சித்தர்கள்

கோரக்கர்

கோரக்கரை பற்றி “போகர் 1000” என்ற நூல் இவர் கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர் எனவும்ரூபவ் வசிஷ்ட மகரிஷிக்குரூபவ் கன்னியான குறப்பெண்ணிடம் பிறந்த மகன் எனவும் கூறப்பட்டுள்ளது.

சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை

சுந்தரனார் வசிஷ்ட மகரிஷியாருக்கு

புல்லவே கானக் குற ஜாதியப்பா

புகழான கன்னியவள் பெற்ற பிள்ளை

வெல்லவே அனுலோமன் என்னலாகும்

வேதாந்த கோரக்கர் சித்து தாமும்

நல்லதொரு பிரகாசமான சித்து

நாதாந்த சித்தொளிவும் என்னலாமே.

(போகர் 1000)

கோரக்கரின் பிறப்பு குறித்து சொல்லப்படும் ஒரு கதை: ஒரு சமயத்தில் உமாதேவிக்கு சிவபெருமான் கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். தாரக மந்திரத்தை சிவபெருமான் உரைத்து கொண்டிருந்தபோது ஒரு மீனின் வயிற்றிலிருந்த மீன்குஞ்சு இதனை கேட்டு மனித உருவெடுத்தது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என பெயரிட்டுரூபவ் நீ சிறந்த சித்தராகி ஞானத்தை பரப்பும்படி அருளினார்.

சித்தரான மச்சேந்திரர் ஒரு ஊரின் வழியே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் இவரிடம் பிச்சை கேட்டாள். இவர் அந்த பெண்ணின் சோகத்திற்கு காரணம் கேட்கரூபவ் அந்த பெண்ணோ மகப்பேறின்றி தவிப்பதாக கூறினாள்.

அதற்கு மச்சேந்திரன் இரக்கம் கொண்டு கொஞ்சம் திருநீற்றை கொடுத்துரூபவ் இதனை உட்கொண்டால் உன் குறை தீரும் என கூறிவிட்டு சென்றுவிட்டார். திருநீற்றை பெற்ற அந்த பெண் இந்த செய்தியைப் பற்றி பக்கத்து வீட்டாரிடம் கூறரூபவ் அவர்களோ இவையெல்லாம் உன்னை மயக்கி அடைவதற்கான வழியாக இருக்கும். இதனை உண்ணாதே என கூறரூபவ் அந்த பெண் அதனை அடுப்பில் கொட்டிவிட்டாள்.

சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் அந்த ஊருக்கு வந்துரூபவ் தான் திருநீறு அளித்த பெண்ணை கண்டறிந்து அவர் வீட்டிருக்கு சென்று “அம்மணி….. உன் மகனை நான் பார்க்க வேண்டும்ரூபவ் அவனை அழைப்பாயாக” என்றார்.

அந்த பெண்ரூபவ் பக்கத்து வீட்டு பெண்ணின் பேச்சை கேட்டு தாம் செய்தவற்றை கூறினார். மச்சேந்திரர் மனமிறங்கி அந்த பெண்ணிடம் திருநீற்றை கொட்டிய இடத்தை கேட்டார். அந்த பெண் அடுப்பை காட்டி அந்த சாம்பல் கொட்டப்படும் இடத்தையும் காட்டினாள்.

மச்சேந்திரர் அந்த இடத்திற்கு சென்று “கோரக்கரே என அழைக்க? என்ன?” என ஒரு குரல் கேட்டது…

மச்சேந்திரர் குப்பையை அகற்றும்படி அங்கிருந்தவர்களிடம் கூறினார். திருநீறு அளித்த காலத்திலிருந்து இப்போதுவரை இருக்கும் வளர்ச்சியில் ஒரு குழந்தையை அங்கிருந்து எடுத்தனர்.

மச்சேந்திரர் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுக்கரூபவ் அந்த சிறுவன் தாயிடம் இருக்க பிடிக்காமல்; மச்சநாதரைப் பின் தொடர்ந்து குருவை மிஞ்சும் சித்தனாக உருவெடுத்தார்.

வடஇந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் வாகட சூத்திரத்தில் நந்தி தேவரைத் தமது குருவாக கொண்டார். இருந்தாலும் நம்முடைய தமிழகத்தில் சித்தர்கள் வாசம் செய்யும் சதுரகிரியை நோக்கி தனது பயனத்தை தொடங்கிரூபவ் அங்கு திருமூலர் வழி வந்த போகரைத் தோழராகக் கொண்டார் என்றும்ரூபவ் சட்டைமுனிரூபவ் கொங்கணர் ஆகியோரின்  பிரியத்திற்கு ஆளானார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோரக்கரின் குருவை(மச்சநாதர்) பிரிந்து வரதமேடு என்ற காட்டிற்குள் சென்று தவம் செய்து பல சித்திகளை அடைந்தார்.

அங்கு இவரை போலவே தவம் செய்ய வந்த பிரம்மமுனியைக் கண்டார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகினர். இருவரும் உள்ளத்தூய்மை கொண்ட துறவிகளை அடிப்பணிந்து வணங்கினர்.

