மக்களால் திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர் அன்புடன் ஜடாமுடிச் சித்தர் என்றழைக்கப்படுகிறார். ஜடாமுடிச் சித்தர் திருக்கோயிலூரில் பாயும் தென்பெண்ணை ஆற்றினுள் பொங்கிவரும் நீர்ப் பிரவாகத்தின் நடுவில் ஜலபாவன ஜடாம்பர யோகம் பூண்டு பலவிதமான முத்திரைகளுடன் அமர்ந்து திருவண்ணாமலையை தரிசித்தவாறே நீரினுள் அமிழ்ந்தவாறு இருப்பார். இந்தச் சித்தர் யோகத்தில் கரைகண்டவராக விளங்கினார். ஆற்றில் எவ்வளவு நீர் மட்டம் உயர்ந்தாலும் இந்த சித்தரின் ஜடாமுடி சிகை கோபுர வடிவில் இருப்பதால் பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் நீர் மட்டத்தில் நன்கு புலப்படுமாறு இருந்தது.
ஜடாமுடிச் சித்தர் தென்பெண்ணையாற்றினுள் தாம் கொண்டிருந்த ஜலஜடாம்பர யோக நிஷ்டையிலிருந்து தாமாகவே எழுந்து வெளியே வந்து திருவண்ணாமலைக்கு நடந்தே சென்று கிரிவலத்தை மேற்கொள்வது எப்போது என்றால் நீரோட்டம் சிறிது குறைந்து ஜடாமுடி சித்தரின் முதுகில் சூரியக் கிரணங்கள் படியும்போதும்ரூபவ் சமுதாயத்தில் துன்பங்கள் பெருகும்போதும்ரூபவ் அருணாச்சல திருக்கோவில் உற்சவங்களின் போதும்ரூபவ் நெஞ்சுருகி பக்தர்கள் வேண்டும் போதும்தான். பலரும் இந்த தரிசனத்தைக் காண குழுமியிருப்பர்.
சித்தர் கிரிவலம் வருகையில் எத்தனை முறை வருவார் என்பதும்ரூபவ் எந்த வகையில் வலம் வருவார் என்பதும்ரூபவ் எப்போது கிரிவலத்தை நிறைவு செய்வார் என்பதும் யாரும் அறியாத ஒன்றாகும். திருக்கோவிலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றினுள் தன்னுடைய கிரிவலத்தை முடித்த அடுத்த விநாடியே யோக நிலைக்கு சென்றுவிடுவார்.
அவர் நீரினுள் சென்றதும் நீர் பெருகி நறுமணத்துடன் மாறி அவரின் உருவம் வழக்கம்போல் நீரினுள் மறைந்துவிடும். மேலே அவருடைய ஜடாமுடிசிகை மட்டும் தெரியும்.
ஜடாமுடி சித்தர் அனைவரிடமும் முத்திரைகள்ரூபவ் சைகைகள் மூலமாகவே அனைத்தையும் தெரிவித்து மௌனபூஷணியாக பரிமளிப்பார். அக்காலத்தில் திருவண்ணாமலையை மாற்றுவேடத்தில் கிரிவலம் வந்த அரசர்களிடம் மட்டுமே சில வார்த்தைகளை பேசினாராம்! அவரிடம் பேசும் பாக்கியம் பெற்றவர்களுக்கு அரச பீட பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். இவைகளுக்கு உதாரணம்:
பாஞ்சாலம்ரூபவ் நைமி சாரண்யம்ரூபவ் கலிங்கம்(ஒரிசா)ரூபவ் வங்காளம்ரூபவ் சிந்துரூபவ் மௌர்யம் என்ற பல நாட்டில் ராஜ்யங்களில் இருக்கும் பல பெரிய வேந்தர்கள் மாறுவேடங்களில் இந்த ஜடாமுடி முனிவரைத் தேடி வருவார்கள். அவர்களிடம் பலமொழிகளில் இரத்தினச் சுருக்கமாக ஒரு சில வார்த்தைகள் பேசிடுவார்.
திருவண்ணாமலையில் ஒரு மாத சிவராத்திரியன்று கோயில் நந்தவனத்தைச் சேர்ந்த புள்ளிமானை யாரோ கல்லால் அடித்து துரத்திவிட்டனர். அந்தப் புள்ளிமான் வேதனையுடன் ஒரு மடத்திற்குள் நுழைந்து தஞ்சம் புகுந்தது. அப்போது மாமன்னர் ஒருவர் திருவண்ணாமலைக்கு மாறுவேடத்தில் வந்து மாத சிவராத்திரியில் பங்குபெற்ற லட்சக்கணக்கான மக்களுக்காக அறுசுவை உணவு தயாராக்கிக் கொண்டிருந்த வேளைதான் அது…….
அந்த மடத்திலுள்ள அன்னசாலையின் நடுவில் அந்தமான் ஓடிவந்து கீழே விழுந்து வலியால் துடித்தது. ஏனென்றால் அந்தமானின் தொண்டைக்குள் பெரிய கவண்கல் பதிந்து மான் உயிருக்குப் போராடியது. அந்தகாலத்தில் கோவில் கதவுகளை பசுரூபவ் மான்ரூபவ் யானை போன்ற புனித ஜீவன்கள் இறந்துவிட்டால் அடைப்பர்.
