புலிக்கொடியை இமயமலையில் நாட்டி புதுவழி அமைத்த கரிகாற்சோழன் முதல் அநபாயச் சோழன் வரை முடிசூட்டும் மரபிற்குரிய தலைநகரங்களில் கருவூரும் ஒன்றாகும். அந்த நகர் கொங்கு நாட்டிலுள்ள மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருஆனிலை என்னும் சிவபிரானின் திருக்கோயிலல் கருவூரில் உண்டு. சிவனடியார்கள் அங்குள்;ள இறைவனை வழிபடுவதையே தொழிலாகக் கொண்டு வழிபடுவார்கள். எறிபத்த நாயனார் அத்தகைய சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதில் ரூடவ்டுபட்டிருந்தார். எறிபத்த நாயனார் அப்படிப்பட்ட சிவனடியார்களுக்கு துன்பம் எந்த வகையில் வந்தாலும் அவற்றை வீழ்த்தி பரமசிவனின் மழுவாயுதத்தைப் போன்ற ஒரு பரசுவைத் தம் கையில் எப்போதும் வைத்திருப்பார்.
இப்படி எறிபத்த நாயனார் திருத்தொண்டு செய்து கொண்டிருக்கும் நாட்களில் சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் ஒருவர் திருஆனிலை கோயிலில் உள்ள சிவபிரானிடம் அன்பு கொண்டு தினமும் வைகறையில் எழுந்து நீராடிவிட்டு துணியால் தன் வாயைக் கட்டிக்கொண்டு நந்தவனத்தில் மலர்களையும் அதனோடு திருப்பள்ளி தாமங்களையும் கொய்த்துக் கொண்டு பூக்கூடையை நிரப்பி மனதில் சிவநேசம் தவிர வேறெந்த மாசுவுமில்லாமல் அவற்றை மாலையாக சிவபெருமானுக்கு தினமும் பூஜிப்பார்.
ஒருநாள் சிவகாமியாண்டார் பூஜைக்காக மலர்களைக் கொய்த்துக் கொண்டு குறித்த வேளைக்குள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வேகவேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அதே நேரத்தில் கருவூரின் மற்றொருபுறம் புகழ்ச்சோழ மன்னரின் பட்டவர்த்தனம் என்னும் முரட்டு யானையானது ஆம்பிராவதி ஆற்றில் நீராடிவிட்டு மங்கல அலங்காரங்கள் செய்யப்பட்டுரூபவ் வீதி வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த யானை போர் முனையில் எதிரியை முட்டி தள்ளும் பலம் வாய்ந்தது. நீராடிய கலைப்பினால் மதம் பொழிய வேக வேகமாக வீதியில் நடந்து வந்ததை பார்த்த மக்கள் பயந்து அதற்கு வழி விட்டு ஓடினர். அதை வழிநடத்தும் பாகனால் அந்த யானையை கட்டுப்படுத்த முடியாமல் மதத்தால் ஒரு தெருவில் பாகனோடு முட்டிப் பாய்ந்தது.
