பாண்டிய நாட்டின் மதுரைத் திருநகரில் வணிகர் குலத்தில் சீரும் செல்வமும் உடைய பழங்குடியினர் செய்த தவத்தின் பயனாக மூர்த்தியார் என்பவர் தோன்றினார். சிவபக்தியில் சிறந்தவரான அவர் எப்பற்றுமற்ற சிவபெருமான் திருவடிகளே மெய்ப் பற்றெனப் பற்றிக் கொண்டு அதிலேயே விடாத விருப்பம் உடையவராக அவர் விளங்கினார்.
நாள்தோறும் அவர் திருவாலவாயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு அணிவித்து மகிழ்வுறும் திருத்தொண்டுகளை செய்து வந்தார். அந்தத் திருப்பணிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் தட்டுப்பாடு வராமல் கண்ணுங்கருத்துமாய் மூர்த்தியார் இருந்து வந்தார்.
அந்த காலத்தில்ரூபவ் தன் வலிமையால் கர்நாடக தேசத்து வடுகச் சாதியைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மண்ணாசை கொண்டுரூபவ் குதிரைப்படைரூபவ் யானைப்படைரூபவ் கருவிப்படைரூபவ் வீரப்படை முதலானவற்றை எல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்தான். மண் புதையும்படியான அளவிற்குப் பாண்டிய நாட்டின் பெரும்படையைப் பரப்பினான். போர்க்களத்திலே செந்தமிழ்நாட்டுப் பாண்டிய மன்னனது வீரம் சிந்திமாளும்படி அவன் முரட்டுப் போர்புரிந்து வாகை சூடிரூபவ் வெற்றி வீரனாக பாண்டிய நாட்டின் ஆட்சியைக் கவர்ந்து கொண்டான். பின்புரூபவ் அந்த கர்நாடக மன்னன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டைக் காவல்புரிந்து வந்தான்.
அந்த வடுக வேந்தன் திருநீற்றுச் சார்புடைய சைவன் கிடையாது. சமண மதத்தைப் பின்பற்றி சிவமதத்தில் சிந்தை செலுத்தாமல் இருப்பான். அது மட்டுமல்லாமல்ரூபவ் அக்கொடியவன் தன் முன்வினைப்பயனால் சிவனடியார்களைத் துன்புறுத்தியும் வந்தான்.
திருவாலவாய் சொக்கலிங்கப் பெருமானுக்குத் திருக்கோயிலிலே திருத்தொண்டு புரிந்துவரும் மூர்த்தியாரையும் ஏளனம் செய்திட அக்கல் நெஞ்சக் கயவன் விரும்பி எண்ணிலாத கொடுமைகள் பல செய்தான். மூர்த்தியார் அவ்விடையூறுகளை எல்லாம் பொருட்படுத்தமால்ரூபவ் சிவபெருமானுக்குக் கோயிலிலே சந்தனக் காப்பு இடும் திருப்பணியை வழுவாமல் செய்துவந்தார். கொடுங்கோல் வேந்தன் அதைக்கண்டு பொறுக்காமல் மூர்த்தியாருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு அனைத்துவிதமான தடைகளையும் செய்துவிட்டான். மனம் வருந்திய மூர்த்திநாயனார்ரூபவ் “எப்போது இக்கொடுங்கோல் புரியும் மாபாதகன் மாய்ந்திடுவான்? இந்த நாடு எப்போது திருநீற்றின் சைவ நெறியைத் தாங்கும் நல்ல அரசனை பெறுவது?” என மூர்த்திநாயனார் எண்ணி எண்ணி ஏங்கினார். சந்தனக் கட்டைக்காக ஏக்கத்தோடு பகல் முழுவதும் தேடித் திரிந்தார். எங்குமே நல்ல சந்தனக் கட்டை கிடைக்கவில்லை!
