நாயன்மார்கள்

ஏனாதிநாத நாயனார்

சோழ வளநாட்டில் செழுமையான வயல்கள் சூழ்ந்துள்ள பழைய ஊர்களில் எயினனூர்(கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் ஆறு மைல் தொலைவில் உள்ளது) என்பதும் ஒன்று. ரூடவ்ழக்குலச் சான்றார் குலத்தில் ஏனாதிநாதர் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் திருநீற்றுத் தொண்டில் ரூடவ்டுபட்டு சிவபெருமானையும் சிவனடியார்களையும் வழிபட்டு வந்தார். அந்நன்மை வழியில் நிற்கும் நலத்தில் என்றும் குன்றாதவாறு விளங்கி வந்தார். அவருடைய தொழில் என்னவென்றால் அரச குடும்பத்தினருக்கு வாள் வித்தை பயிற்றுவிப்பதே… அவர் வாள் வித்தையில் தலைசிறந்து விளங்கி அதன் மூலம் கிடைக்கும் பொருளையெல்லாம் நாள்தோறும் சிவனடியார்களுக்கு பெருகும் விருப்போடு கொடுத்துதவுவதற்கே பயன்படுத்தி வந்தார்.

அவரது நல்லொழுக்கத்தையும் திருத்தொண்டையும் கண்டு பகைவர்கள் கூட அவரைப் போற்றி வந்தார்கள். அதிசூரன் என்னும் மற்றொரு வாள் வீரனும் ஏனாதிநாதர் இயல்பாக வாழ்ந்து வரும் காலத்தில் இருந்தான். ஏனாதிநாதருக்கு தொழில் உரிமைத் தாயபாகம் பெற்ற பங்காளி மரபினன்தான் அதிசூரன். அவனும் வாட்பயிற்சி ஆசிரியராக இருந்தமையால்ரூபவ் தன்னைவிட பெரியவன் யாருமில்லை என்ற கர்வத்துடன் இருந்து வந்தான். ஆனால் அவன் தொழிலில் வருமானம் ஏனாதிநாதரைவிட குறைவாகவே கிடைத்தது. அதனால் ஏனாதிநாதர்மீது பொறாமை கொண்டான். பொறாமையினால் ஏனாதிநாதரை எதிர்த்து ஊர் மக்களறிய வாட்போர் புரியவும் துணிந்தான்.

அவன் ஒருநாள் தோள் வலிமை மிகுந்த உறவினர்களையும் கொலைத் தொழிலில் வல்லவர்களான போர் மல்லர்களையும் தன் மாணாக்கர்களையும் அழைத்துக் கொண்டுரூபவ் நெடுநாள் பகையோடு ஏனாதிநாதரின் வீட்டை அடைந்தான். ஏனாதிநாதரை போருக்கு அழைத்தான்.

அதைக் கேட்ட ஏனாதிநாதர்ரூபவ் “போருக்கு அழைப்பவன் யார்?” என்று ஆண் சிங்கத்தைபோல் கர்ஜித்து எழுந்து கச்சை கட்டிரூபவ் காலில் வீரக்கழலும் கட்டிரூபவ் வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டுரூபவ் போர்க்களம் பூண்டு வெளியே வந்ததும் அனைவரும் அவரைப் பார்த்து திகைத்தார்கள். ஏனாதிநாதரிடம் வாள்பயிற்சி பெற்ற வீரக் காளையரும் மறப்படைச் சுற்றத்தினரும் அவருடைய போர்க்கோலத்தைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்துரூபவ் அப்பெரும் போர் வீரரின் இரண்டு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டார்கள்.

அதிசூரன் ஏனாதிநாதரை நோக்கிரூபவ் “நாம் இருவரும் சமீபத்திலுள்ள மேற்றிசை வெளியிடத்தில் (ஒரு பெரிய திடல்) நம் படைகளோடு அணிவகுத்துரூபவ் நமது தாயபாக உரிமைக்காகப் போர் புரிவோம். ஆந்தப் போரிலே வீழ்ச்சியடையாதவர்கள்தான் வாள் பயிற்றுவிக்கும் தொழில் உரிமைக்கு உரியவர் என்பதை முடிவு செய்வோம்!” என கூறினான்.

ஏனாதிநாதர்ரூபவ் உன்னுடைய விருப்பம் அதுவானால் நானும் தயார் என கூறி போருக்களத்தில் எதிரெதிரே சந்தித்து போர்புரிய தொடங்கினர். வாள் வீரர் வாள்வீரரோடும்ரூபவ் வேல் வீரர் வேல் வீரரோடும்ரூபவ் வில்லாளிகள் வில்லாளர்களோடும் தம் உயிரைத் துச்சமாக மதித்து நாகசர்ப்பங்கள் சீறுவதுபோல் சீறிப் போர் புரிந்தார்கள். அந்தப் போரில் இருதரப்பிலும் வீரமிக்க படைஞர்கள் கடும் போர் புரிந்து எண்ணிறந்தோர் மடிந்தார்கள்.

