் கொண்டே இருந்தார். அடியான் ஆண்டவனையே தூதனுப்புவதோ? ஓர் அடியான் சிவலோக நாயகனையே ஏவும் காரியம் மிகவும் நன்று! இச்செயலுக்கு தூண்டத் துணிந்த ஒருவனும் திருத்தொண்டனா? ஆண்டவனை கேவலம் ஒரு பெண்ணின் பொருட்டாக தூது விடுவது? என்ன பாவம்! என் ஆவி பொறுக்க முடியாத இந்தப் பிழையை என் செவியுறக் கேட்டும் மாயவில்லையே! நானும் பேயேன் ஆனேன்! பெண்ணொருத்தி புலவியைத் தீர்த்து அவளிடம் செல்ல வேண்டும் என்கிற காதலால் ஓர் அடியான் ஏவிவிட ஆண்டவன் தனது திருவடிகள் நோகத் தெருவில் நடந்தாராமே? ஓரிரவு முழுவதும் திருவாரூயஅர் வீதியில் போவதும் வருவதுமாக அடியானுக்காக ஐயன் தூதனாக உழன்றானாமே! என்ன இது கொடுமை?” என்பார்.
“ஆண்டவன்தான் அரியும்; பிரம்மாவும் அகில தேவர்களும் அறியவொண்ணாத தம்முடைய அடியார்களுக்கு ஆற்றாராகிப் பெண்ணொருத்தியிடம் தூது போக இசைந்தாலும் அவரை அடியான் ஒருவன் தூதுக்கு ஏவலாகுமோ? அத்தகைய வன் தொண்டனை எந்நாளில் நான் என் கண் முன்னால் காண்பேனோ? ஆளுடைய பரமசிவனை ஆரணங்கு ஒருத்தியின் மீதுள்ள ஆசையின் காரணத்திற்காக அர்த்த ராத்திரியில் தூதுபோகும்படி ஏவி விட்டுக் காத்திருந்த அந்த தொண்டனை எனது கண்முன் வரக் காண்பேனாகில் என்னதான் விளையுமோ?” இப்படியெல்லாம் கலிக்காம நாயனார் மனங்குமுறி சுந்தரர் மீது வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் கலிக்காம நாயனாரின் கோபத்தைப் பற்றி கேள்விப்பட்டார். தான் செய்தது பிழைதான் என சுந்தரர் உண்மையிலேயே உடன்படுவாராகிரூபவ் அதற்குத் தீர்வுகாண வேண்டிரூபவ் சிவபிரானிடம் நாள்தோறும் சென்றுரூபவ் முறையிட்டு வந்தார். சிறந்த சிவனடியார்களான அவர்கள் இருவரையும் சிவபெருமான் ஒருமைபடுத்த திருவுள்ளம் கொண்டார். எனவே ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடம் உடலை வாட்டிக் கொடுமை புரியும் “சூலை நோயிலை” அவர்கள் இருவரும் நட்பு பூண்டு ஒன்று கூடும் தன்மையை அருள் செய்வதற்காக ஏவி விட்டார். இந்த சூலை நோயானது நெருப்பில் காய்ச்சிய வேல் குடைவதைப் போல்ரூபவ் கலிக்காம நாயனாரைப் பற்றி முடுக்கிக் குடைந்தது.
கலிக்காமர் அந்த சூலைநோயின் வேதனையை தாங்க முடியாமல்ரூபவ் தம் மனத்தாலும் வாக்காலும் சிவபிரானின் பொன்னடிகளை போற்றினார். சிவபெருமான் அப்போதுரூபவ் கலிக்காமர் முன்வந்து தோன்றிரூபவ் “உன்னை வாட்டும் இந்த சூலை நோயானது சுந்தரன் தரத்தாலன்றி வேறு எந்த வழியாலும் தீராது!” என கூறினார். அதைக் கேட்டு ஏயர்கோன் கலிக்காமர் “எம்பெருமானே! என் பாட்டனும்ரூபவ் என் தந்தையும்ரூபவ் முப்பாட்டனும் எமது கூட்டம் முழுவதும் காக்கும் நீரேரூபவ் எமது இறைவன் என்று வழி வழியாக வழியடிமைத் தொண்டு செய்யும் மரபிலே தோன்றியவன் நான்! இந்த சூலை நோயானது அப்படிப்பட்ட என்னை வருத்துகிறது.
