ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர் மகாபாரத காலத்திற்கு முந்தைய காலத்தில் திகழ்ந்தவர். திருவண்ணாமலையில் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன் இறைவாசம் கொண்டவர்.
வடக்கு நோக்கி தன்னுடைய காரியங்களை எப்போதும் செய்வதால் வடக்கு முக சித்தர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். திருவண்ணாமலைக்கு வந்த பின்னர் தான் தினமும் இந்த வடக்கு முகச் சித்தர் கிரிவலம் வந்து தன்னுடைய அஷ்டதிக்கு (எட்டு திசை) சஞ்சாரத்தையும் ஏற்றுக்கொண்டார். தினமும் திருக்கோவிலூரில் பிட்சாமிர்தம் ஏற்று மீண்டும் திருவண்ணாமலையை அடைந்து தன்னுடைய கிரிவலத்தைத் தொடர்வார்.
அந்த காலத்தில் திருக்கோவிலூரிலிருந்துதான் கிராமவாசமும்ரூபவ் நகரவாசமும் தொடங்கியது. திருவண்ணாமலையின் அடிவாரத்தில் ஜனவாசம் கிடையாது.
வடக்கு முக சித்தர் இந்த பூவுலகை எத்தனையோ முறை வலம் வந்துள்ளாராம். ஏனென்றால் இவருடைய தலயாத்திரை எப்பொழுதும் வடக்கு நோக்கி இருக்குமாம்.
விதவிதமான சமித்து விருட்சங்களின் வேர்ப்பட்டைகள் நெற்றிப் பட்டைகளாகக் வடக்குமுக சித்தரின் நெற்றிப்பட்டையில் கட்டப்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட சில சமித்து மரங்களின் வடக்கு முகமாக உள்ள வேர் மூலத்திலிருந்து கடையப்படுகின்ற வடக்கு வேர் லிங்கம்ரூபவ் வடக்கு வேர் பிள்ளையார் மற்றும் வடக்கு வேர் வடிவ மூர்த்திகளை வழிபட்டால் அரும்பெரும் தெய்வ வரங்களைப் பெறலாம்.
சந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவச் சித்தரே வடக்குவேர் ரகசியங்களை அறிந்தவர்.கிருஷ்ண பரமாத்மாவின் தரிசனங்களை தன்னுடைய சிறுவயதிலிருந்தே காணப் பெற்றவர்.
இந்த வடக்குமுகச் சித்தர் கிரிவலம் வரும்போது தானாகவே உதிர்ந்து கீழே கிடக்கும் அரசுரூபவ் ஆல்ரூபவ் வேம்புரூபவ் புரசுரூபவ் புன்னை போன்ற சமித்துக் குச்சிகளை சேகரித்து அவற்றை சுத்தம்; செய்து ஆங்காங்கே இருக்கும் பர்ண சாலைகளில் வடக்குதிசையை நோக்கி உட்கார்ந்து ஹோமம் செய்திடுவார். ஹோமப் பிரசாதம் மரங்களின் வடக்கு திசையிலேயே இருக்கும். வடக்குமுக சித்தர் சிறுவயதிலிருந்தே வடக்கு நோக்கிப் பாய்கிற உத்திரவாகினி(புனிதநதிகள்)ரூபவ் வடக்குப்புற ஊற்று உள்ள கிணறுரூபவ் நீர்ச்சுனைகளில் தான் இவர் நீராடுவார். இவர் உணவு சமைப்பதுரூபவ் பூஜைக்கான திசைரூபவ் தியானம்ரூபவ் தலயாத்திரை அனைத்துமே வடக்குத் திசையை நோக்கித்தான் காணப்படும். நீர் அருந்துவதுகூட வடக்கு வேர் மூங்கில் குப்பியில்தான். வடக்கு வேர் சந்தனக் கட்டையில் இருந்து இழைக்கப்பட்ட சந்தனத்தை தான் இவர் உடலில் இருக்கும்.
வடஆரண்யம்ரூபவ் வடகாசிரூபவ் வடபழனிரூபவ் வடமதுரை போன்ற தலங்கள் யாவும் இவர் பூஜித்தவையாகும். (சென்னை – கோயம்பேடு) வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் மூலமூர்த்தி ஆலயங்களில் உள்ள தூண்களில் வடக்குமுக சித்தரின் வடிவங்களையோரூபவ் சூட்சும ஜீவாலய ரூயஅp;பங்களையோ கண்டு தரிசிக்கலாம்.
வடக்கு முகவேத பூஜை செய்யும் பாக்கியத்தை உத்தராயண புண்ணிய காலத்தின்போது திருவண்ணாமலையில் சூரிய பகவான்ரூபவ் யாக்ஞ்யவல்கிய மகரிஷி போன்றோருடன் சேர்ந்து செய்தார்.
இந்த சித்புருஷரே வடக்கு முக பூஜா தாத்பர்யங்களை உணர்த்தியவர். வடக்கு பகுதியில் வடமூல ஆரண்யேஸ்வரராக சிவபெருமான் திருவண்ணாமலையில் இவருக்கு காட்சி தந்திருக்கிறார். திருவண்ணாமலையில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணராக எத்தனையோ மகான்களுக்கு தரிசனம் தந்த ஸ்ரீகிருஷ்ணனே வடக்குமுக சித்தருக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். சந்தனு சித்தரை பீலி கிருஷ்ண மகானுபாவராக ஆக்கியவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. எப்படியென்றால் ஸ்ரீகிருஷ்ணன் இவரை அழைத்து தனது கிரீடத்திலிருந்த மயிற்பீலிகையை பிரசாதமாக இட்டதால் தான்.
யாருடைய தீவினைக் கர்மங்கள் நொடியில் பறந்து போக இந்தப் பீலிகையை ஒருமுறை வடக்குமுக சித்தர் வடக்குதிசையில் சற்று வீசினாலே போதும்.
இன்றும் மயிற்பீலிகை வீசி உடல்மேல் தடவி ஆசி அளிக்கும் பாங்கினை பல இடங்களில் காணலாம். இந்த சித்தரே இந்தப் பாங்கினை வழக்கில் கொண்டு வந்தவர்.
திருவண்ணாமலையின் வடக்குப் பகுதியில் இவர் தன்னுடைய பூவுடலை பூமிக்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு ஓரிடத்தில் கடுவண் குழிப்பறை என்ற இயற்கையாக உருவான குழியில் மயிற்பீலிகையை இட்டார். இவற்றை தேவ சங்குகளாலும்ரூபவ் ஒரு கண் தேங்காய்களாலும்ரூபவ் தேவலோக சாம்பிராணி மற்றும் அஷ்ட கந்த திரவியங்கள் அனைத்தையும் அதில் நிரப்பினார். இவற்றில் தன்னுடைய அனைத்து தியானரூபவ் யோகரூபவ் பூஜை பலன்களையும் யோக மயிற் பீலிகைச் சக்கரமாகப் பதித்துவிட்டார்.
கிரிவலம் வருவோரின் உடலில் இந்த தேவக் குழியில் பட்டு வருகின்ற சக்கரவாக் காற்றானது கலந்து பல தெய்வீக சக்திகளை உருவாக்கி நோய்களையும்ரூபவ் தீயவினையின் கர்மங்களையும் போக்குகிறது……