திருவிளையாடல் புராணம்

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்

முனிவரின் சாபத்தினால் பன்றிக் குட்டிகளாக பிறந்த பன்னிருவரும் வலிமையுடன் வளர்ந்து வந்தனர். அவர்களின் பசியை தீர்ப்பதற்காக ஈசன் பன்றி வடிவத்தை எடுத்ததை அறிந்த கண்ணியம்மை இறைவனிடம், மிக மட்டமான பன்றியின் உருவத்தை எடுத்திரே என கேட்க, ஈசனோ நான் வேற்றுமையை துறந்தவன். எல்லா உயிர்களின் மேல் அன்புக் கொண்ட நான் அவைகளின் துன்ப வேளையிலும், அவைகளுடன் பக்க பலமாக இருக்கிறேன். எனவே அந்தந்த மிருகங்களின் உருவங்களை எடுத்து அவைகளை காத்து வருகின்றேன் எனக் கூறினார்.

முனிவரின் சாபத்தினால் பன்றிகளான இவர்களை காத்து பசியை போக்கவே யான் இப்படி மாறினேன். அனைத்து உயிர்களையும் காத்து அவர்களை வழிநடத்துவதும் நானே என்றவர், கொம்பன் பன்றியையும், அதன் துணை பன்றியையும் கொன்ற பாண்டியனின் கனவில் தோன்றி, உன்னால் கொல்லப்பட்ட பன்றியின் பன்னிரண்டு குட்டியும் தற்போது மானுடனாகி பன்றி மலைக்குகையில் உள்ளன. அவைகளை எடுத்து நீ உன் மந்திரிகளாக ஆக்கிக் கொண்டால் உன் செல்வம் மேலும் பெருகும் நல்ல ஆட்சி நடைபெறும் எனக் கூறினார்.

சிவபெருமானின் உத்தரவின் படி தன் அமைச்சர்களை பன்றி மலைக்கு அனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் வந்ததும் அவர்கள் தங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு மந்திரி பதவியும் வழங்கினார்.

கிடைத்த பதவியை கொண்டு தங்கள் பணிகளை செவ்வனே செய்து வந்தனர். அவர்களின் பணிவை பார்த்த மன்னர் அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து அழகு பார்த்தார்.

மன்னரின் மறைவிற்கு பிறகு அவரது மகன் சுகுணன் அரச பதவியை அடைந்து அனைத்தையும் கவனித்து சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தான். பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக மாற்றியதே ஈசனின் 46 - ஆம் திருவிளையாடல்.

இறைவனின் 46 - ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குவர்.

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
கால் மாறியாடல்
View Details
அங்கம் வெட்டுதல்
View Details