ஈசனுக்கும் மீனாக்ஷிக்கும் திங்கள்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார் முருகப் பெருமான். பன்னிரண்டாம் நாள் உக்கிரன் என பெயரிட்டனர். முருகனின் அழகை காண இரு கண்கள் போதவில்லை. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் முருகனை காணவந்தனர். சுந்தரப்பாண்டியன் ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை அள்ளி வழங்கினார்.
உக்கிரன் தன்னுடைய எட்டாம் வயதில் வில்வித்தை,அஸ்திர வித்தை, குதிரையேற்றம் என அனைத்தையும் கற்றார்.
நாட்கள் செல்ல செல்ல உக்கிரன் காளைப் பருவமெய்தி அழகுடன் காணப்பட்டான். இதனால் சுந்தரப்பாண்டியன் அவனுக்கு திருமணம் செய்து தன் ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்க விரும்பினார்.
அதுமட்டுமில்லாமல் மணவூர் அரசன் சோமசேகரர் சிவனின் கனவில் தோன்றி அவரது புதல்வி காந்திமதியை உக்கிரனுக்கு திருமணம் செய்துவைக்கக் கட்டளையிட்டார்.
உக்கிர பாண்டியனாக முருகன் பிறந்ததே ஈசனின் பதினொன்றாம் திருவிளையாடல்.
இறைவனின் பதினொன்றாம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் குறை கர்ப்பம் போன்ற தொல்லைகள் நீங்கி, புத்திர பாக்கியம் ஏற்படும்.