அதன்பிறகு புனர்சுத்திரூபவ் பிருத்வி சுத்தி பூஜைகள் செய்து முடித்த பின்னரே ஆலய வழிபாடுகள் தொடரும். மன்னரும்ரூபவ் மக்களும் மூன்று வேளையும் அந்த இறந்துபோன உயிருக்கான ஜீவ சுத்திக் காரியங்கள் முடியும் வரை உணவு உண்ணமாட்டார்கள்.
சமுதாயத்தில் பக்தியும்ரூபவ் தர்மமும்ரூபவ் சாந்தமும்ரூபவ் ஜீவகாருண்யமும் அந்த அளவிற்கு தழைத்திருந்தன.
அடிபட்ட மானுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்? மாத சிவராத்திரி விரதத்திற்குக் குந்தகம் உண்டாகி ஆலய பூஜைகள் நின்று போனால்? இந்த நிகழ்ச்சி நாட்டிற்கு வரும் ஆபத்தை உணர்த்தும் பெரிய தீய சகுனம் ஆகிவிடும் அல்லவா? என்ன செய்வதென்று புரியாமல் மன்னர் சித்தரின் இருப்பிடத்தைத்; தேடி கிரிவல நடைப்பாதையில் விரைந்து சென்றார்.
மன்னர் இறைவன் சித்தத்தால் ‘புள்ளிமான் காடு’ என்னும் கிரிவலப் பகுதியில் சித்தர் சென்று கொண்டிருப்பதைக் கண்டவுடன் அருகில் விரைந்து சென்று பணிவுடன் சித்தரை வணங்கினார்.
மன்னனின் முகத்தை பார்த்தவுடனே அவரின் வேதனையை புரிந்து கொண்ட ஜடாமுடி சித்தர் ‘பிரம்மஞான ரட்சா முத்திரைகளை இட்டுக்கொண்டு அண்ணாமலையாரை பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின்பு ஜடாமுடியாரின் உடல் பெருத்த வலியால் துடிக்க ஆரம்பித்தது. இப்போது சித்தரின் தொண்டையில் மானின் கழுத்தில் பதிந்திருந்த கவண்கல் பதிந்து காணப்பட்டது. சித்தரின் கழுத்து வீங்கி உடல் தளர்ந்து காணப்பட்டது.
ஆமாம்….நடந்தது என்னவென்றால்ரூபவ் ஜடாமுடிச் சித்தரின் உயிரை அடிப்பட்ட மானுக்குள் செலுத்திவிட்டு மானின் உயிரை தனக்குள் மாற்றிக்கொண்டார். இவையனைத்தும் கண்யிமைக்கும் பொழுதில் நடந்தேறின. இந்த நிகழ்ச்சி நடந்த உடனே மடத்தில் இருந்த மான் எழுந்து துள்ளி குதித்து கிரிவலப் பாதையில் சித்தர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. மானை பின்தொடர்ந்து வந்த மக்கள் சித்தர் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். கடுமையான வலியால் சித்தர் அவதிபட்டு கொண்டிருந்தார்.
ராஜ வைத்தியருக்கு முகத்தில் ஒரே கவலை. என்னவென்றால் சித்தரின் கழுத்தில் இருக்கும் கல்லை அறுவை சிகிச்சை செய்து எடுத்தால் என்ன நிகழுமோ!... என்ற அச்சத்தில் எதையுமே வெளியே சொல்ல முடியாமல் தவித்தார். சித்தருக்கு எப்படி வைத்தியம் செய்வது என்று தயங்கிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்.
ஜடாமுடி சித்தர் நிலைமையைப் புரிந்து கொண்டு பிரானோ மன்னரிடம்ரூபவ் “மாத சிவராத்திரி விரதம்ரூபவ் ஆலய பூஜைகள்ரூபவ் கிரிவல வழிபாடுகள் யாவும் இந்த சிறு துன்பத்தினால் திருவண்ணாமலை என்ற புனித பூமியில் பாதியில்
தடைப்பட்டுவிடக்கூடாது. அப்படி இந்த பூஜைகள் தடைப்பட்டால் உலகம் முழுவதற்கும் துன்பங்கள் ஏற்படும். அனைத்தையும் தடங்கலின்றி முறையாக முடித்து வாருங்கள்ரூபவ் இறைவனின் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் என்று உறுதி கூறவேரூபவ்” அனைவரும் அவ்விடத்தைவிட்டு தயக்கத்துடன் அகன்றனர்.
மன்னரும்ரூபவ் மக்களும் மாத சிவராத்திரி வழிபாடுரூபவ் கிரிவலம்ரூபவ் அன்னதானம் அனைத்தும் முறையாக முடிந்ததும் உடனடியாக சித்தர் இருக்கிமிடத்திற்கு விரைந்து வந்தனர். இன்னமும் சித்தர் மயக்கத்தில் இருந்தார். அனைவரும் கண்ணீருடனும்ரூபவ் மனவருத்தத்துடனும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவதற்கும்ரூபவ் ஒரு மானினுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கும் தன் உயிரையே தியாகம் செய்ய முன்வந்த சித்தர் வலியால் துடிப்பதைக் கண்டு நின்றனர்.
