சித்தர்கள்

பதஞ்சலி

பதஞ்சலி முனிவரே யோக சூத்திரத்தை அருளினார். இவரே ஆதிசேடனின் அவதாரம்!

இதுவரை பதஞ்சலி முனிவரை அவரது சீடர்கள் பார்த்ததே இல்லையாம். காரணம் என்னவென்றால் ஆதிசேடனின் அவதாரமாக இருப்பதால் இவரின் விஷக்காற்று பட்டாலே அந்தச் சீடர்கள் அக்னியில் எரிந்து சாம்பலாகி விடுவர்.

இதுவரை தன் சீடர்களுக்கு அரூயஅp;பமாக காட்சியளித்த பதஞ்சலி முனிவர் தன் சீடர்களுக்கு நேரில் காட்சியளிக்க விரும்பினார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையில் ஒரு கனத்த திரை போட்டு பின்பு உபதேசம் செய்ய முடிவு செய்தார்.

அந்த சமயம் கௌடபாதர் என்ற சீடர் குருநாதர் சொன்ன பணியை ஒன்றை நிறைவேற்ற வெளியே சென்றிருந்தார். (ஆதி சங்கரரின் ஞானாசிரியராகிய கோவிந்த பகவத் பாதரின் குரு தான் இந்த கௌடபாதர்!)

அதன்படியே திரைக்கு பின்னால் அமர்ந்து ஆதிஷேட வடிவில் கடும் விஷம் பாயும் மூச்சுக் காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை கம்பீரமாக உபதேசிக்கத் தொடங்கினார்.

குருநாதரிடமிருந்து நாத அலைகளாக வரும் கருத்து மழையில் நனைந்த சீடர்களுக்கு ஒரு ஆசை உண்டானது.

அது என்னவென்றால் எப்படியாவது குருநாதரின் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட வேண்டும் என நினைத்தனர். துடுக்குத்தனம் அதிகமுள்ள ஒரு சீடன் கனத்த திரையை பிடித்து இழுக்க திரை விலகியது.

திரை விலகியதுதான் மாயம் ஆதிசேடனின் விஷக்காற்று பட்டு அத்தனை சீடர்களும் சாம்பலாகினர்.

பதஞ்சலி முனிவர் இத்தனை காலம் எது நடக்கக்கூடாது என நினைத்தாரோ அது நடந்ததை நினைத்து வருந்தினார். அப்பொழுது தூரத்தில் வந்த கௌடபாதரை பார்த்து சீடர்களுள் இவராது உயிரோடு இருப்பதை பார்த்தார். விஷக்காற்று கௌடபாதரின் மேல் படக்கூடாது என் நினைத்து தன்னுடைய உருவத்தை மானுட உருவத்திற்கு மாற்றினார்.

கௌடபாதர் குருநாதரை வணங்கிய பின்பு தன் தோழர்கள் அனைவரும் மாண்டு சாம்பல் மேடுகளாய் இருப்பதை கண்டு பதறி குருநாதரிடம் என்ன இது? நம்முடைய குருகுலத்து சீடர்கள் இப்படி சாம்பலாகிக் கிடக்கின்றனரே…… யார் செய்த கொடுமை இது? என வினவினார்.

பதஞ்சலி முனிவர் “கௌடபாதா! உன் அதிர்ஷ்டம்ரூபவ் நீயும் இந்த மாதிரி சாம்பலாகாமல் தப்பித்தாய்!” என்றார்.

சாம்பலை பார்ப்பதற்காகவா என்னை வெளியில் அனுப்பினீர்? ஐயோ…. நான் என்ன பாவம் செய்தேன்?...” என கேட்டார்.

“இதில் நீ என்ன பாவம் செய்தாய் கௌடபாதா?... குருநாதரின் உபதேச மொழிகளை அறிவுக்குள் வாங்கிக் கொண்டு உன் நண்பர்கள் குருவின் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக திரையை விலக்கியதால் ஏற்பட்ட விபரீதம் தான் இது”.

ஆதிஷேடனின் விஷக்காற்று படாமலிருக்க போட்ட திரையை இத்தனை நாட்கள் பொறுமையாய் இருந்தவர்கள் தன்னுடைய சபலத்தினால் விளக்கி பார்க்க முயன்றதன் பயன் தான் இது என கௌடபாதரிடம் பதஞ்சலி முனிவர் விளக்கி கூறனார்.

குருநாதா! ஞான வெளிச்சம் வழிந்தோடும் தங்களைக் காணும் ஆவலில்தான் அவர்கள் அந்த செயலை செய்து விட்டனர். ஆசை யாரை விட்டது? தாங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா? என்றார் கௌடபாதர்.

கௌடபாதர் தயங்கிக் கொண்டே ஒன்றை கேட்டார்……. முன்னொரு சமயம் பதஞ்சலி முனிவர் ஆசைப்பட்ட சம்பவத்தினை மனதில் இப்போது வைத்துக்கொண்டு அதை நினைவூட்டுவதற்காக கௌடபாதர் இப்படிக் கேட்டார்.

ஆதிஷேசனாகிய பதஞ்சலி முனிவர் ஸ்ரீமந்நாராயணனின் பாம்பணையான (படுக்கை) ஸ்ரீ அனந்தன் தான்!

