திருவிளையாடல் புராணம்

ஏழு கடலழைத்தல்

     சோமசுந்தரக் கடவுள் மீனாக்ஷியை திருமணம் செய்து கொண்ட பிறகு பாண்டிய மன்னராக மதுரையை சிறப்பாக ஆண்டு வந்தார்இறைவரே ஆட்சியில் இருக்கும் போது பஞ்சத்திற்கு வேலையே இல்லைஅவரின் ஆட்சி காலத்தில் மும்மாரி பெய்ததுநதிகள் பெருக்கெடுத்தது, கோவில்களில் தினமும் பூஜை சிறப்பாக நடந்தது, பசுக்கள் பாலைப் பொழிந்தனமிக சிறப்பான, செழிப்பான ஆட்சி நடைபெற்றது.

     ஒருநாள் கௌதம முனிவர் அரண்மனைக்கு வந்த சமயம் காஞ்சனமாலை அவரை வணங்கி அறங்களைப் பற்றி தெளிவாக கூறுமாறு கேட்டு கொண்டாள்.

     கௌதம முனிவரும் தெளிவாக விளக்க ஆரம்பித்தார்அறங்கள் மூன்று வகை உண்டுஅவை மன அறம், உடல் அறம், நா அறம்.

     மன அறம் என்பது இரக்கம், பக்தி, தூய்மை, பொறுமை, உண்மை பேசுவது என்பதை குறிக்கும்.

     உடல் அறம் என்பது குளிப்பது, கோவிலுக்கு செல்வது, தேர் இழுப்பது, கோவிலை தூய்மையாக வைத்திருப்பது, அபிஷேகத்திற்கு நீர் சுமப்பது, தீர்த்தங்களில் நீராடுவது போன்றவற்றை குறிக்கும்.

     நா அறம் என்பது இறைவனை பற்றி துதிப்பாடுவது, மற்றவர்களை பற்றி பேசாமல் இருப்பது, மந்திரங்கள் உச்சரிப்பது போன்றவற்றை குறிக்கும்.

     தீர்த்தமாடுதல் என்பது பல பயன்களை தர கூடியதுஅதிலும் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுவது என்பது விஷேசமான ஒன்றுஅப்படி நீராடினால் முன்செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும்.

     பின் காஞ்சனமாலை முனிவரை அன்புடன் உபசரித்து அனுப்பிவிட்டு, மகளிடம் "எனக்கு வயதாகிக்கொண்டே போகிறது, நான் கடலில் நீராட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என கூறினாள்.

     மீனாக்ஷி தன் தாயின் ஆசையை ஈசனிடம் கூற, ஈசன் உன் தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நான் ஏழு கடலையும் இங்கே வரவழைக்கிறேன் என கூறி வரவழைத்தார்.

     ஈசனின் அருளால் ஏழு கடல்களும் அலையடித்துக் கொண்டு அழகுடனும், ஆர்ப்பாட்டத்துடனும் வந்ததுஏழு கடலையும் பெரிய பொய்கையில் சேர்ந்து கொள்ள சொன்னார் ஈசன்இன்று மதுரை குளத்தில் குளித்தால் இந்த ஏழு கடலில் குளித்த புண்ணியம் கிடைக்கும்அதுமட்டுமல்லாமல் அமாவாசை, கிரகணம் அன்று குளத்தில் நீராடி தர்ப்பணம் செய்தால் பிதுர்கள் மகிழ்வர்.  

     காஞ்சனா மாலைக்கு ஏழு கடலையும் வரவழைத்ததே ஈசனின் ஒன்பதாம் திருவிளையாடல்.

     இந்த ஏழுகடல் பொய்கை விட்டவாசல் தெருவுக்கும் கீழமாசி வீதிக்கு நடுவில் உள்ளதுகீழமாசி வீதி வழியே விட்டவாசல் தெருவுக்கு வருவோர் நடுவில் ஏழுகடல் குளத்தை பார்க்கலாம்.

     இறைவனின் ஒன்பதாம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஈசன், அம்பிகை அருள் கிடைக்கும்பௌர்ணமி, அமாவாசைகளில் செய்த பூஜை பலன், வம்சவிருத்தி எல்லாம் ஏற்படும்.