என்ன மூர்த்தியார் செய்வார்? அவர் சிந்தை சரிந்திடத் தலைக் குனிந்தபடியே திருவாலவாய்த் திருக்கோயிலுக்குத் திரும்பிவந்துரூபவ் சொக்கலிங்கப் பெருமானைத் துதித்தார். “இறைவனது மெய்ப்பூச்சுக்கு இன்று தேய்த்துக் கொடுக்கச் சநதனக் கட்டைக்கு முடடு நேர்ந்தால் என்ன? ஒரு முட்டும் அதைத் தேய்க்கும் என் கைக்கு நேரவில்லையே?” என கருதி தமது முழங்கையை சந்தனம் உறைக்கும் ஒரு வட்டமான கருங்கல்லில் வைத்துத் தேய்த்தார். வெள்ளம்போல முழங்கை தேய்ந்து தேய்ந்து இரத்தம் பாய்ந்தது. தசையும் தோலும் எலும்பும் தேய்ந்து வெளிப்பட்டன. கடைசியில் எலும்புத் துவாரங்களும் திறந்து முளை ஒழுகி வெளியே வந்தது. சொக்கநாதப் பெருமானுக்கு அதைக் கண்டதும் பொறுக்கவில்லை!
“ஐயனே! இந்தச் செயலை மெய்யன்பின் துணிவால் செய்யாதே! கொடும் தீங்கை உனக்கு விளைவித்த கொடுங்கோலனின் அரசு முழுமையும் நீயே நாளை கைக்கொண்டுரூபவ் முன்பு அவனால் விளைந்த தீமைகளை எல்லாம் நீக்கிரூபவ் உனது திருப்பணியாகிய சந்தனக் காப்பணியை செய்துரூபவ் நமது சிவலோகத்தை முடிவில் அடைவாயாக!” என திருவாக்கு அசரீரியாக எழுந்தது.
மூர்த்தியார் அதைக் கேட்டதும் அஞ்சியெழுந்துரூபவ் தனது கையைத் தேய்ப்பதை நிறுத்திக்கொண்டார். தேய்த்ததால் புண்பட்டு ஊறுபாடடைந்த அவரது கையும் ஊறு நீங்கிரூபவ் இரத்த நாற்றம் நீங்கிரூபவ் அழகொளி முன்புபோல் வீசியது. சுவமணம் கமழும் திருமேனியுடன் மூர்த்தியார் திகழ்ந்தார்.
அன்றிரவுரூபவ் வடுகக் கர்நாடக மன்னன் சமணமதச் சார்புடையவனாகப் போர்வெறி பிடித்து திடீரென இறந்து கொடுநரகத்தில் போய் விழுந்தான். தீமையே புரியும் அம்மூர்க்கன் மடிந்தொழிந்ததும் அவனது மனைவிகளும் சுற்றத்தினரும் அழுது புலம்பி வாட்டமுற்றனர்.
அந்தக் கொடியவனைப் போன்ற இருட்டுபொழுதும் நீங்கிப் பொழுது புலர்ந்தது. கீழ்த்திசையில் கதிரவன் எழுந்தான். அமைச்சர் முதலியோர் அப்பொழுதுரூபவ் அரசனுக்குரிய ரூடவ்மக்கிரியைகளைச் செய்தார்கள். மக்கட்பேறு எதுவும் மாண்டுபோன மன்னனுக்கு இல்லாததால்ரூபவ் “யாரைக் கொண்டு இனி நாட்டை அரசாள்வது?” என்று ஆலோசனைகளை அவர்கள் நடத்தினார்கள். “நல்ல குடிமக்களும் உணவுப் பொருட்களும் இருந்தாலும் வேந்தனின் காவல் இல்லாமல் வையகம் வாழாதுரூபவ் உயிர்களை காத்தருளும் மன்னன் இல்லாத மண்ணுலகம் இன்னுயிர் இல்லாத வெறும் உடல் கூட்டுக்கு இணையாகும்! ஆகவே நாட்டுக்கொரு காவலனைக் காலதாமதமின்றி தேர்ந்தெடுத்தாக வேண்டும்!” என கூறினார்கள். ஒரு யானையை முடிவில் கண்கட்டிவிடுதல் வேண்டும் என்றும் எவரை அந்த யானை எடுத்துக் கொண்டு வருகிறதோரூபவ் அவரே அரசராதல் வேண்டும் என்றும் அமைச்சர்கள் தீர்மானித்தார்கள். அங்ஙனமே முறைப்படி பட்டத்து யானைக்கு பூஜைக் கிரியைகள் நடத்திரூபவ் “இந்த நாட்டை நீ ஆளுவதற்குவல்ல ஓர் ஏந்தலை எடுத்துக்கொண்டு வருக!” என அவர்கள் சொல்லிரூபவ் ஒரு வஸ்திரத்தினால் யானையின் கண்களை கட்டி வெளியே அனுப்பினார்கள்.
