சுமார் 11.2 அடி உயரமுள்ள ஸ்ரீபோடோ ஞானிதான் ஸ்ரீசனீஸ்வர பகவானின் லோகத்தில் ஞானியாக உலவுகிறார். இவர்தான் கம்யூட்டர் சம்பந்தப்பட்ட எதிர்வினைகளைத் தடுத்து நம்மைக் காக்கும் ஞானியாவார்.
சனீஸ்வர பகவானை தரிசிக்க வருகின்ற சித்புருஷர்களும்ரூபவ் ஞானியரும்ரூபவ் யோகியரும் முதலில் ஸ்ரீபோடோ ஞானியரின் வழிபாட்டு முறைகளை அறிந்த பின்பே செல்வர். அந்த லோகத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே உணர்ந்து அதற்கான பரிகாரங்களுக்கான ஸ்ரீசனீஸ்வர வழிபாட்டு முறைகளை ஸ்ரீபோடோ ஞானி எடுத்துரைக்கிறார்.
பலகோடி உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவர். பிரபஞ்சத்திற்கே ஞானமூட்டும் மகாஞானியாக பல யுகங்களாக விளங்குபவர். இவர் வழிபாடு செய்கின்ற தலங்கள் யாவும் பூலோகத்தில் பீஜாட்சர-மெய்ஞான சக்திகளைக் கொண்டதாக இருக்கும். இவையனைத்தும் நவீன கம்ப்யூட்டர் துறையுடன் தொடர்புடையவை. மாதாம்பர பீடம் என்பதே ‘அழவாநச டிழயசன’ என்பதாகும்.
தற்போது சிலிக்கான் சக்திகளைக் கொண்ட தலங்கள் நிறைய உண்டு. இன்று 0ரூபவ்1 என்ற எண்கள் கம்ப்யூட்டர் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1-க்கும்ரூபவ் 0-க்கும் உரித்தான தலங்களில் ஸ்ரீபோடோ ஞானி தினசரி பூஜைகளை நிகழ்த்தி வருகிறார்.
திருச்சி திருஎறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் திருத்தலமே இவர் கிரிவலம் வருகின்ற தலங்களுள் ஒன்றாகும். இது சிலிக்கான் சக்திகள் நிறைந்த தலமே! இச்சித்தர் தீவினைசக்திகளை அழிக்கின்ற தெய்வீக வரங்களை இங்குதான் பெற்றார்.
இவரின் யோகத்திற்கு செஞ்சுடர்த்தொடர் யோகம் என்று பெயர். செஞ்சுடர்த் தொடர்யோகம் என்பது தர்ப்பைப் பாயில் முழந்தாளிட்ட அமர்வு நிலையில் பின் குதிகால்களின் மேல் அமர்ந்து பூணுவதே!
இந்த யோகத்தில் ஞானி அமர்ந்து கண்களுக்குள் வெண்டைக்காய் விதை வடிவில் பல தியானச் சுடர்களை ஒளிரச் செய்வார். இந்த தியான சுடரொளிரூபவ் ஒரு மெல்லிழை நூலில் வெண்டைக்காய் விதைகளைக் கோர்த்துக் கட்டி ஒன்று ஒன்றாக ஒளிர்விடுவது போல் தோன்றும். இவற்றின் ஒளி பிரகாசிப்பது பகல் இரவைக் குறிப்பதாகும்.
தேவலோகத்தில் காணப்படும் பிண்டத்துழாய் மலர் தான் நாம் காணும் வெண்டை விதை.இம்மலர் நாரில் பட்டவுடனேயே தாமாகவே ஒட்டிக் கொள்ளும்ரூபவ் இதை கட்ட தேவையில்லை. உருண்டையாக வெண்டை விதைபோல் வெண்மையாகக் கொத்துக்கொத்தாக ஒன்று விட்டு ஒன்றாக பூக்கும். கலைமகளுக்கும்ரூபவ் ஸ்ரீகயக்கிரீவ மூர்த்திக்கும்ரூபவ் ஞான காரகனாகிய கேதுவிற்கும் மிகவும் பிரியமான மலர் பிண்டத்துழாய் மலர். இம்மலரை சூரிய சந்திரப் புஷ்பம் என்றும் அழைப்பார்கள்.
ஸ்ரீபோடோ ஞானி யோகத்தில் இருக்கும்போது ஒன்று விட்டு ஒன்றாக மின்பல்பு எரிவதுபோல் இம்மலர் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இந்த மலரின் தேவ சக்தியைப் பிரமாணமாகக் கொண்டு இவ்வுலகின் கம்ப்யூட்டர் துறை பிரகாசிக்கின்றது.
கம்ப்யூட்டரில் 2 மணி நேரம் தியானம் செய்து அதீத யோக சக்தி பெற்றோர் சிறிது நேரம் வைரஸ் நிறைந்த கம்ப்யூட்டரைப் பார்த்தால் போதும் அந்த வைரஸ் செயலிழந்து போய்விடும். இந்த வகையான சக்தி பெற்றோர் இன்னும் பூலோகத்தில் உள்ளனர்.
இந்த யோகத்தில் சிறந்தவர்கள்ரூபவ் கம்ப்யூட்டர் துறையில் அனைத்து விதமாமன பிரச்சனைகளையும் தீர்க்கமாக உணர்ந்தவர்கள். சித்தர்கள் தங்கள் அறைசக்தியை வெளிகாட்டாது இன்றும் நம்மிடையே வாழ்ந்து வர காரணம் தம்மை அறிந்தால் விஞ்ஞானம் தம் அறிவைக் கூறுபோட்டு விடும் என்பதற்காகவே!
சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்திரீஸ்வரர் சிவாலயம்தான் இத்தகைய யோகத்திற்கு அருள்புரியும் தலம்! ஓளவை பிராட்டி பலமுறை இத்தலத்திற்கு வந்து பல யோக சக்திகளை சிவன் அருளால் பெற்றாராம்!