அகப்பேய்ச் சித்தரின் இயற்பெயர் நாயனார். இவர் திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றியவர்.
திருவள்ளுவரைப் போலவே இவரும் நெசவுத் தொழில் செய்து துணி வியாபாரம் செய்தார். இதில் வருமானம் அதிகம் கிடைத்தும் அகப்பேய்ச் சித்தருக்கு பொருளில் நாட்டமில்லை. அவரின் மனம் அருளையே தேடியது.
அகப்பேய்ச் சித்தரின் உள்ளத்தூய்மை அவரின் முகத்தில் தெரிந்ததால் மதிப்பும் மகிழ்வும் மக்களிடமிருந்து பெற்றார்.
அகப்பேய்ச் சித்தரின் பார்வையில் பட்டதெல்லாம் போலித்தனமும்ரூபவ் இயந்திரத்தனமான வாழ்க்கையும்தானேதவிர வேறு எதுவுமில்லை. மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டும்ரூபவ் ஏமாந்து கொண்டும் இருந்தனர்.
ஆன்மாவிற்கு உயர்வை தரும் வழியை யாருமே அறியவே இல்லை. அகப்பேய்ச் சித்தரின் போதனைகளை மக்கள் அலட்சியமாக பார்த்தனர்.
நடைமுறை வாழ்க்கைக்கு ஞான நூல்கள் ஒத்துவராது என கேலி பேசும் மக்களை திருத்த நினைத்தால் தம்முடைய அமைதி போய்விடும் என எண்ணி இவர்களின் உறவே வேண்டாம் என நொந்துபோய் அங்கிருந்து அகன்றுவிட்டார்.
நாயனார் பல சாதுக்களை சந்தித்தும் திருப்தியடையவில்லை. அவர்களின் செய்கையால் மனம் நொந்து ஊரை விட்டே விலகிச் சென்று காட்டை அடைந்தார். அங்கும் நல்ல உள்ளம் கொண்ட முனிவர் ஒருவர்கூட இவரின் கண்ணிற்கு தென்படவில்லை.
நாயனார் காட்டில் ஒரு பெருத்த ஜோதி மரத்தை பார்த்தார். அந்த மரத்தின் அடியில் இருந்த பெரிய பொந்தில் நாயனார் மனதில் ஒரு தீர்மானம் செய்து கொண்டு அமர்ந்தார்.
அகப்பேய்ச் சித்தர்ரூபவ் தன்னுடைய குருவாக தூய்மையான வேதங்களதை; தொகுத்துத் தந்த வியாசரை நினைத்து அங்கேயே தவம் செய்தார். இவரின் தவப்பயனால் ரூடவ்ர்க்கப்பட்டு வியாசர் நாயனாருக்கு காட்சி அளித்தார்.
வியாசரை வணங்கி நின்ற நாயனாருக்கு ஞான உபதேசம் செய்து ‘உனக்கு அநுபூதி நிலை கைக்கூடும்’ எனவும் ‘மக்களின் மனம் லயமாவதற்காக உன் அனுபவங்களை எழுதி வை’ எனவும் கூறி நாயனாரை ஆசிர்வதித்து விட்டு மறைந்தார்.
நாயனார் தமக்கு உபதேசம் செய்த வியாசர் மறைந்த திசைநோக்கி கைக்கூப்பி வணங்கினார். பின்பு ஜோதிமரப் பொந்தினுள் நுழைந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.
தவத்தில் இருக்கும்போது காய்ரூபவ் கனிகளை உண்டார். அவை கிடைக்காதபோது காய்ந்த உதிர்ந்த சருகுகளை உண்டார். அவையும் கிடைக்காதபோது காற்றையே உணவாக உண்டார். நாயனாரின் சாதனை உயர்ந்து உணர்வில் அருள்ஒளி படர்ந்தது. வியாசரின் உபதேசத்தினால் நாயனாருக்கு தவம் கைக்கூடியது.
தவம் கைக்கூடியவுடன் வியாசரின் கட்டளை நினைவுக்கு வந்தது. மனப் பேயை நம்மால் விரட்ட முடியாது. கண்ணில் பட்டதை எல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள மனம் நினைக்கும். மாயையினால் மயங்கிப்போக விழைகிறது. மனப்பேயை நம்மால் விடமுடியவில்லை அப்படி விட்டாலும் அது நம்மை விடுவதாக இல்லை. அதனால் நாயனார் ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி அவரவர் மனதிற்கு நல்லது சொல்லிக் கொள்வது தான் தர்மம் என எண்ணினார்.
இதன் காரணமாகத்தான் வெறிகொண்ட மனதை “அகப்பேய்” என அழைத்து அவை ஆனந்தமயமாக வாழ்வதற்குப் பல உபதேசங்களைப் பாடல்களாக உருவாக்கினார். அதனாலேயே அவரை “அகப்பேய்ச் சித்தர்” என உலகம் அழைத்தது. நாளடைவில் அந்தப் பெயர் “அகப்பைச் சித்தர்” என ஆயிற்று.
பதினெண் சித்தர்களில் நாயனாரும் ஒருவரே!
மனதை அதாவது அகத்தைப் பேயாக உருவகித்து பாடியதால் இவரை அகப்பேய்ச் சித்தர் என அழைத்தனர். இவரின் ஞானப் பாடல்கள் பதினெண் சித்தர்கள் ஞானக் கோவையில் அகப்பேய்ச் சித்தர் பாடல் எனற தலைப்பில் அமைந்துள்ளது. நாயனாரின் மொத்தப் பாடல்கள் 90 ஆகும்.
நாயனாரின் தத்துவப் பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் கடைசியில் அகப்பேய் என்று முடியுமாறு அமைந்துள்ளது.
தன்னை அறிய வேண்டும் - அகப்பேய்!
சாராமல் சார வேணும்ரூபவ்
பின்னை அறிவதெல்லாம் - அகப்பேய்!
பேய் அறிவு ஆகுமடி
(அகப்பேய்ச் சித்தர் பாடல்)
நாயனாரின் பாடல் வரிகளில் உலகளாவிய சிந்தனைத்திறன் எடுத்துக் காட்டப்படுகின்றன.
“பிறவி தீர வேண்டுமென்றால் - அகப்பேய்!
பேதகம் பண்ணாதே!
துறவியானவர்கள் - அகப்பேய்!
சும்மாயிருப்பார்கள்”
“சாதி மதம் இல்லை – அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் - அகப்பேய்!
ஓன்று தான் இல்லையடி”
“பாழாக வேணுமென்றால் - அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சோன்னேனே – அகப்பேய்!
கேள்வியுமில்லையடி”
நாயனாரின் நூல்கள்: அகப்பேய்ச் சித்தர் பாடல் 90ரூபவ் அகப்பேய் பூரண ஞானம் 15 போன்றவையாகும்.நாயனார் திருவையாறு என்;ற திருத்தலத்தில் சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.