புழுதிகள் மேலே பறக்கும் மதுரை மாநகரத்து வீதிகளில் அந்தப் பட்டத்து யானை சுற்றித் திரிந்துவிட்டு திருவாலவாயின் திருக்கோபுரத்திற்கு முன்னே விரைந்து போயிற்று. மூர்த்தியார் முதல்நாள் இரவில் நிகழ்ந்த செய்தியை அறிந்துரூபவ் “இந்நாட்டை ஆளும் செயலை எம்பெருமானின் திருவருள் இதுவெனில் அடியேன் வையம் தாங்கி பூண்பேன்!” என நினைத்துக் கொண்டுரூபவ் உள்ளத் தளர்வு நீங்கி சிவபெருமானின் திருக்கோயிலின் ஒருபுறத்தில் நின்று கொண்டிருந்தார்.
விரைந்து பட்டத்து யானை நடந்துச் சென்றுரூபவ் மூர்த்தி வள்ளலார் இருந்த இடத்தை உலகத்தார் அடைந்துரூபவ் அவர்முன் தாழ்ந்துரூபவ் தமது துதிக்கையியால் அவரை தூக்கியெடுத்துத் தன் பிடரியின்மீது வைத்துக் கொண்டது. அமைச்சர்கள் அனைவரும் அதைக் கண்டு வியப்புற்றுரூபவ் “ஒரு சிவனடியாரே உலகத் துன்பங்கள் கெட அரசராகக் கிடைத்தார்!” என உவகையுற்று மூர்த்தியாரின் திருவடிகளில் வணங்கி எழுந்தார்கள். ஊர்மக்கள் அனைவரும் அப்போது கடலலைபோல் ஆரவாரஞ் செய்தனர். பேரிகைகள் அதிர்ந்தன.
தாரைகள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. பல்லியங்கள் எங்கெங்கும் இயம்பின. வாழ்த்தொலிகள் பொங்கின. பட்டத்து யானை மூர்த்தி நாயனாரை சுமந்து கொண்டு சென்று அலங்கரிக்கப்பட்ட முடிசூட்டும் மண்டபத்தில் சேர்த்தது.
யானைமீதிருந்த மூர்த்திநாயனாரை மலர் மாலைகளும் மணிமாலைகளும் சூழ்ந்த மண்டபத்தில் அமைச்சர்கள் கீழே இறக்கிரூபவ் அரசராக நாயனாரையே கொண்டு சிங்காதனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். ஓமக் குண்டத்தை மூர்த்தியார் இருந்த திசையில் இட்டு நெருப்பை அதில் வளர்த்தார்கள். நன்னீரை மங்கல நூல் சுற்றிய பொற்கலசங்களிலும் குடங்களிலும் நிரப்பினார்கள். மங்கலக் கிரியைகள் இவ்வாறு முடிசூட்டு விழாவிற்கு நிகழ்த்தலானார்கள். அப்போது சிவமயமான மூர்த்தி நாயனார் அமைச்சர்களை நோக்கிரூபவ் “நான் இந்த அரசாட்சியை முந்திய சமணம் மறைந்துரூபவ் சைவம் ஓங்கினால்தான் ஏற்று நாடாள்வேன்!” என்றார்.