இதையெல்லாம் கண்ட ஏனாதிநாதர் கோபம் கொண்டுரூபவ் போர் முனையில் இறந்தவர்கள்போக எஞ்சி இருந்தவர்களை தாண்டி தனது வாளால் அனைவரையும் வெட்டி வீசினார். அத்தகைய நிலைமை அறிந்த அதிசூரன் பொங்கியெழுந்து மின்னொளி வாள் வீசிரூபவ் நேரே எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாமல் தோற்று போனான்.

தோற்றுப்போன அதிசூரன் தனது வீட்டில் விரிக்காமல் கூட தோல்வியை எண்ணி இரவு முழுவதும் புரண்டலானார். “ஏனாதிநாதரை நேரடியாக வெற்றிபெறாவிட்டாலும் வஞ்சகம் செய்தாவது வெற்றி பெற வேண்டும்” என நினைத்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் ஏனாதிநாதருக்கு அதிசூரன்ரூபவ் “நாட்டாரை கொல்லாமல் நாம் இருவர் மட்டுமே தனி வாட்போர் புரிந்து வாட்தொழிலின் உரிமையை நிலைநாட்டுவோம்! அதற்காக போரிடத் தனியே வருக!” என்று செய்தியனுப்பினான்.

அதைக் கேட்டதும் ஏனாதிநாதர் அதிசூரனின் செய்திக்கு ஒப்புக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வாளும் கேடயமும் ஏந்திக் கொண்டு சென்றார். நெற்றியில் வெண்திருநீறு பூசிய சிவனடியார்களுக்கு என்றுமே ஏனாதிநாதர் தீங்கிழைக்கமாட்டான் என்பதை அறிந்த அதிசூரன்ரூபவ் என்றுமே திருநீறு பூசாத அவன் தன் நெற்றியிலும்ரூபவ் உடம்பிலும் திருவெண்ணீற்றை அள்ளி நிறையப் பூசிக்கொண்டான். அங்கே தன் இரைக்குத் தக்கதொரு பிராணி கிடைக்கும் வரை காத்திருக்கும் சிங்கத்தைப்போல் ஏனாதிநாதர் காத்திருந்தார். வஞ்சக அதிசூரன் நெற்றியையும் கேடயத்தால் மறைத்துக் கொண்ட வஞ்சக அதிசூரன் நாயனாருக்கு எதிரே சென்று வாட்போர் புரியலானான்.

பாய்ந்து செல்லும் காளையைப் போல ஏனாதிநாதர் அவனை நெருங்கிச் சென்றுரூபவ் அவனைக் கொல்லும் வகை தெரிந்துரூபவ் அவனைத் தாக்குவதற்கு முனைந்தார். ஏனாதிநாதரின் வாள் தன்னை கொல்ல துணிந்ததைக் கண்ட அதிசூரன் கேடயத்தை விளக்கிக் கொண்டான். அவனது நெற்றியில் சிவனடியார்களின் சின்னமான திருவெண்ணீறு பூசப்பட்டிருப்பதை ஏனாதிநாதர் கண்டார். அவர் கண்டதுமேரூபவ் “ஆரூபவ் கெட்டேன்! இவர் இதற்குமுன் இவரது நெற்றியிலே காணாத வெண்திருநீற்றின் பொலிவை இன்று கண்டேன்! இனிமேல் வேறென்ன உண்டு? இவர் என் சிவபிரானின் சீரடியார் ஆகிவிட்டார். என்னைக் கொல்ல விரும்பியே இவர் வந்தார் என்றால் இவர் கொள்கை நிறைவேறும் வழியிலே நிற்பேன்!” என்று தீர்மானித்து தமது வாளையும் கேடயத்தையும் விட்டெறியக் கருதினார்.

ஆனால்ரூபவ் “நிராயுதபாணியான என்னைக் கொன்றார் என்ற பழிச்சொல்லானது அந்த சிவனடியாருக்கு வராதிருக்க வேண்டுமே!” என்று நினைத்துரூபவ் வாளையும் கேடயத்தையும் தாங்கிரூபவ் அதிசூரனின் முன்பு போர் புரிவதுபோல நின்றார். ஆனால் அதிசூரனோ ஏனாதிநாதரை அவனுடைய எண்ணம்போலவே வெட்டி சாய்த்தார். 

திருநீறு அணிந்த சிவனடியார்களிடம் ஏனாதிநாதர் கொண்டிருந்த பேரன்பைக் கண்ட சிவபெருமான்ரூபவ் செஞ்சடை மின்னலிட வெளிபட்டுரூபவ் ஏனாதிநாதருக்குக் காட்சியளித்தார். பற்றிலாப் பகைவனின் கை வாளால் தம்முடைய உலகப் பாசத்தைப் பற்றற அறுத்துக் கொண்ட ஏனாதி நாத நாயனார் இறைவனின் திருவருளைப் பெற்றுவிட்டார். சிவபெருமான் ஏனாதிநாதரை நோக்கிரூபவ் “நீ நம்மைவிட்டு என்றென்றும் பிரியாத பெரு வாழ்வைப் பெறுவாயாக!” என்று கூறியருளி விட்டுரூபவ்  பொன்னம்பலத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

மேலும்

திருநாளைப் போவார் நாயனார்
View Details
மூர்த்தி நாயனார்
View Details
மூர்க்க நாயனார்
View Details