நீர் புதிதாக வம்பென ஆண்டு கொண்ட ஓர் அடியானோ வந்து தீர்ப்பவன்? அவன் வந்து தீர்ப்பதைக் காட்டிலும் இந்த நோய் தீராமலேயே என்னை வாட்டி வருத்துவதே நன்று! இடபக் கொடியுடைய பெருமானே! உமது பெருமையை யாவரே அறிந்தவர்? வன்றொண்டனுக்கோ ஆகின்ற உறுதியைச் செய்தீர்!” என கூறி வருந்தினார். அப்போதே சிவபெருமான் மறைந்து விட்டார்.
சிவபெருமான் அதன் பிறகுரூபவ் வன்றொண்டரான சுந்தரரிடம் சென்றுரூபவ் “நம் ஏவலாலே இன்று ஏயர்கோன் சூலை நோயால் வருந்துகிறான். நீ சென்றுரூபவ் அந்த நோயைத் தீர்ப்பாயாக!” என கூறி மறைந்தார்.
மிகவும் மகிழ்ந்த நம்பியாரூயஅரர்ரூபவ் ஏயர்கோனது நட்பைக் கருதும் கண்ணியமான மனத்துடன் சிவபெருமானின் திருவடிகளை வணங்கிரூபவ் கலிக்காம நாயனாரின் சூலைநோயைத் தீர்ப்பதற்காக தாம் வரும் செய்தியினை ஆள் மூலம் சொல்லியனுப்பி விட்டுத் தாமும் திருவாரூயஅரில் இருந்து விரைந்து புறப்பட்டு கலிக்காமரின் ஊரை நோக்கிச் சென்றார். கலிக்காமரோரூபவ் தமக்கு வந்த சூலைநோயானது இறைவரின் அருளினாலேரூபவ் இறைவன் அதன் மேல் மொழிந்தருளியதைக் கேட்ட துன்பம் தரும் மொழியும்ரூபவ் தம்மை மிகவும் வேதனை செய்வது போதாதென்று அதன் மேலும் வன்றொண்டரது வரவைப் பற்றிக் கேள்விபட்டதும்ரூபவ் “இங்கு எம்பிரானைத் தூதனாக ஏவிய நம்பியாரூயஅரன் வந்து என் நோயைத் தீர்ப்பானாகில் குற்றம் வந்து சேருமேரூபவ் நான் அப்போது என்ன செய்வேன்? இந்தப் பாதகச் சூலைநோயானது என்னைப் பற்றிக் கொண்டு நீங்காமல் வாட்டுவதால் அந்த ஆரூயஅரன் வந்து தீர்ப்பதற்கு முன் இச்சூலை நோய் தங்குதற்கு இடமாகவுள்ள என் வயிற்றினோடும் கிழித்து அழித்து விடுவேன்” என துணிந்துரூபவ் தம் வயிற்றினை தமது உடைவாளை எடுத்து தமக்குத்தாமே கிழித்துக் கொண்டார். உடனேரூபவ் அவரது உயிருடனே அவரைப் பற்றியிருந்த சூலைநோயும் அப்பொழுதே தீர்ந்தது!