அமைச்சர்களும் வேதாகமங்களைக் கற்றிந்த பெரியோர்களும் அதைக் கேட்டதும் அவரை வணங்கிரூபவ் “நீர் எவ்விதமாக கட்டளையிடுகிறீரோ நாங்கள் அவ்விதமே செய்கிறோம்!” என்றார்கள்.
மூர்த்தி நாயனாரும் அதன் பிறகுரூபவ் “இந்த அரசாட்சியை நான் ஏற்பேனாகில் என்ககு விபூதியே அபிN~கப் பொருளாகவும் சிவனடியார்களின் அடையாளமாகிய உருத்திராட்சமே எனக்கு அரசியல் ஆபரணமாகவும்ரூபவ் ஜடை முடியே கிரீடமாகவும் இருத்தல் வேண்டும்!” என்றார்.
கல்வியில் சிறந்த அமைச்சர்களும் பெரியோர்களும் “நல்லது வேந்தே… நாட்டைக் காத்தருளும்…” என அவருடைய சொல்லுக்கு உடன்பட்டார்கள். மூர்த்தி நாயனார் அரசராக மங்கலவோசையும் மறை முழக்கமும் வாழ்த்தொலிகளும் முழங்க முடிசூட்டிக் கொண்டார்.
பின்பு மூர்த்தி நாயனார் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு முடிசூட்டிய மண்டபத்திலிருந்து புறப்பட்டுச் சென்று சொக்கலிங்கப் பெருமானை வாழ்த்தி வணங்கினார். அதற்கு பிறகு மதுரை மாநகரை அவர் பட்டத்து யானை மீதேறி வீதிகளின் வழியாக வலம்வந்தார். பிறகுரூபவ் அவர் யானையிலிருந்து கீழே இறங்கி அரண்மனையை அடைந்து பிரகாசமான ஆட்சி மன்றத்தினுள் புகுந்தார். அங்குள்ள பொன்சிம்மாசனத்தில் ஏறிரூபவ் வெண்சாமரங்களால் காற்று வீசப்படும் வெண்கொற்றக் குடையின்கீழ் அமர்ந்து அரச கொலுவீற்றிருந்தார்.
மூர்த்தியாரின் குறிப்பறிந்து நீதி அமைச்சர்களெல்லாம் நடந்தார்கள்.சமணர்களின் கட்டுப்பாடுகள் நீங்கின. நாட்டில் திருவெண்ணீறு அணியும் நல்லொழுக்கம் பரவியது. உலகெங்கும் சைவ சமயம் நிலைப்பெற்றுச் செழித்து நிரம்பி உயர்ந்தது. மூர்த்திநாயனார் பாவங்கள் மாறி பிறவித் துன்பத்தை நீக்கவல்ல திருநீறுரூபவ் உத்திராட்சம்ரூபவ் சடைமுடி என்னும் மும்மையினால் உலகாண்டார்.
புலனடக்கத்தில் மூர்த்தி நாயனார் உறுதிகொண்டுரூபவ் பிரம்மச்சாரியாக விளங்கினார். அவர் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும்ரூபவ் சமணர் வேற்றரசர் என்ற புறப்பகையையும் வென்றொழித்தார். நல்வழியில் உயிர்களுக்கு இடரானவற்றையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் காத்து ஆஞ்ஞா சக்கரத்தை நடத்தினார். மூர்த்தியார் வேற்றரசர்கள் பாதம் போற்றரூபவ் உலகத் துன்பங்கள் நீங்க அரசாண்டார். பேரரசராக அவர் திகழ்ந்த போதிலும்ரூபவ் தமது திருத்தொண்டில் மாறுதல் இல்லாமல் சிவபெருமானுக்குரிய திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்துரூபவ் இறைவனது திருவடி நிழலை இறுதியில் அடைந்தார்.