திருவிளையாடல் புராணம்

வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி

சம்பந்தப் பெருமான் ஓராண்டிற்குப்பின் வழியிலுள்ள ஸ்தலங்களையெல்லாம் தரிசித்துக் கொண்டு சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். திருப்புரம்பயமென்ற சிவஸ்தலம். அங்கேயே இரவாகி விட்டதால் பயணப்படவேண்டாமென தங்கினார். நடு இராத்திரி. 

 

ஐயோ என்ற அலறல். அழுகைக் குரல்கள். சம்பந்தர் சீடரை அழைத்து அழுகையின் காரணத்தை அறிந்து வரப் பணித்தார். சீடர் சென்று பார்த்து வந்து “கோவில் மண்டபத்தில் படுத்திருந்த ஒரு வாலிபன் பாம்பு கடித்து மாண்டு போனான். அது அவனோடு வந்தவரின் சோகப் புலம்பல்” என்றனர்.

 

சம்பந்தர் உடனே சீசபுரேஸ்வரர் ஆலயம் விரைந்தார். ஒரு இளம்பெண் அங்கு தள்ளி இருந்தபடி தலைவிரி கோலமாய் அலறியது பரிதாபமாயிருந்தது. அவள் அருகில் சம்பந்தர் சென்று சமாதானம் சொல்லி வரலாறு கேட்டார்.

 

அப்பெண் அதற்கு அழுகை;கிடையே “ஐயாரூபவ் எனது ஊர் காவேரிப்பட்டினம். இதோ இறந்து கிடப்பவர் எனது அத்தை மகன். இவரது ஊர் மதுரை. என் பெற்றோர் என்னை தவமிருந்து பெற்று மாண்டனர். இவருக்கென்று நான் பிறந்த போதே பேசி முடிக்கப்பட்டேன்.

 

என் பெற்றோர் திடீரென்று மரித்ததால் பங்காளிகள் இவருக்குக் கடிதமெழுதி இவரை வரவழைத்தனர். அங்கேயே மணம் புரிந்து கொள்ளும்படி அவர்கள் சொன்னதை இவர் கேட்கவில்லை. மதுரை சென்று மணப்பதாக சொல்லிவிட்டார். இப்படி இந்த வழியில் முடிவாகிவிட்டதே! தொட்டும் அழமுடியாதபடி கன்னிப் பெண்ணாக இருக்கிறேனே” என முகத்திலறைந்து கொண்டு அழுதாள்.

 

அவளது அனாதைத் தன்மைக்கு இரங்கி சம்பந்தர்ரூபவ் மிருத் யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து இறைவனை வேண்டி அவ்வாலிபன் உடலெங்கும் திருநீறு பூசரூபவ் அவன் தூங்கி விழித்தவன் போல் எழுந்திருந்தான். நஞ்சையுண்டவனைரூபவ் ந்சசரவத்தை ஆபரணமாகப் பூண்டவனை நினைத்தால் நஞ்சு என்ன செய்யும்? திருஞானசம்பந்தர் பாதங்களில் அனைவரும் விழுந்து வணங்கினர். அவ்வாலிபனை சம்பந்தர் நோக்கி அப்பெண்ணை அந்த ஸ்தலத்திலேயே திருமணம் முடிக்கும்படி ஆணையிட்டார். ‘சாட்சி வேண்டாமா?’ என்று அவன் தயங்கரூபவ் ‘இதோவிருக்கும் வன்னிமரம்ரூபவ் கிணறுரூபவ் இந்த லிங்கமே சாட்சி’ நீ செத்துப் பிழைத்தவன். இது உனக்கு மறு பிறவி. எனது வார்த்தையை மீறாதே! உனக்கு நானே மணம் முடித்து வைக்கின்றேன். தேவைபட்டால் இவைகள் சாட்சிகளாக கூப்பிட்ட இடத்திற்கு வரும்” என்று கூறி அவரே முன்னின்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். பின் சதிபதிகள்ரூபவ் அவரை வணங்கி மதுரை சென்றனர்.

