திருவிளையாடல் புராணம்

சோழனது படையை முறியடித்தல்

பாண்டிய மன்னன் சோழ மன்னனுடன் போரிடுவதற்கு தேவையான படைகளையும் உருவாக்கவில்லை, ஆயுதங்களையும் உருவாக்கவில்லை. விக்கிரம சோழன், நரேஷன், சூரன் போன்றவர்களை அழைத்துக் கொண்டுவைகைக் கரைக்குச் சென்று அங்கு குளக்கரைகளை உடைத்து சேதப்படுத்தினான். மாடுகளையும் பிடித்து தன் கட்டுக்குள் வைத்திருந்தான். சோழ மன்னனின் இச்செயலால் பாண்டிய மன்னனுக்கு பயம் வரத் தொடங்கியது.இதனால் மனம் நொந்த பாண்டிய மன்னன் சுந்தர மூர்த்தி ஆலயத்திற்கு சென்று, சுந்தர மூர்த்தியே! வாசுகியை நாணாகவும், சூரிய சந்திரனை தேர் சக்கரமாகவும் உடையவனே, வேதங்கள் நான்கையும் குதிரைகளாகவும், சரஸ்வதி ஒலிக்கும் மணிகளாகவும் கொண்டு முப்புரத்தை எரிக்கப் புறப்பட்டவரே! என இறைவனின் புகழை பாடி விழுந்து வேண்டினான்.

அப்போது ஒரு அசரீரிஎதற்கும் பயப்படாமல் உன் பகைவனுடன் போரிடு. உனக்கு நான் துணையாக இருக்கிறேன் எனக் கூறியது. இதைக் கேட்டு மகிழ்ந்து போன மன்னன் மகிழ்ச்சி திளைக்க போருக்கு தயாராகினான்.போருக்கு தயாரான பாண்டிய மன்னன் இறைவனை வேண்டிக் கொண்டு அடுத்தநாள் போருக்கு சென்று பகைவர்களை தாக்க ஆரம்பித்தான். சோழ மன்னனின் படைகள் சிறிது சிறிதாக அழியத் தொடங்கினர். பின் இறைவன் அட்டாள மூர்த்தியாக உருவெடுத்து குதிரை மேல் வந்து போரிட ஆரம்பித்தார். 

இறைவர் விட்ட அம்பை எடுத்து பார்த்தான் சோழ மன்னன். அவர் விட்ட அம்பில் ஈசனின் பெயர் பொறியப்பட்டிருப்பதை பார்த்து பயம் கொண்டான். சோழ மன்னன் தன் படையினரை அழைத்து இந்த அம்பை விட்டவன் முன்பு பாண்டிய நாட்டை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜசுந்தர பாண்டியன். அவன் நம்முடன் போர் புரிய இங்கே வந்திருக்கிறான். எனவே அனைவரும் போர் புரிவதை நிறுத்திவிட்டு நாடு திரும்புங்கள் என உத்தரவிட்டான். மன்னனின் சொல்லை கேட்காத சில வீரர்கள் போரிட்டு மாண்டனர். மன்னன் மற்ற படையினருடன் தன் நாட்டை நோக்கி ஓடினான்.

மன்னன் புறமுதுகுக் காட்டி ஓடியதை அறிந்த பாண்டிய மன்னன் வியப்பில் ஆழ்ந்தான். இறைவனும் மன்னனை வாழ்த்தி மறைந்தார். தன்னையும் தன் படையையும் காத்த இறைவனுக்கு மன்னன் பொன், முத்துக்களைக் கொண்டு அலங்கரித்து இறைவனை வணங்கி மகிழ்ந்தான். பாண்டிய மன்னனுக்கு துணையாக வந்து போரிட்டதே இறைவனின் 50 - ஆம் திருவிளையாடல். ஈசனின் 50 - ஆம் திருவிளையாடலைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கடன் தொல்லை, துன்பங்கள் நீங்கி இன்பமான வாழ்க்கையை வாழ்வர்.

மேலும்

கௌரியின் துயர் தீர்த்தல்
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details