சிவகாமியாண்டார் அந்த சமயத்தில் பூக்குடலையைத் தம் கையில் இருந்த தண்டில் தொங்கவிட்டுக் கொண்டு அந்த வீதியின் வழியாக வந்து கொண்டிருந்தார். அந்த மதம் பிடித்த யானை சிவகாமியாண்டார் வைத்திருந்த பூக்கூடையை பற்றி இழுத்து பூக்கள் அனைத்தும் சிதறியது. பாகர் சண்டமாருதத்தைக் கட்டிச் செலுத்துபவர்கள்போல் அதை வேகமாக ஓட்டிக் கொண்டே அகன்று போனார்கள். சினம் கொண்ட சிவகாமியாண்டார் அந்த மதம் பிடித்த யானையை அடிப்பதற்காக தம் கையில் இருந்த கோலினை எடுத்துக் கொண்டு பின்தொடர்ந்து ஓடினார். யானை வேகமாக சென்றதால் அவர் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையிலே கைகளால் அடித்து எழுந்து நின்று சொல்ல முடியாத துயரப் பெருக்கால் மிகவும் கோபித்துரூபவ் “சிவதா! சிவதா!” என்று புலம்பலானார். “மதயானையின் தோலுரித்துப் போர்த்திய பெருமானேரூபவ் சிவதா! எளியவாக்கு வலிமையாம் இறைவனே! சிவதா! அன்புடை அடியார்களுக்கு அறிவேரூபவ் சிவதா! சிந்தை தெளிந்தவர்களுக்குப் பேரமுதேரூபவ் சிவதா! கங்கையும் பிறையும் அணியும் உன் சடைமீது ஏறி அமரவேண்டிய நறுமண மலர்களை இந்த யானை பறித்துத் தரையிலே சிந்தலாமா? சிவதா! மாறுபட நினைத்தவரின் திரிபுரம் வெந்தவிய சீறும் சிலையாய் நின்றவனேரூபவ் சிவதா! தஞ்சமெனச் சரண்புகுந்த மார்க்கண்டேயரின் நெஞ்சுத்துயர் நீங்கிட எமனையும் எட்டி உதைத்த செஞ்சேவடியோனேரூபவ் சிவதா! சிவதா! திருமாலும் அறியாத திருவடிகளைச் சேவித்துத் திருப்பணி புரியும் தொண்டர்களில் நானும் ஒருவன் இல்லையோ?” என்று ஓலமிட்டு அழுதார்.
எறிபத்த நாயனார் இப்படி ஓலமிடும் சிவகாமியாண்டாரிடம் நடந்ததை கேட்டுத் தெரிந்து கொண்டு சினத்தால் தன்னுடைய மழுவாயுதத்தை எடுத்துக்கொண்டு வந்தார். சிவகாமியாண்டாரை வணங்கிரூபவ் “இந்த கொடும் துன்பத்தை உமக்கு இழைத்த அந்த யானை எங்கே சென்றது?” என கேட்டார். சிவகாமியாண்டார் விம்மியபடிரூபவ் “என் கையிலிருந்து எம் இறைவனுக்கு சாத்தும் பூவை பறித்து மண்மீது சிந்திவிட்டு அந்த யானை உயிர் தப்பி இந்தத் தெருவின் வழியாகத்தான் சென்றது!” என்றார்.
“அது இனிமேல் உயிர் தப்பிப் பிழைப்பதெங்கே?” என்று எறிபத்த நாயனார் சினம் கொண்டு தனது மழுவாயுதத்தை எடுத்துக் கொண்டு அந்த யானை சென்ற வழியில் பின்தொடர்ந்து சிங்கம் போல அதன் எதிரில் நின்றார். மதம் பொருந்திய யானை சினத்தால் அவரை எதிர்த்து போரிட்டது. எதற்கும் அஞ்சாமல் எறிபத்த நாயனார் தனது மழுவாயுதத்தை எடுத்து யானையின் தும்பிக்கை வெட்டினார். தும்பிக்கை வெட்டுபட்டதும் யானை கடல் முழங்குவதைப் போல கதறி விழுந்துரூபவ் கருமலைபோல் தரையிலே புரண்டு மடிந்தது.
பிறகு யானைக்குப் பாதகாவலாக வந்த குத்துக் கோற்காரர்கள் மூவரையும் யானைப் பாகர் இருவரையும் ஆக ஐவரையும் எறிபத்த நாயனார் எதிர்த்து மழுவாயுதத்தால் அவர்களை கொன்று மலைகள்போல் தோள்கள் பூரிக்க வெற்றி வீரராய் நிமிர்ந்து நின்றார்.
