பசுவை அடிமாடாக்கி துன்புறுத்தினால் உலகத்தில் இடையூறுகள் மட்டுமே வரும்.வான் பொய்க்கும். நீர்வளம்ரூபவ் நிலவளம் குறையும். ஆகையால் பசுதர்மமே உலகிற்கு சுபிட்சம் தரும் என்ற தெய்வீகத்தை நிலைநாட்டத் தோன்றியவரேபசுமடத்துக் கோனார்ச் சித்தர்.
திருவண்ணாமலை பகுதியில் இவர் தோன்றினார். பசுமட்ததுக் கோனார்ச் சித்தர் என்ற பெயரை எவ்வாறு பெற்றார் என்றால் பசுக்களிடம் பரிவுடன் பேசிரூபவ் இதமுடன் தடவிக் கொடுத்து நீராட்டிரூபவ் புல்லூட்டிரூபவ் பால கரந்து ஆலயத்திற்கு அளித்து கோசாலையில் பசுவளம் காத்ததால் தான்!
இவர் யோகம் செய்த இடம் புனித இடமாகி அங்கு நீரூயஅp;ற்று பெருகியது. இவரின் பாதம்பட்ட இடமெல்லாம் பயிர் செழித்தது. தொட்ட இடம் துலங்கியது. இதனை காரணம் காட்டி தங்கள் வீட்டிற்கு அழைத்தவர்களின் அழைப்பை ஏற்காமல் பசுக்களை மட்டும் பேணி காத்து வந்தார்.
சோதனை என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? சித்தர்களுக்கும் உண்டு! அதேபோல் இவருக்கும் வந்தது ஒரு சோதனை?....
இவரின் உத்தமமான பராமரிப்பினால் உலகெங்கிலும் நீர்வளம்ரூபவ் மழைவளம்ரூபவ் பயிர்வளம்ரூபவ் தானியவளம் என எல்லா வளங்களும் பெருகின.
இதனால்; தங்கள் பசுமாடங்களில் பசுக்களின் எண்ணிக்கை குறைவதை கண்டு பொறாமை கொண்டவர்கள் பசுமடத்துக் கோனார்ச் சித்தரை பற்றி அவதூறுகளை அள்ளி குவித்தனர்.
இதனை கண்டு மனம் குழைந்து தாமாகவே பசுமடத்துக் கோனார்ச் சித்தர் வெளியேறினார். இவரின் மூலமாகவே பசுதர்மம் பரவ வேண்டும் என்பது கடவுளின் சித்தம் போலும்! இதில் ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? கோசாலையை (பசுமடம்) விட்டு வெளியேறியவுடன் அனைத்து பசுக்களும் அவர் பின் சென்றன.
சித்தர் எங்கு சென்றாலும் பசுக்கள் கூடவே சென்றன. பல இடங்களில் பசுமடங்கள் பற்றி பிரச்சாரம் செய்தார். அதனால் உலகெங்கிலும் பசுமடங்கள் பெருகின. அதனை கண்டு அதிசயித்த மக்கள் அந்நாட்டு மக்களிடம் தெரிவிக்க மன்னர் சித்தரை அழைத்து வர கட்டளையிட்டார்.
சித்தரிடம் மன்னர் கேட்கும்போது அதற்கு அவர் அளித்த பதில்! “யாமறியோம் மன்னா!...ஸ்ரீவேணுகோபாலனின் வேய்ங்குழல் நாதம் இப்பசுக்களிடம்; நிறைந்திருப்பதாக உணர்கிறேன். இதற்குரிய பதிலை ஸ்ரீகிருஷ்ணனே அளித்திடுவார். அருணை (திருவண்ணாமலை) வந்து தெரிந்து காள்”….
மன்னர் சித்தரை சோதிக்க தங்களின் பசுமடத்திற்கு அழைத்து சென்றார்.பசுமடத்துக் கோனார்ச் சித்தர் திருவாயால் வேணுகானம் எழுப்பிடரூபவ் அங்கு கோசாலையிலிருந்த அனைத்து பசுக்களும் இவர்பின் மகிழ்ச்சியாக வந்து நின்றன.
இதனைகண்டு திகைத்துப் போன மன்னர் சித்தரின் திருவடிகளில் பக்தியுடன் விழுந்தார். தன்னை மன்னிக்கும்படி வேண்டி நமஸ்காரம் செய்தார். “வேந்தனே! நீர் எம்மை சோதித்ததில் தவறில்லை. ஆனால் வேய்ங்குழலோன்; வேணுகோபாலனை அல்லவா சோதித்து விட்டாய்? ஆகையால்; உன் நாட்டில் மறுபடியும் பசுவளம் பெருக உன் ஆட்சியைத் துறரூபவ் திருவண்ணாமலைக்கு சென்று ஸ்ரீவேணுகோபால சுவாமியைத் தொழுது கிரிவலம் சென்று அருணாச்சல கோசாலைப் பசுமடங்களில் 48 நாட்கள் தங்கி பசுக்களுக்கு நீராட்டிரூபவ் உணவூட்டி சாணி அள்ளி பசுவை பராமரிப்பு செய்.
அப்பொழுதுதான் பசுதர்மத்தைக் குறைத்து மதிப்பிட்ட உன் பாவம் தொலையும்” என்றார் சித்தர். மன்னரும் அவற்றை செய்து தனது பாவங்களை நீங்கப் பெற்றான். சித்தர் மீது அவதூறுகளை பரப்பிய அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சித்தரை கோசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு காலத்தில் திருவண்ணாமலையில் தற்போதைய கோசாலைரூபவ் ஆடையூர் போன்ற பகுதிகள் பல ஆயிரக்கணக்கான பசுமடங்களாக விளங்கின. அதனால் தான் இன்றும் கிரிவலம் வருபவர்கள் கோசாலை (இது அடி அண்ணாமலைக்கு முன்பாக இருக்கும் கிராமம்) பகுதியில் உள்ள மண்ணை நெற்றியில் திருநீறாக பூசி கொள்கின்றனர்.
பசுமடத்துக் கோனார்ச் சித்தர் ஸ்தூலரூபவ் சூட்சுமரூபவ் காரண காரிய வடிவங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் திருநாள் மகா சிவராத்திரியன்று! அன்றைய தினம் பசுவின் திருவடிக்குளம்புகள் பட்ட மண்ணை சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து திருநீறாக இட்டு பசு கன்றுடன் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இவற்றின் பலன்கள்: சந்தேகம் கொண்டு பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர்.சொத்துரூபவ் பதவியிழந்தோர் திரும்பப் பெறுவர். தொழில்ரூபவ் பதவி காரணமாகப் பிரிந்த பெற்றோர்கள்ரூபவ் பிள்ளைகள் மீண்டும் இல்லத்தில் இணைவர். அடிக்கடி வயிற்றுவலி உடையவர்கள் அவதி நீங்கப் பெறுவர். சந்ததி விருத்தி கிட்டும்.