திருவிளையாடல் புராணம்

அன்னக்குழி, வைகை அழைத்தல்

     அனைத்தையும் சாப்பிட்ட குண்டோதரனின் வயிறு தூர் எடுத்த கிணறு போல இருந்ததுஅவன் ஈசனை வணங்கி "ஈசனே எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல எனக்கு சாப்பிட்டது எல்லாம் அற்ப உணவாகிவிட்டது" என்றான். அவன் கூறியதை கேட்ட மீனாக்ஷி வியந்தாள்

     சதாசிவன் அன்னபூரணியை நினைத்த சமயம், நான்கு தயிர் சாதக்குழிகள் அவன் முன் தோன்றினகுண்டோதரனை சாப்பிட சொன்னார்.

    குண்டோதரன் மகிழ்ச்சியுடன் அதை எடுத்து நான்கே வாயில் விழுங்கிவிட்டான்அதை சாப்பிட்டதும் அவனுக்கு பெரும்தாகம் ஏற்பட்டுவிட்டதுமதுரையிலுள்ள கிணறுகள், குளங்களிலிருந்த நீர் அனைத்தும் குண்டோதரனால் வற்றிவிட்டதுஅவன் ஈசனிடம் ஓடிவந்து முறையிட்டான்.

     உடனே ஈசன் தன் முடியிலிருந்து கங்கையை எடுத்து விட்டார்அவர் குண்டோதரனை நோக்கி அதில் வை, கை என கூறினார்ஈசன் சொன்னதை ஏற்று அவன் நீரை தன் கைகளால் எடுத்து பருகி தாகம் தீர்த்தான்.

     பிறகு  சோமசுந்தரகடவுளையும், மீனாக்ஷியையும் வணங்கினார்ஒருமுறை வைகையில் குளித்தால் அவன் சிவனருள் பெறுவான்வைகைக்கு விளம்பியதை, கிருதமாலை, சிவஞானநதி, வேகவதி என பல பெயருண்டு.  

     வை, கை என ஈசனே பெயர் வைத்ததால் இந்த கதையைப் படிப்பவர்களுக்கு பல புண்ணிய நதியில் நீராடிய பலன் கிடைக்கும்இதுவே ஈசனின் எட்டாம் திருவிளையாடல்.

    இறைவனின் எட்டாம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பசி, தாகம் போன்ற எந்த வித தொல்லைகளும் ஏற்படாது.

மேலும்

சங்கப் பலகையளித்தல்
View Details
பத்திரனுக்குப் பலகையிடல்
View Details
வேலால் கடலைச் சிதைத்தல்
View Details