அங்கு வெட்டுபட்டு மடிந்தவர்களை தவிர மற்றவர்கள் பயந்து அரண்மனை வாசலில் இருக்கும் வாயிற்காவலர்களிடம்ரூபவ் “பட்டவர்த்தனம் என்ற பட்டத்து யானை வெட்டுபட்டு மடிந்தது! பாகரில் சிலரும் கொல்லப்பட்டனர்” என்ற செய்தியை விரைந்து மன்னரிடம் சொல்வீராக!... என்றனர். விரைந்து புகழ்ச்சோழ மன்னனின் மலரடிகளை வணங்கிரூபவ் நம் பட்டத்து யானையை சிலர் கொன்று விட்டார்களாம்ரூபவ் அதனோடு பாகர் சிலரும் மடிந்தார்களாம்! என்று செய்தியை கேட்டதும் மன்னர் தம் வீரத் தோள்கள் குலுங்கரூபவ் அத்தோள்களில் அணிந்திருக்கும் மலர் மாலைகள் குலுங்கரூபவ் அந்த மாலையிலுள்ள களி வண்டுகள் கிளர்ந்தெழுந்து பொங்க அளவுகடந்த சீற்றத்துடன் துள்ளியெழுந்தார். சினத்தில் மன்னன்ரூபவ் “யார் இந்த செயலை செய்தது?” என்பதை கூட கேட்காமல் சிங்கம் போல் வெளியே பாய்ந்து சென்றார். ராஜதந்திரத் தலைவர்களான மதியமைச்சர்களும் தங்கள் அரசரின் கோபநிலையைக் கண்டு சேனைகள் பலவும் விரைந்து வந்து சேரும்படி போர்ப்பறை கொட்டச் செய்தார்கள்.
போர்ப்பறை கேட்டதும் போர் வீரர்கள் பொங்கியெழுந்து அனைத்து கருவிகளையும்ரூபவ் முப்படைகளையும் திரட்டிக் கொண்டு வானளவு கொடியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். நான்கு வகையான சேனைகளும் பரந்தெழுந்து ஊழிக்காற்றுபோல் மேன்மேலும் வந்து குவிந்தன. மன்னர் பட்டத்துயானை மடிந்து கிடக்கும் இடத்தை வந்து சேர்ந்ததும் அங்கு யாரையும் காணவில்லை. எறிபத்த நாயனார் மட்டும் மழுவாயுதத்துடன் யானையின் எதிரே வலிமையான போர் யானையைப்போல் இரண்டு கைகளும் தும்பிக்கைகள் போல் தோன்ற நிற்பதைக் கண்டான். மன்னர் அருள் நேய அடியாரான எறிபத்த நாயனார் தான் இந்த காரியத்தை செய்திருப்பார் என்பதை மனதால் கூட மன்னர் நினைத்துப் பார்க்கவில்லை!....
இடிமுழக்கம் போன்ற குரலில் புகழ்ச்சோழன்ரூபவ் “யார் இந்த யானையை கொன்றவர்?” என்று கேட்கரூபவ் அங்கிருந்த மற்ற பாகர்கள் எறிபத்த நாயனாரின் அருகில் சென்றுரூபவ் “இவர் தான் அரசே…” என்று கூறினார்கள். புகழ்ச்சோழன் மனதில்ரூபவ் எறிபத்த நாயனார் எந்த தவறும் இழைக்காமல் இப்படி செய்திருக்கமாட்டார்! யானை எதாவது தவறு செய்திருக்கும் என்று நினைத்தபடியே மன்னர் குதிரையிலிருந்து கீழே இறங்கினார். அவருக்கு அந்த மாமலை போன்ற மதயானையின் எதிரே சென்றபோது அவருக்கு ஒரு தீங்கும் நேராதிருந்ததே! அது அடியேன் முற்பிறப்பில் செய்த தவமேயாகும்! அந்த சிவநேசருக்கு கோபம் உண்டாகும்படியாகரூபவ் ஐயோரூபவ் என்ன பெரும்பிழையை அந்த யானை செய்ததோ! என்று நினைத்துப் பார்த்தான்.