அதைக் கண்டு கலிக்காமரது தேவியாரும் தம் கணவரோடு உயிர்துறந்துரூபவ் தானும் அவருடன் போவதையே விரும்பிரூபவ் அதற்குரியவற்றைச் செய்யலானார். அப்போதுரூபவ் “நம்பியாரூயஅரர் வருகிறார்” என்று பரிஜனங்களில் சிலர் முன்னால்; ஓடிவந்து கூறினார்கள். அந்த அம்மையார் உடனேரூபவ் அங்கு அழுது கொண்டிருந்தவர்களை பார்த்துரூபவ் “ஒருவரும் இங்கு அழாதீர்கள்!” என சொல்லி தன் கணவரின் தற்கொலையை மறைத்தார். பின்பு காவலர்களை பார்த்துரூபவ் இங்கு சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளும்போது திருமனையை அலங்கரித்து எதிர்கொள்ளுங்கள்” என கட்டளையிட்டார். அம்மையாரின் கட்டளைக்கேற்ப அந்த வீட்டின் காவலர்கள் வாசல்களிலெல்லாம் விளக்குகளையும்ரூபவ் நிறைகுடங்களையும் வைத்து மலர் மாலைகளைத் தொங்கவிட்டு நற்சிந்தையோடு நம்பியாரூயஅரரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கினார்கள். அவர்களுக்கு ஆளுடைய நம்பிகள் புன்சிரிப்பு முகம் காட்டிரூபவ் மாளிகையினுள்ளே விருப்பமுடன் வந்தார். மனை ஆட்கள் அப்பொழுது நம்பியாரூயஅரரை ஒரு மலர்த்தவிசின்மீது அமரச் செய்துரூபவ் அர்ச்சனை எல்லாம் சம்பிரதாய முறைப்படி செய்யரூபவ் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்பு அவர்களை நோக்கி நம்பியாரூயஅரர்ரூபவ் “கலிக்காமருக்கு இப்பொழுது துன்பம் செய்யும் சூலை நோயை நீக்கிரூபவ் அவருடனிப்பதற்கு காலம் தாழ்ப்பது குறித்து நாம் மிகவும் வருந்துகின்றேன்” என கூறினார். அதற்குள் கலிக்காமரின் மனைவியாரின் ஏவுதல்படி அவரது வீட்டு வேலைக்காரர்கள்ரூபவ் “இங்கு கெடுதி ஒன்றுமில்லை! கலிக்காமர் உள்ளே பள்ளி கொள்கின்றார்!” என்று கூறினார்கள். சுந்தரர் அதைக் கேட்டதும்ரூபவ் “அவருக்குத் தீங்கில்லை என்றாலும் என்மனம் இன்னமும் தெளிவடையவில்லை. ஆகையால் அவரை நான் காண வேண்டும்” என்றார். அதையே மேலும் மேலும் வந்றொண்டர் வற்புறுத்தினார். ஆகையால் வேறு வழியில்லாமல் ஏவலாளரும்ரூபவ் நம்பியாரூயஅரரை உள்ளே அழைத்துச் சென்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரைக் காட்டினார்கள். உடலில் மிகவும் குருதி வடிய வயிறு அறுப்புண்டு குடல் சொரிந்துரூபவ் நம்பியாரூயஅரர் உயிர் நீங்கிக் கிடந்த கலிக்காமரைக் கண்டதும்ரூபவ் “நிகழ்ந்தவாறு நன்று! இவ்வாறே இவர்முன் நானும் உயிர் துறப்பேன்!” எனக் கூறித் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்து குற்றுடைவாளைத் தம் கையில் எடுத்தார்.
அப்போதுரூபவ் ஏயர்கோன் கலிக்காம நாயனார் சிவபெருமானின் திருவருளால் மீண்டும் உயிர்பெற்று உய்ந்துரூபவ் “நண்பரே! அந்தோ கெட்டேன்!” என விரைந்தெழுந்து வன்தொண்டரின் கையிலிருந்த வாளைப் பிடித்துக் கொண்டார்.வன்தொண்டர் உடனே பணிந்து கீழே விழுந்து கலிக்காமரை வணங்கினார். கலிக்காமரும் அவரைக் கழலடிகளில் விழுந்து வணங்கினார். உலகத்தார் இந்த அற்புதத்தைக் கண்டு போற்றினார்கள். மலர்மாரி தேவர்கள் பொழிந்தார்கள். நாயனார்கள் எழுந்து ஒருவரையொருவது தழுவிக் கொண்டார்கள். அதன் பின்பு இருவரும் இடைவிடாத நட்பினால் பெருமகிழ்ச்சி கொண்டுரூபவ் “திருப்புன்கூர்” சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து துதித்தார்கள். தம்பிரானின் திருவருட் பெருமையை சுந்தரமூர்த்தி நாயனார் நினைத்து “அந்தணாளன்” என தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
இப்படி சிலநாள் கழிந்த பின்னர் நம்பியாரூயஅரர்ரூபவ் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருவாரூயஅர் சென்றார். அங்கு இருவரும்ரூபவ் பூங்கோயிலில் குடிகொண்ட தியாகேசரை வணங்கினர். சிலநாட்கள் ஏயர்கோன் திருவாரூயஅரில் தங்கியிருந்தார். பின்பு நம்பியாரூயஅரரிடம் விடைபெற்றுரூபவ் தம் ஊருக்கு மீண்டும் சென்று அங்கு தமக்குரிய பல திருத்தொண்டுகளைப் புரிந்து வாழ்ந்துவிட்டுரூபவ் காலமாகிச் சிவபெருமானின் திருவடி நிழலையடைந்தார்.