 

சுற்றத்தார் அனைவரும் வணிகனின் திருமணச் செய்திக் கேட்டு மகிழ்ந்தனர். மூத்த மனைவி ஒருத்தி வணிகனுக்கு உண்டு. தீயகுணம் படைத்தவர்கள் அவளுடைய பிள்ளைகள். ஒரு நல்லபிள்ளை இளையவளுக்கும் பிறந்தான். ஒருநாள் குழந்தைகள் கூடி விளையாடுகையில் மூத்தவளின் புதல்வர்கள் இளையவனின் பிள்ளையை நன்றாக அடித்துவிட்டனர். தாயிடம் சிறுவன் ஓடிவந்து அழுதான். “உன்னை அடித்த கை ஒடிந்து விடும்” என்று கோபமாகச் சொன்னாள் மாமன்மகள்.

 இதை மூத்தவள் கேட்டுக் கொண்டிருந்துரூபவ் “குலம் கெட்ட நீ சாபமா கொடுக்கிறாய்? அவரது மாமன் மகளே நீ அல்லரூபவ் அவர் உன்னை மணந்ததற்கு யார் சாட்சி? இந்த வீட்டில் இருப்பதற்குக் கூட லாயக்கற்ற உன்னைப் பொறுத்துக் கொண்டிருக்கிற என் பிள்ளைகளையா திட்டுகிறாய்? பெற்றவர் பெயர் தெரியாத பதரே! அவர் உன்னை அக்கினி சாட்சியாய் கைபிடித்ததற்கு அத்தாட்சி என்ன” என்று பலவாறு ஏசினாள்.

 

இளையவள் மனம் நொந்து சோமசுந்தரமூர்த்தி திருக்கோயில் சென்றுரூபவ் ‘ஜம்புலிங்கநாதனே! சுந்தரலிங்க நாதனே! அர்த்த நாரீஸ்வரா? நீ ஞானப்பாலூட்டிய சம்பந்தப் பெருமான் எங்களுக்கு மணமுடித்து வைத்ததைப் பொய் என்கிறாளே! ஏன் தந்தை இதற்கா பலகாலம் உன்னை வேண்டித் தவமிருந்து என்னைப் பெற்றார்? சமைத்த பிள்ளைக் கறியை மீண்டும் மைந்தனாய் எழுப்பிய உனக்கு சாட்சிகளை இங்கு வரவழைப்பது பெரிய காரியமா? கன்றையும்ரூபவ் தேர்காலிலிட்ட மைந்தனையும் காத்து நீதிவழங்கிய தெய்வமே! இந்த அநீதியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா? மலைமகள் மணாளனே! புhவமென்னும் பஞ்சிற்கு நெருப்பானவரே! குரு பத்தினியைத் தவறாகப் பேசியவனின் அங்கம் துண்டித்தவனே! முhமனாய் வந்து வழக்குரைத்து சொத்தைக் காப்பாற்றியவரே! புhண்டியனுக்கு குறையாக்கிழி கொடுத்தவரே! வலைவீசி மீன்பிடித்து சங்குமகளை மணந்தவரே! புhணபத்திரனையும்ரூபவ் பத்திரையையும் காத்தவரே! கரிக்குருவிக்கு உபதேசம் செய்துரூபவ் நாரைக்கு மோட்சமளித்தவரே! நக்கீரரைக் காத்தவரே! நரியைப் பரியாக்கிய நமச்சிவாயமே! புpட்டுக்கு மண்சுமந்து பிரம்பால் அடிபட்ட பிட்சாடனரே! சுpரித்துப் புரமெரித்த சிதம்பரநாதா! கால்மாறி ஆடிய கைலாஸ வாஸா! ஆபிசார ஹோமம் செய்து பைசாசங்களை வரவழைத்துக் கொண்டிருந்த சமணரை வென்று சைவத்தைத் தழைக்கச் செய்ய அருள் புரிந்தவரே! என் அவலக்குரல் உமது காதில் விழ வில்லையா? ஆபயம் தந்து காத்தருளும்! அம்மையப்பா! நான் திருஞான சம்பந்தரால் மணமுடித்து வைக்கப்பட்டவள் என்பது உண்மையானால் அன்று சம்பந்தப் பெருமான் சொன்னபடி வன்னிமரமும்ரூபவ் கிணறும்ரூபவ் லிங்கமும் சாட்சிகளாக இங்கு வரவேண்டும். இல்லையேல் உமது சன்னதியிலேயே உயிர் துறப்பேன். இது திண்ணம். மூத்தவளின் சொல்லம்புகளைத் தாங்க முடியவில்லை. நான் கற்புடையவள் என்பதை நிரூயஅp;பிக்க வேண்டும்” என்று அழுதாள்.