பிறகு புகழ்ச்சோழன் தன்னுடைய பரிவாரங்களையெல்லாம் ஒருபுறமாக நிறுத்திவிட்டுரூபவ் எறிபத்த நாயனாரின் அருகில் சென்றுரூபவ் “அம்பலவாணரின் அன்பரே! நான் அரண்மனையில் கேள்விபட்ட செய்தி வேறொன்று! அது ஒருபுறம் இருக்கட்டும்! பட்டத்துயானை செய்த தவறை நான் அறியேன்! என்று அவரிடம் இறைஞ்சி கேட்டார்.
எறிபத்த நாயனார் சிவகாமியாண்டாருக்கு நடந்த இன்னல்களை சொல்லியவுடன்ரூபவ் மன்னன்ரூபவ் “நீர் யானையையும்ரூபவ் பாகரையும் அவர்களுடன் இருந்த பரிக்காரர்களையும் கொன்றதை நான் தவறென்று சொல்லவில்லை! அவற்றை கட்டி ஆளும் தலைவனான என்னையும் நீர் கொன்றால்தான் அது சரி!” என்று கூறினார். ஆனால் தாங்கள் வைத்திருக்கும் மங்கலகரமான மழுவாயுதத்தினால் கொல்வது முறையல்ல! அதனால் மன்னன் தன் இடையில் இருந்த உடைவாளைத் தம் கையாலே உருவி எறிபத்த நாயனாரிடம் கொடுத்து கொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
புகழ்ச்சோழன் அவ்வாறு பிராயச்சித்தம் தேட விரும்பியவராய் தம்முடைய பிரகாசமான வீரவாளை நீட்டி நிற்பதைக் கண்டதும்ரூபவ் எறிபத்த நாயனார் திகைத்து மன்னரை ஏறிட்டு நோக்கிரூபவ் “ஐயோரூபவ் கெட்டேன்! எல்லையில்லா புகழுடைய புகழ்ச் சோழனுடைய அன்பிற்கும் ஓர் எல்லையில் என்பதை இன்று கண்டேன்!” என்று நினைத்து உள்ளமெல்லாம் பூரித்தார். வேந்தர் கொடுக்கும் வாளை வாங்காவிட்டால் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்வார் என எண்ணி எறிபத்த நாயனார் அந்த வாளை பெற்றுக் கொண்டார்.
புகழ்ச்சோழ மன்னர் தலை வணங்கி நின்றுரூபவ் “இங்கு என்னை என் வாளினாலேயெ கொன்று என் பிழையைத் தீர்த்துப் பேருதவி செய்யும் பேற்றினை இச்சிவனடியாரிடம் பெற்றென்!” என்று கூறி மகிழ்ந்தார். அதைக் கண்ட எறிபத்த நாயனார் உணர்வு கலங்கிரூபவ் “மாபெரும் தவறு இழைத்துவிட்டோம்!” இப்படிப்பட்ட மன்னனின் யானையையும் பாகரையும் கொன்றது மிகப்பெரிய தவறாகும்! அதனால் முதலில் எம் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரியான செயலாகும்! என்று கூறி மன்னனின் வாளால் தமது உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார் எறிபத்த நாயனார்.
ஆனால் மன்னரோ! எறிபத்த நாயனாரின் கைகளை பிடித்துக் கொண்டார். எறிபத்த நாயனார் திமிறினார். மன்னர் அவரது கைகளை இறுக பற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட தர்மசங்கடத்தை நினைத்து நாயனார் வருந்தலானார். அப்போது சிவபெருமானின் திருவருளினால் ஓர் அசரீரிவாக்கு விண்ணில் எழும்பியது. அது பலரும் கேட்குமாறுரூபவ் “அன்பிற் சிறந்தவர்களே! உலகத்திற்கு உங்களுடைய தொண்டின் பெருமையை காட்டுவதற்காகவே சிவபூஜைக்குரிய திருமலர்களையெல்லாம் பெரும் யானை கிளர்ந்து சிந்தியது. இவையெல்லாம் தில்லைக் கூத்தரான சிவபெருமானின் திருவருளினாலேயே நிகழ்ந்தது!” என்று கூறியது.