முன்பொரு முறை சிவதாண்டவத்தை நேரில் கண்டதை நினைத்துப் பார்த்து அதனால் மெய் சிலிர்த்த விஷ்ணு சற்றுப் புரண்டு படுக்கரூபவ் அந்த பாரம் தாங்காமல் சிலிர்ப்படைந்த ஆதிசேஷன் விஷ்ணுவிடம் அதற்கான காரணத்தைக் கேட்டு விட்டுத் தானும் அந்த சிவதாண்டவத்தைக் காண வேண்டும் என்று பேராவல் கொண்டார்.

இவை நடப்பதற்காக கைலாய மலைக்குச் சென்று கடுந்தவம் புரியரூபவ் சிவபெருமான் ஆதிஷேசன் முன் தோன்றி தில்லையம்பலத்தில் ஆதிசேஷனாகிய பதஞ்சலி முனிவருக்கும்ரூபவ் வியாக்ர பாதருக்கும் சிவதாண்டவக் காட்சியைக் காணும் பேற்றினை அருளுவதாக வரம் அளித்தார்.

வியாக்ரபாதர் தில்லைவனத்தைப் பராமரித்து அங்குள்ள மூலவரை தினமும் பூஜித்து வந்தார். சித்தர்களில் மூத்த சித்தரும்ரூபவ் பிரம்மனின் மானசீக புத்திரரும் வசிஷ்ட மகரிஷியின் உறவினருமான இந்த வியாக்ரபாதர் சிபி சக்கரவர்த்தியால் தேகம் அவயம் இழக்கும்படி சபிக்கப்பட்டவர். (அதாவது புலிக் கால்களை உடையவர்).

பதஞ்சலி முனிவர் தில்லை வனம் வந்து சேர்ந்தவுடன் இருவரும் சேர்ந்து அங்கே தைத் திங்களும்ரூபவ் பூச நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமையன்று தில்லைநாதரின் நடனம் கண்டு மகிழ்ந்தனர். பிறகு இருவரும் நிறைய சித்துக்கள் செய்துள்ளனர். 

அந்த சிவதாண்டவம் காண தன்னுள் எழுந்த ஆசையைத் தான் தன் சீடர் கௌடபாதர் இப்போது நினைவுபடுத்திக் காட்டுகிறார். இதனை உணர்ந்த பதஞ்சலி முனிவர் புன்னகைத்துக் கொண்டேரூபவ் “கௌடபாதரே! நீ மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி. குவலையை விட்டொழி. ஊனக்கு சகல வித்தைகளையும் கற்றுத் தருகிறேன். சலனமுற்றிருக்கும் உனக்கு இப்போது தேவை தியானம்தான்.”

கௌடபாதர் குருநாதரின் முகக்குறிப்பில் ஏதோ ஒரு வலியுறுத்தல் இருப்பதை உணர்ந்தார்.

கௌடபாதருக்கு தன் நண்பர்களின் நினைவுகள் மெல்ல மெல்ல அகன்றது. பதஞ்சலி முனிவர் அஷ்டமா சித்திகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில் கௌடபாதரின் முகத்தில் நண்பர்களின் நினைப்பு வந்து போவதை கவனித்தார்.

சித்தர்கள் மரணத்தை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவர்கள். சாயா புருஷ தரிசனம் சித்தர்களுக்கு முன்கூட்டியே அறிவித்துவிடுகிறது என்றபடி பதஞ்சலி கௌடபாதருக்கு சாயா புருஷ தரிசனத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வருகையில் அவர்கள் வரும் வழியை அடைத்தாற் போல் ஒரு குன்று கிடந்தது.

பதஞ்சலிமுனிவர் அந்த குன்றை தன் காலால் எட்டி உதைக்கரூபவ் அந்த குன்றோ வெடி வைத்து தகர்த்தாற் போல் சிதறியது. கௌடபாதர் இதைப் பார்த்து மலைத்துப் போய் நின்றார்.

“கௌடபாதரே!...... அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டீர். இது தான் கரிமா சித்தி ஆகும். உடலை கனமாக்கிக் கொள்ள பூமியின் கனத்தை மனதால் சம்யமம் செய்து கொண்டால் உடலில் அந்த பூமியின் கனமான அம்சம் ஏறிக் கொள்ளும். ஒரு யானையை சமயம் செய்து கொள்ள அந்த யானையின் பலம் நம் உடலுக்கு வந்து சேரும்.

கௌடபாதர் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தில் உள்ளாழ்ந்து போய் பத்மாசனத்தில் அமர்ந்து யோக சாதனை புரிந்த போதுரூபவ் ஸ்ரீ பதஞ்சலிமுனிவரின் ஆதிசேஷ அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்மறந்து நின்றார்.

சாயா புருஷ தரிசனம் என்பது சித்தர்கள் தங்களையும் தங்களது நிழலையும் பிரிந்து தம் இயக்கத்தின் மறு பதிப்பில் அதனை உருவாக்கி தத்தம் நன்மை தீமைகளை உணர்த்தும் எச்சரிக்கையே ஆகும்.