 

சிவபெருமான் சித்தர் உருவில் லிங்கத்திலிருந்து வந்து ஆறுகால் மண்டபத்தில் இருந்து கொண்டு “பெண்ணே வருந்தாதே! நாகம் தீண்டி மடிந்த வைசியனை உயிர் பிழைக்கச் செய்த சம்பந்தர் வார்த்தை பொய்க்காது” எனக் கூறி வன்னிமரம்ரூபவ் கிணறுரூபவ் லிங்கம் மூன்றையும் வரவழைத்தார். இந்த அற்புதக் காட்சியை வைசியன் மனைவியோடு  கூட வேடிக்கை பார்க்க வந்தவர்களும்ரூபவ் ஆறுதல் கூறவந்தவர்களும்ரூபவ் ஆலயத்திற்கு சிவதரிசனம் செய்ய வந்தவர்களும் கண்டு இளையவளைக் கொண்டாடிரூபவ் மூத்தாளை இகழ்ந்தனர். வணிகன் மூத்தவளையும்ரூபவ் அவளது பிள்ளைகளையும் வேற்றூருக்கு அனுப்பிவிட்டு இளையவளோடு கூடிக் குடித்தனம் செய்தான். புத்திர பௌத்திரர்களோடுரூபவ் புகழ்ச் செல்வத்தோடு நீண்டநாள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.

 

இம்மூன்று சாட்சிகளையும் இன்றும் வடகிழக்கு மூலையில் காணலாம். வன்னிமரமும்ரூபவ் கிணறும்ரூபவ் சிவலிங்கமும் சாட்சிக்கழைத்த இந்த ரூடவ்சனது 64-ஆம் திருவிளையாடலைத் தினந்தோறும் பக்தியுடன் படிப்பவரும்ரூபவ் கேட்பவரும் பாவங்கள் கரையரூபவ் ஆரோக்கியத்துடன்ரூபவ் நீண்ட ஆயுளையும்ரூபவ் திரண்ட செல்வத்தையும். மேன்மையுற்ற கல்வியையும்ரூபவ் பெற்று முடிவில் மோட்சத்தை அடைவார் என்பது சத்தியம்.

 

முனிவர் இவ்வாறு ஆலவாயின் பெருமையையும் ரூடவ்சனது 64 திருவிளையாடல்களையும் கூறவும் ரிஷிகளெல்லாம் ஆலவாய் சென்று வைகையிலும்ரூபவ் பொற்றாமரையிலும்ரூபவ் ஏழுகடலும் சேர்ந்திருந்த குளத்திலும் நீராடி சோமசுந்தர மூர்த்தியை தரிசித்தனர்.

 

இன்றும் இந்த 64 திருவிளையாடல்களையும் சிற்பரூபவ் சித்திர வடிவில் மதுரைக் கோவிலில் காணலாம். இதைப் படிப்போருக்கு பாவங்கள் தொலைந்து நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். கிருதயுகம்ரூபவ் திரேதாயுகம்ரூபவ் துவாபரயுகம்ரூபவ் கலியுகம் என யுகத்துக்குப் 16 ஆக நான்கு யுகத்திலும் ரூடவ்சன் நடத்திய திருவிளையாடல்கள் இவை. எத்தனையோ அறிவுரைகள் இதில் அடங்கியுள்ளன. இந்தப் புராணத்தில் பக்தியும்ரூபவ்  பண்பும் செழித்தால் அதுவே நாடு செய்த புண்ணியம்.

மேலும்

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
பிட்டுக்கு மண் சுமத்தல்
View Details