பிண்ணாக்கீசர் கருத்தில் கண்ணன்ரூபவ் கண்களில் கண்ணன்ரூபவ் எழுத்தில் கண்ணன்ரூபவ் எண்ணத்தில் கண்ணன் என்ற உயர்ந்த நிலையில் வாழ்ந்தவர் ஆவார்.
பிண்ணாக்கீசர் இயேசுநாதரைப் போலவே கன்னி வயிற்றில் பிறந்தவர்.இவர் ஆலயங்களில் வளர்க்கப்பட்டதாலும் செழுமையாய் கொழுமையாய் இருந்ததாலும் இவர் நந்தீசுவரர் என அழைக்கப்பட்டார்.
பிண்ணாக்கீசருக்கு இரட்டை நாக்கு உள்ளது. அதாவது பிளவுபட்ட நாக்கு உள்ளதால் பிண்ணாக்கீசர் என்ற பெயரை பெற்றார்.
பிண்ணாக்கீசரின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது என்னவென்றால் நடுவீதியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டு வான்வெளியை நோக்கி பார்த்து தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டு இருப்பார். திடீரென “கோபாலா! கோபாலா!” என கூறுவார்.
பிண்ணாக்கீசரின் நிரந்தர இருப்பிடம் ஆத்தி மரப்பொந்து ஆயிற்று. ஆத்தி மரப்பொந்து ஒரு குடில் போன்று வளைந்து இருந்ததால் அவர் அங்கேயே அமர்ந்துரூபவ் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். பாம்பாட்டிச் சித்தர்ரூபவ் தெய்வீக உண்மைகள் பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமுடையவராக இருந்த பிண்ணாக்கீசரின் முன்பு தோன்றியவுடன் அவரை பணிவுடன் வணங்கினார்.
பாம்பாட்டிச் சித்தர் பிண்ணாக்கீசரின் கண்களில் அவருக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்தார். பிண்ணாக்கீசருக்கு யாருமில்லா இடத்தில் கண் காட்டினார் (நயன தீட்சை); கை காட்டினார் (பரிதீட்சை); கால் காட்டினார் (திருவடி தீட்சை) என்ற மூன்றையும் செய்து அருள்புரிந்துவிட்டு மறைந்தார்.
பிண்ணாக்கீசர் குருநாதர் உபதேசத்தை கடைப்பிடித்து எப்போதாவது அவருக்கு வயிறு பசித்தால் கோபாலா! கோபாலா! ஏன்று கண்ணீர் விடுவார். அப்பொழுது திடீரென்று சிலர் எதிரில் வந்து பாலும்ரூபவ் பழமும் கொடுப்பார்கள். இவற்றை சாப்பிட்டுவிட்டு அவர்களை புன்முறுவல் பூத்தபடி ஆசிர்வதிப்பார். பின்பு இவை அனைத்தும் கண்ணன் கருணை என அறிந்து கொண்டு மறுபடியும் மரப்பொந்திற்குள்ளே சென்று முடங்கிக் கொள்வார்.
பிண்ணாக்கீசர் பாம்பாட்டிச் சித்தர் கூறியபடி அவ சிந்தனை எதுவும் இல்லாமல் தவ சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்.
பிண்ணாக்கீசரின் தவசிந்தனை முதிர்ச்சியடைந்து வளர்ந்தது. அட்டமா சித்திகள் என்ற எட்டு வகையான சித்திகளை அவர் பெற்றார். பிண்ணாக்கீசரின் பாடல்கள் அனைத்தும் மிகவும் எளிமையானதாக உள்ளது.
“கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் ஞானம்மா
தெரியா அலைவாரே”
-(புண்ணாக்குச் சித்தர் பாடல்கள்)
மக்கள் மத்தியில் நம்பிக்கை உடையவராக திகழ்ந்தார். ஏனென்றால்ரூபவ் என்ன நோயாக இருந்தாலும் பிண்ணாக்கீசரிடம் மந்திரித்தால் போதும் உடனடியாக குணமாகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை. பிண்ணாக்கீசர் மக்களை மெல்ல கையால் தடவி கொடுப்பார். அவ்வாறு தடவிகொடுத்தால் நோய் மெல்ல மெல்ல இறங்குமாம்!
இவர் மண்ணை அள்ளி தருவாராம்! அது சர்க்கரையாக இனிக்குமாம்! எப்படிப்பட்ட தீராத நோயாக இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் குணமாகிவிடுமாம்! இதுபோன்ற பிண்ணாக்கீசர் கொடுத்த மண்ணால் பலருடைய நோய் குணமாகியிருக்கிறது. பின்னாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பிண்ணாக்கீசரிடமிருந்து ரசவாத இரகசியத்தையும்ரூபவ் காய கல்ப ரகசியத்தையும் தெரிந்து கொள்வதையே நோக்கமாக வைத்துக்கொண்டு பலர் புண்ணாக்கீசரிடம் சீடர்களாக சேருவதற்கு முன்வந்தனர். ஆனால் பிண்ணாக்கீசரோ யாரையும் சீடராக ஏற்றுக் கொள்ளவில்லை.
பிண்ணாக்கீசர் அவர் இருந்த மரப்பொந்தினிலேயே சிவயாகம் செய்து அவரை தரிசித்து அதனுள் ஐக்கியமாகி விட்டார். அவரிருந்த அந்த மரம் பட்டுப்போய் மீண்டும் துளிர்ந்து அவரையும் மறைத்துக் கொண்டு விட்டது.
யாருக்காவது நோய் வந்தால் அம்மரத்திற்குக் காப்புக் கட்டி பூஜை செய்து அதன் இலைரூபவ் சருகுகளைக் கசாயம் வைத்து நோய் வந்தவருக்கு கொடுத்தால் உடனே நோய் குணமாகிவிடுமாம்!
இவர் உலக மக்களுக்காக பல கருத்துக்களை சொன்னார். ஆனால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.பிண்ணாக்கீசரின் தத்துவங்கள் பாடல்களாக வெளிப்பட்டன. அவையனைத்தும் பதினெனண் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன.
போகர்ரூபவ் பிண்ணாக்கீசர் கேரளாவில் உள்ள நாங்கணாச்சேரியில்சித்தியடைந்ததாக கூறியுள்ளார்.