அதே சமயம் இறந்து கிடக்கும் யானைரூபவ் பாகர் அனைவரும் உயிர் பெற்றனர். அதைக் கண்டதும் எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்வதற்காக வைத்திருந்த வாளை விட்டெறிந்துவிட்டு மன்னரின் காலில் விழுந்து வணங்கினார். பிறகு மன்னரும் எறிபத்த நாயனாரின் காலில் விழுந்து வணங்கினார். விண்ணுலகத் தேவர்கள் பனி மலர்களை வாரி வாரிரூபவ் அடைமாரி போல் அவர்கள்மீது பொழிந்தனர்.
பின்பு எறிபத்த நாயனாரும்ரூபவ் புகழ்ச்சோழனும் எழுந்து நின்றுரூபவ் வானில் எழுந்த பேரொலியைப் போற்றி வணங்கினார்கள். மண்ணில் சிந்திய மலர்கள் சிவகாமியாண்டாரிடம் மீண்டும் பூக்கூடையிலும்ரூபவ் உறங்கியெழுந்ததைப் போல பட்டத்துயானையும் நின்றது. நாலா திசையிலும் எதிரொலிக்கும்படி பெரும் முழக்கமிட்டு ஆனந்தத்தால் பொங்கியது. யானைப் பாகர்கள் மகிழ்ச்சியுடன் அந்த யானையை நடத்திக் கொண்டு வந்து அரசர் முன்பு நிறுத்தினார்கள். எறிபத்த நாயனார் அரசரை நோக்கிரூபவ் “அன்பர் பெருமானே! அடியேன் மகிழ நீங்கள் இந்த பட்டத்துயானையின் மீதேறி அரண்மனைக்குள் செல்ல வேண்டும்! என்ற நாயனாரின் அன்பு கட்டளையை ஏற்று மன்னர் தான் வந்த குதிரையிலிருந்து இறங்கி யானையில் தனது அரண்மனையை அடைந்தார்!” அந்நிலையில் அரசன் தம் உள்ளத்தில் நடராஜப் பெருமானின் திருவடிகளைத் தியானித்த வண்ணம் தம் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தார்.
சிவகாமியாண்டார் வழக்கம்போல பூக்கூடையை தம்முடைய தண்டின்மீது தொங்கவிட்டுக் கொண்டு திருஆனிலை அண்ணலாருக்கு திருத்தொண்டு புரிவதற்காக சென்றார். எறிபத்த நாயனாரோ! புகழ்ச்சோழனின் அன்பின் பெருமையை நினைத்துப் பரவசமுற்றவராக முன்போலத் திருப்பணி புரியச் சென்றார்.
எறிபத்த நாயனார் இவ்விதமாகரூபவ் சிவனடியார்களுக்கு ஆபத்து வந்த காலங்களிலெல்லாம் தாமே முன் சென்று அவற்றைப் போக்கி உதவிரூபவ் பக்தி வலிமையில் சிறந்தோங்கிரூபவ் மேன்மேலும் தொண்டு புரிந்து வந்தார். அதனால் சிவபெருமானின் திருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைமை தாங்கும் பெரும் பேறும் பெற்றார். எறிபத்த நாயனாரின் ஆண்மைச் செயலையும் தம் உடைவாளைத் தம் கையாலேயே கொடுத்துத் தம்மைக் கொல்லும்படி வேண்டிய புகழ்ச்சோழ மன்னரின் பெருமையையும்ரூபவ் சிவபெருமானால் அளவிட முடியுமேயன்றி மற்றவர்களால் அளவிட்டுக் கூற முடியுமோ?....