சித்தர்கள்

ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர்

இவரே முக்தி நிலைகளைத் தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் தருகின்ற சித்த மாமுனி. இது மட்டுமல்லாமல் "தென்னிந்தியாவின் கயா" என போற்றப்படும் பூவாளூர் திருத்தல மகிமையை நமக்கு அளித்தவரும் இவர்தான்,

மனிதர்களுக்கு மட்டும்மல்லாமல் விலங்கினங்களுக்கும் குறிப்பாக கழுதை இனத்திற்கு அருள் பாலிக்கின்ற தியாகி இவர்.

பீகார் மாநிலத்திலுள்ள கயா திருத்தலத்தை போலவே தென்னிந்திய கயவாக விளங்குவதுதான் திருச்சி லால்குடி அருகேயுள்ள பூவாளூர் திருத்தல பல்குனி நதி தீரமாகும். இதுவே பித்ரு மோட்சத் தலமாகவும், பித்ரு தர்ப்பண, ஹோம சிரார்த்த வழிபாட்டிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கயாவிலும், பூவாளூரிலும் இருப்பது பல்குனி நதியே.

இந்த ருத்ர சித்தரே பல்குனி நதி தீரத்தின் மூலம் குறிப்பாக விலங்கினங்களுக்கு முக்தி பெரும் வழிகளை உணர்த்தியவர் ஆவார்.

கயாவில் ஸ்ரீ பல்குனி நதிக்கு பல உத்தம தெய்வீக நிலைகள் குடியிருக்க காரணமே ஸ்ரீ பல்குனி சித்தருடைய யோகத் திருப்பா வருடி சென்றதால்தான். வருடம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பித்ரு தர்ப்பண பூஜைகள், பித்ரு தர்ப்பண வழிபாடுகள், தானதர்மங்களை செய்து கர்ம வினைகளை போக்கி கொள்கின்றனர்.

இவரை நதி தேவதைகள் ஜீவன்கள் புனித நதியில் நீராடுவதால் தமக்கு ஏற்படும் பாவ சுமைகளை நீக்குவதற்கான வழிமுறைகளை கேட்டன.

இதற்கு பல்குனி சித்தர் "தென்னிந்தியாவின் ஓடும் காவேரி நதி தீரத்தில் பூவாளூர் திருத்தலத்தில் ஓடுகின்ற பல்குனி நதி, கயா திருத்தலத்திற்கு ஈடானது. எனவே அங்கு நீராடி பாவத்திற்கான பிராயச்சித்தத்தை தேட நதி தேவதைகளுக்கு சுபஹோரை, திதி, காலத்தை குறித்து தந்தார்.,

இதை கேட்டு மகிழ்ச்சியுற்ற நதி தேவதைகள் பூவாளூர் பல்குனி நதியில் நீராடி தங்களது பாவச்சுமைகளின் பாரத்திலிருந்து தங்களை விடுவித்து கொண்டனர்.

பூவாளூரிலுள்ள சிவ தளத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவைகள் தட்சிணாலயா, பித்ரு மோட்சபுரி, பித்ரு புஷ்பசுபம், பல்குனிபுரம். 

சூட்சுமமாக எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிதான் பூவாளூர் பல்குனி நதி.

தென்னிந்தியாவில் பலகோடி யுகங்களுக்கு முன் கயவாக விளங்கியது. இங்கு அமாவாசையன்று பூவாளூர் பல்குனி நதி தீரத்தில் பித்ருக்களுக்கான தர்ப்பண பூஜைகளையும், பித்ரு ஹோமங்களை நடத்துவர்.

இன்றும் முப்பது முக்கோடி தேவர்களும், தேவாதி தேவ மூர்த்திகளும் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்ந்து சூட்சும ரூபத்தில் வந்து செல்கின்றனர்.

ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர் அடிக்கடி வந்து யோகம் பயில்கின்ற இடம்தான் பூவாளூர். இங்கு கழுதை வடிவில் வரும் தேவமூர்த்திகளும் உண்டாம்! 

இந்த பல்குனி ருத்ர சித்த மாமுனி நாம் செய்யும் பரிகாரத்திற்கு சாடசியாக நின்று பித்ரு சாபங்களிருந்து நம்மை காப்பாற்றுபவர் இவர்தான்.

இன்றும் நமக்கு இத்திருத்தலத்தில் இருந்து கொண்டு சாயா யோக ககனமார்க்கமாக அருள் பாலித்து கொண்டிருப்பவர் இவரே!