இவ்வாறு பெற்ற உபதேசத்தினால் இருவருக்கும் தெய்வ சிந்தனை மேலோங்கியது. இருவரும் தங்களுக்குரிய ஆத்ம சக்திகளை வளர்த்துக் கொண்டு படைப்பு முதலான ஐந்தொழிலை செய்வதற்குரிய யாகத்தினை தொடங்கினர்.

யாகமானது மாசி மகம் பௌர்ணமியன்று தொடங்கியது. இந்த யாகம் ஐந்தொழிலையும் அடையும் தன்மை பெற்றமையால் இதனை நிறைவேற விடாமல் தடுக்க தெய்வ கணங்கள் முனைப்பாயிருந்தன.

சிவசக்தி கதிர்களில் 2 சிலிர்த்து வெளிவந்தன. இருள்மாயைரூபவ் மருள்மாயை என்ற அவை இரண்டும் அந்த யாகத்தீயில் விழுந்து மறைந்தன. அந்த கணமே யாகத்தீயில் இருந்து இரண்டு அழகான பெண்கள் வந்தனர்.

இரதியை விட அழகான இந்த இரண்டு பெண்களும் யாகசாலையை சுற்றி வரரூபவ் அதனை கண்ட பிரம்மமுனிக்கும்ரூபவ் கோரக்கருக்கும் கோபம் வந்தது. 

யாகத்தின் இடையில் புகுந்து குழப்பம் உண்டாக்கும் நீங்கள் யார்? ஏன கேட்கரூபவ் “நாங்கள் தேவலோகத்தைச் சேர்ந்த தேவக் கன்னிகள். உத்தமமான உங்களை திருமணம் செய்துகொள்வதற்காக பூலோகத்திற்கு வந்துள்ளோம். எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என கேட்டனர். 

அதே சமயத்தில் அங்கு வந்த அக்னியும்ரூபவ் வருணனும் அந்த இரண்டு பெண்களை வியந்து பார்த்தனர். ‘இவ்வளவு பேரழகு உடைய பெண்கள் தேவலோகத்தில் கூடக் கிடையாதே’ரூபவ் ‘என்ன அழகு….எப்படிப்பட்ட அழகு?’ என மோகித்து நின்றனர்.

இதனை கண்ட பிரம்மமுனிக்கும்ரூபவ் கோரக்கருக்கும் அந்த இரண்டு பெண்களின் மீது அதிகமான கோபம் உண்டானது. அதனால் பிரம்மமுனியும்ரூபவ் கோரக்கரும் கமண்டலத்தை எடுக்கரூபவ் அக்னியும் வருணனும் நடுங்கி நின்றனர். 

இருவரும் கமண்டலத்திலுள்ள நீரை அந்த இரண்டு பெண்கள் மீது தெளித்தது தான் மாயம்ரூபவ் உடனே அவ்விருவரும் இரண்டு செடிகளாக மாறினர். 

பிரம்மமுனியால் உண்டாக்கப்பட்ட செடி “பிரம்ம பத்திரம்”(புகையிலை) எனவும்ரூபவ் கோரக்கரால் உண்டாக்கப்பட்ட செடி “கோரக்கர் மூலிகை”(கஞ்சா) எனவும் பெயர் பெற்றது.

வருணனுக்கும்;ரூபவ் அக்னியுக்கும்; சாபம் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் தப்பி ஓடினர். பின் வருணனும்ரூபவ் அக்னியும் சாபத்திலிருந்து விடுபட்டாலும் அந்த இரண்டு பெண்களின் மோகத்திலிருந்து விடுபடவில்லை. இவர்கள் இரண்டு பேரும் நீரும்ரூபவ் நெருப்புமாக(வருணன்ரூபவ் அக்னி) மாறி அந்தச் செடிகளுடன் சேர்ந்தனர். புகையிலைரூபவ் கஞ்சா இரண்டுக்கும் நீரும்ரூபவ் நெருப்பும் அவசியமே!

பிரம்மமுனிரூபவ் கோரக்கர் இருவரும் தங்களுடைய தவசக்தியை இழந்தனர். இவற்றை நினைத்து அழுதபோது சிவபெருமான் தோன்றிரூபவ் “அற்புதமான யாகத்தைச் செய்தீர்கள். ஆனால் விதி இடையில் கெடுத்து விட்டது. தகுதி இல்லாத உங்கள் எண்ணத்தால்தான் அப்படி நடந்தது. இருப்பினும் நீங்கள் உழைத்த அளவிற்கு உங்களுக்குப் பலன் உண்டு. அந்தகாலத்தில் இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் சாபத்தினால் உண்டான இந்த இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழும்” என வரமளித்து மறைந்தார்.

