சித்தர்கள்

குதம்பைச் சித்தர்

கோபாலர் தம்பதிகளுக்கு யாதவ குலத்தில் ஆடி மாதம்; விசாக நட்சத்திரத்தன்று பிறந்த ஆண் குழந்தையை பார்த்தவர்கள் கண்களை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

அந்த அருமைத் தாய் ஆண் குழந்தையை பெண் குழந்தையைப் போல் அலங்காரம் செய்தாள்! குழந்தை காதுகளில் குதம்பை முன்னும் பின்னும் ஆடுவதை பார்த்து சிரிக்கும் அழகை கண்டு உள்ளம் குளிர்ந்து போன அந்த தாய் ‘குதம்பை’ என்றே கொஞ்சுவாள்.

குதம்பையின் தினசரி நிகழ்ச்சிகள்: காலைரூபவ் மாலை இரண்டு வேலைகளிலும் கோயிலுக்குச் செல்வதுரூபவ் அங்கு நடக்கும் பூஜைகளை நன்கு கவனித்து உணர்ந்து கொள்வது.

குதம்பைக்கு பதினாறு வயதிருக்கும்போது மாதவர் ஒருவர் உண்மையை காட்டுவதற்கு அவரிடம் வந்தார்ரூபவ் அவருக்கு உபதேசம் செய்தார் அந்த மாதவர். “குருவாக வந்து எனக்கு உபதேசம் செய்த தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ” என கண் கலங்கி கேட்டார்.

“குதம்பை முற்பிறவியில் நீ உயர்வு பெறுவதற்காகத் தவம் செய்து கொண்டிருந்தாய். தவம் கை கூடுவதற்கு முன்பேரூபவ் காலதேவதை காலனை அனுப்பி விட்டாள் உனது போன பிறவியின் அந்தத் தவம்தான் என்னை இங்கு அழைத்து வந்தது. நான் சொன்னதை அனுபவத்தில் கொண்டு வா. வெற்றி பெறுவாய். திருவருள் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்று குருநாதராக வந்த சித்தர் குதம்பையை வாழ்த்தி மறைந்தார்.

குருநாதர் கூறிய சாதனைகளை யாருக்கும் தெரியாமல் தொடங்கினார். தடைகள் பல வந்தன. ஒருநாள் இரவு யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் புகுந்து அங்கிருந்த அத்திமரத்தின் பொந்தில் அமர்ந்து தவநிலைக்கு சென்றார். இன்று நாம் காணும் குதம்பைச் சித்தர் பாடல்கள் அவர் தம் அனுபவங்களை பாடல்களாக எழுதியவையே!

பெண்கள் காதில் அணியும் ஒருவகை நகையை(குதம்பை) தம் பாடல்களில் முன்னிலைப்படுத்தி இருப்பதால் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். 

குதம்பைச் சித்தர் பொடுதலை விருட்சத்தின் அடியில் மோகனத்தம்பம் என்னும் வாசியோகக் கலையைப் பயின்று தவம் புரிந்து தகுதியுள்ளோர்க்கு அந்த யோகப் பலன்களை உலகிற்கு அளிப்போர்க்கு இதனை உபதேசிக்கிறார்.

விந்திய மலை யானைகளுக்கு வருண ஜபத்தில் சிறந்தவைகளான வருண ஜப மந்திரங்களை கும்பேந்திர வாசி யோக முறையில் குதம்பைச் சித்தர் உபதேசிக்கிறார். இந்த மலையில் உள்ள யானைகள் பிளிறினால் அமிர்தம் கூடிய மழை பொழியுமாம்! ”பதினென் சித்தர்கள் ஞானக் கோவை” என்னும் நூலில் இவரது 32 பாடல்கள் உள்ளன.

பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இவரின் தத்துவப் பாடல்கள் அமைந்துள்ளன.

கொல்லா விரதம் குளிர்ரூபவ் பசி நீக்குதல்

நல்ல விரதமடி – குதம்பாய்

நல்ல விரதமடி

(குதம்பைச் சித்தர் பாடல்)

வெண் காயமுண்டுரூபவ் மிளகுண்டு சுக்குண்டு 

உண் காயம் ஏதுக்கடி? குதம்பாய்

உன் காயம் ஏதுக்கடி?

மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்போர்க்குத்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி? குதம்பாய்

தேங்காய்ப் பால் ஏதுக்கடி?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை

தேவார மேதுக்கடி – குதம்பாய்

தேவார மேதுக்கடி.

(குதம்பைச் சித்தர் பாடல்கள்)

குதம்பைச் சித்தர் சித்தி அடைந்த இடம் மாயவரத்தில் (மயிலாடுதுறை) ஆகும்.