அப்போது ஒரு கிராம வைத்தியர் மக்களின் கூட்டத்திற்குள் மெல்ல ஊர்ந்து மன்னரின் முன் வந்து நின்றார். இங்கு நடந்ததனைத்தையும் நான் கேள்விப்பட்டேன் என்றுகூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார் மன்னரிடம். நான் யாருக்கு வைத்தியம் பார்ப்பது? மானுக்கா? மகத்தான சித்தருக்கா? உயிருக்காரூபவ் உடலுக்கா? என்று கேட்டவுடன் மக்கள் விழித்துக் கொண்டு நின்றனர். வைத்தியராக வந்திருப்பது சாட்சாத் அந்த அருணாச்சலேஸ்வரர் தான் என்று மன்னருக்கு புரிந்துவிட்டது.
மாறுவேடத்தில் இருக்கும் தன்னையும்ரூபவ் வைத்தியாராக வந்திருக்கும் இறைவனையும் யாரென்று வெளிகாட்ட முடியாத நிலைமையில் இருவரும் இருந்தனர்.
அங்கு வந்திருந்த வைத்தியர் மக்களிடம்ரூபவ் “பஞ்சபூத சக்திகளைக் கொண்டே திருவண்ணாமலை தலத்தில் சிகிச்சை என்பது நிகழ வேண்டும். தெய்வ மூர்த்திகளின் கருணையினால்தான் உயிர் பரிமாற்றம் என்பது நிகழும். சிறுகரணம் தவறினாலும் அனைத்தும் மாறிவிடும். அதாவது மானுக்கோ அல்லது சித்தருக்கோ ஆபத்து நேரிடும். ஆகவே இந்த மாத சிவராத்திரி விரதம்ரூபவ் பூஜைகள்ரூபவ் கிரிவல வழிபாட்டு பலன்கள் அனைத்தும் நீங்கள் இவருக்காக அர்ப்பணித்தால்தான் என்னால் துணிந்து இந்த சித்தருக்கு சிகிச்சை செய்ய முடியும்” என்றார்.
மக்களுக்கும்ரூபவ் மன்னருக்கும் இது பெரிய சோதனை. பக்தர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். மான் இறந்தாலோ உலகிற்கே பெரும் கேடுகள் விளையும்ரூபவ் சித்தரை இழப்பதா?.....என்று சித்தரின் தியாகத்தை நினைத்து அனைவரின் புண்ணிய சக்தி அனைத்தையும் அந்த கிராம வைத்தியரின் கமண்டலத்தில் அர்ப்பணித்தனர்.
அடுத்தகனமே கண்களில் நீர்மல்க வைத்தியரின் முன்பு ஜடாமுடிச் சித்தர் எழுந்து நின்றார். பின்பு வைத்தியரின் திருவடிகளை பற்றித் தொழுதவுடன் வைத்தியர் சித்தர் காதில் எதையோ ஓதிடரூபவ் சித்தரோ மிக விரைவாக நடக்க ஆரம்பித்தார்.
அதற்குபிறகு மானையும் காணவில்லைரூபவ் இந்த ஜடாமுடி சித்தரோ! தென்பெண்ணை ஆற்றினுள் பிலதுவாரத்திற்குள் ஏற்பட்ட பிரம்மாண்டமான பேரொளியுடன் சென்று மறைந்தார். பின்பு ஜடாமுடி சித்தரையும் எங்குமே காண முடியவில்லை.
இறைவன் ஜடாமுடிச் சித்தரை கலியுகத்தில் விட்டுவைத்தால் உயிர்ப்பரிமாற்றம்ரூபவ் உயிர்ப்பரிணாமம்ரூபவ் உயிர்ப்பரிபாலனம் போன்றவற்றில் பரிபூரணம் பெற்ற அந்த உத்தமரை எதிர்காலச் சமுதாயம் தவறான முறையில தங்களின் ஆயுளை நீடித்திட அவரைப் படாதபாடு படுத்தி துன்புறுத்துவார்கள் என்பதற்காக அப்போதே தன்னுடன் அந்த சித்தரை ரூடவ்ர்த்துக் கொண்டான்.
திருவண்ணாமலை கிரிவலத்தில் சில விஷேசமான நாட்களில் சூட்சுமமாகவோரூபவ் தூல வடிவிலோ ஜடாமுடிசித்தர் அருள் வழிகாட்டுகிறார்.
திருவண்ணாமலையில் மாதசிவராத்திரியில் கிரிவலம் வரும்போது ஜடாமுடிசித்தர் அருளிய ஸ்ரீகாயத்ரி கோபுர தரிசன முத்திரை இட்டவாறு சென்றால் எத்தகைய நோய்களுக்கும் தீர்வு பெறுவதற்கான வழிகள் கிடைக்கும்.