அகத்தியர் கற்றுக் கொடுத்த இலக்கணத்தை நக்கீரர் கற்று அதை மற்ற புலவர்களுக்கும் போதிக்க ஆரம்பித்தார். அனைவரும் இலக்கணத்தை கற்று தங்கள் பணியில் பல நூல்களை எழுதி குவித்தனர். பாடல்களை எழுதி குவித்தவர்கள் எங்கள் நூல்களே சிறந்ததே என ஒவ்வொருவரும் பொறாமைக் கொள்ள ஆரம்பித்தனர். இதனால் அனைவர்க்கும் இடையில் சண்டை வர தொடங்கியது.
இதனால் அனைவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் நடந்தவத்தைக் கூறி முறையிட்டனர். அப்போது ஒரு அசரீரி தோன்றி இந்த ஊரிலே தனபதி என்ற வணிகனுக்கு அவன் மனைவியும் உள்ளனர். அவர்கள் சிவபக்தி உடையவர்கள். அவர்களுக்கு ருத்திரசர்மன் என்ற மகன் உள்ளான். வாய் பேச முடியாத அவன் முருகனின் அம்சமாக கருதப்படுகிறான். அவனிடம் சென்று நடந்தவற்றை கூறினால் அவனே நூல்களின் ஏற்றதாழ்வுகளை பற்றி தெளிவாக விளக்குவான்எனக் கூற, புலவர்கள் அசரீரியிடம் ஊமை சிறுவன் எப்படி நுல்களில் ஏற்றதாழ்வுகளை பற்றி கூறுவான்? என வினவினர். அதற்கு அசரீரி வடிவில் வந்த ஈசன் அந்த சிறுவன் யாருடைய நூல்களை படித்து கண்ணீர் விடுகிறானோ அவர்களுடைய நூல்களே சிறந்தது எனக் கூறி மறைந்தது. இறைவன் கூறிய படியே புலவர்கள் அந்த ஊமை சிறுவனை அழைத்து வந்து சங்கப் பலகையில் அமர வைத்து ஒவ்வொரு நூல்களாக படிக்கக் கொடுத்தனர்.
ஒவ்வொரு நூல்களாக படிக்க ஆரம்பித்தான் சிறுவன். கபிலர், பாணர், நக்கீரர் இயற்றிய நூல்களை படிக்க படிக்க சிறுவனின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. இதனால் அனைவரும் அவர்களின் நூல்களே சிறந்தது என மனதார ஏற்றுக் கொண்டனர். ஊமை சிறுவனின் மூலமாக நூல்களின் ஏற்றதாழ்வுகளை பற்றி கண்டறிந்ததே ஈசனின் 55 - ஆம் திருவிளையாடல்.
இறைவனின் 55 - ஆம் திருவிளையாடலைக் கேட்பவர்களும், படிப்பவர்களும் கல்வியிலும், கலைகளிலும் மேன்மை அடைவர்.