அன்று முதலே பிரம்மமுனியும்ரூபவ் அவர்களின் சீடர்களும் புகையிலையைப் பறித்து தின்று பயனடைந்தார்கள். அதேபோலவே கோரக்கரும் அவரின் சீடர்களும் கஞ்சா இலைகளைத் தண்ணீpரில் ஊற வைத்து அந்த ஊறிய தண்ணீரைக் குடித்தனர். அவைகள் அமுதசாரமாகி ஆயுளை வளர்த்தன. இதற்கு பின்புதான் புகையிலையும்ரூபவ் கஞ்சாவும் காயகல்பமாகப் பயன்படுத்தப்பட்டன. 

“கோரக்கர் வைப்பு” என்ற வைத்திய நூல் இவர் செய்ததே! இவர் கஞ்சாவை முதல் சரக்காகக் கொண்டதால் அதற்கு ‘கோரக்கர் மூலிகை’என பெயரிடப்பட்டது. 

மீன் குஞ்சு வடிவத்தில் உள்ள மச்சேந்திரர்(கோரக்கரின் குரு) கேட்ட தாரக மந்திரமே பதினெண் சித்தர்கள் ஞானக் கோவையுள் கூறப்படுகின்ற ஞான சாரநூல் எனவும் கூறுவர்.

இதில் சரம் பார்க்கும் ஆசன விதிரூபவ் சரம் பார்க்கும் மார்க்கம்ரூபவ் போசன விதிரூபவ் கர்ப்பக் குறியின் முறைரூபவ் நாடிகளின் முறைமை போன்றவைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கோரக்கர் தனது ‘சந்திர ரேகை’ என்ற நூலில் போகரும் கோரக்கரும் ஒன்றாக சேர்ந்து நிகழ்த்திய பல சித்துகளை கூறியுள்ளார்.

கோரக்கர் அவர் அறிந்த சித்து மற்றும் ஞானங்களை எல்லாம் மறைத்து வைக்காமல் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக பாடினார். இதனை அறிந்த சித்தர்கள் பலர் தீயவர்கள் இவற்றை தவறாக பயன்படுத்திவிடுவர் என கருதி அவரிடமிருந்து அந்நூல்களை கைப்பற்றுவதற்காக வந்தனர்.

இவற்றை அறிந்த கோரக்கர் அவர்களை வருகையை சற்று தாமதிக்க வைப்பதற்காக முடிவு செய்து உடனடியாக அவர் அரிசியையும்ரூபவ் கஞ்சாவையும் சேர்த்து அரைத்து அடை சுட்டு வைத்தார். சித்தர்கள் அங்கு வந்ததும் அங்கு இங்குமாய் தேட ஆரம்பித்தபோது அடை அவர்கள் கண்ணில்பட அவற்றை உண்டு ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நூல்களை மறைத்து வைத்தார். சித்தர்கள் கண் விழித்ததும் அவரிடம் நூல்களை பெற்றுக்கொண்டு இவற்றை குகையில் பாதுகாப்பாக வைக்க போவதாக கூறி எடுத்துச் சென்றனர்.

இந்த காரணத்தால் கோரக்கரின் பல நூல்கள் நமக்கு கிடைக்காமல் போயிற்று. அவைகள்:

கோரக்கர் காளமேகம்ரூபவ் கோரக்கர் கபாடப் பூட்டுரூபவ் கோரக்கர் கமலாஞ்சனிரூபவ் கோரக்கர் பிரமபோதம்ரூபவ் கோரக்கர் லலாடப்பூட்டுரூபவ் கோரக்கர் பஞ்சவர்த்தம்ரூபவ் கோரக்கர் மறலிவாதம்ரூபவ் கோரக்கர் முனி ஜென்மசித்துரூபவ் கோரக்கர் முனி ஆன்ம சித்துரூபவ் கோரக்கர் ஞான ஜோதிரூபவ் கோரக்கர் கல்ப போதம்ரூபவ் கோரக்கர் நிலையொடுக்கம்.

தற்போது கிடைத்துள்ள நூல்கள்:

கோரக்கர் சந்திர ரேகைரூபவ் கோரக்கர் நம நாசத்திறவுகோல்ரூபவ் கோரக்கர்ரகஷமேகலைரூபவ் கோரக்கர் முத்தாரம்ரூபவ் கோரக்கர் மலை வாகடம்ரூபவ் கோரக்கர் கற்பம்ரூபவ் கோரக்கர் முத்தி நெறிரூபவ் கோரக்கர் அட்டகர்மம்ரூபவ் கோரக்கர் மூலிகைரூபவ் கோரக்கர் தண்டகம்ரூபவ் கோரக்கர் கற்ப சூத்திரம்ரூபவ் கோரக்கர் பிரம்ம ஞானம். 

புதுச்சேரி மாநிலம் கோர்க்காடு என்ற ஊரில்தான் கோரக்கர் தவம் செய்ததாக கூறப்படுகிறது. சிலர் கோரக்கர் இந்த ஊரில்தான் ஜீவசமாதி(சித்தி) அடைந்தார் எனவும்ரூபவ் அந்த காரணத்தாலே இந்த ஊரிற்கு கோர்க்காடு என பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது.

ஒரு சிலர் கோரக்கர் பேரூய அரில் சித்தி அடைந்தார் எனவும் கூறுகின்றனர்.