சித்தர்கள்

பாம்பாட்டிச் சித்தர்

மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று கார்த்திகை மாதத்தில் பாம்பாட்டிச் சித்தர் பிறந்தார். போகர் 2000 என்ற நூலில் பாம்பாட்டிச் சித்தர் ஜோகி வகுப்பைச் சேர்ந்த வரலாறு மற்றும் சட்டைமுனியிடம் இவர் பெற்ற ஞானம் முதலானவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அதற்கு மாறாக பாம்பாட்டிச் சித்தரைக் கண்டால்தான் அனைத்து பாம்புகளும் நடுங்குமாம்…

பாம்பாட்டிச் சித்தரின் விருப்பமான பொழுதுபோக்கு என்னவென்றால் பாம்புகளைப் பிடிப்பதுரூபவ் அவற்றைப் படமெடுத்து ஆடச் செய்வதுரூபவ் அவைகளின் விஸத்தை சேமித்து விற்பது போன்ற செயல்கள்தான்….

இந்த பாம்பாட்டிச் சித்தர் எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும்ரூபவ் கொடிய விசமுள்ள நாகமாக இருந்தாலும் சரி அதனைப் பிடித்து விசத்தைக் கக்க வைத்து விடுவார். இதனால் தான் இந்த சித்தருக்கு பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயர் வந்திருக்கும் போல!

பாம்புகளின் எண்ணிக்கை தற்போது காட்டில் வெகுவாக குறைந்துவிட்டது. இவரைக் கண்டவுடன் மீதமுள்ள பாம்புகளும் கதி கலங்கி ஓடி ஒளியுமாம்…. 

பாம்பாட்டிச் சித்தர் பாம்புகளுடன் பழகியவராததால் விசமுறிவு மூலிகைகள் அனைத்தும் இவருக்கு அத்துபடி. இதனால் அவர் வாழ்ந்த ஊரில் சிறந்த வைத்தியராக பாம்பு கடிக்கு திகழ்ந்தார். இதனால் மற்ற வைத்தியர்களும்ரூபவ் பொது மக்களும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள்.

பாம்பாட்டிச் சித்தரின் முழு நேர ஆராய்ச்சியாக அவர் வெறும் விளையாட்டுத்தனமாக ஆரம்பித்த தொழில் மாறியது. வெறும் பாம்புகளைப் பிடித்து அதனை அடித்துப் போட்டு விடுவதோடு மட்டுமல்லாமல் இப்பொழுதெல்லாம் அவைகள் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்யத் தொடங்கினார். விச வைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றை மருதமலைப் பகுதியில் ஆரம்பித்தார்.

மிகப் பெரிய நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாக ஒருநாள் சில வைத்தியர்கள் இவரை அணுகி கூறியது மட்டுமல்லாமல் மிகப் பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது அந்த பாம்பின் நஞ்சு என்றும்ரூபவ் அதன் மாணிக்கம் அதிய விலைக்குப் போகுமென்றும்ரூபவ் அதன் விஸம் மருந்திற்காக அவசியம் தேவைப்படுகிறது என்றும்ரூபவ் அந்தப் பாம்பைப் பிடித்துக் கொடுத்தால் எங்களுக்கு மிகவும் உபகாரமாக இருக்கும் என்றும் சொல்லி அந்தப் பாம்பை எப்படியாவது பிடித்து வரும்படி கூறினார்கள்.

எப்படியாவது அந்தப் பாம்பைப் பிடித்துத் தருவதாக இளைஞனாகிய பாம்பாட்டிச் சித்தர் கூறிவிட்டுக் காட்டிற்குள் நுழைந்தார். பாம்புகள் அனைத்தும் இந்தப் பாம்பாட்டி இளைஞனின் வருகையின் வாசனையை மோப்பம் பிடித்து பத்திரமாக தங்களது வளைக்குள் பதுங்கிக் கொண்டன.

மிகுந்த வெறியுடன் பாம்பாட்டிச் சித்தர் காரியத்தைக் கச்சிதமாக முடிக்க நினைத்து பாம்பைக் காட்டிற்குள் தேடி அலைந்தார். அவரின் கண்ணில் பட்ட அனைத்து புற்றுகளையும் இடித்தார். அப்போது ஒரு சிரிப்புச் சத்தம் திடீரென அந்தக் காடே எதிரொலிக்கும் படியாக கேட்டது…..

திரும்பி திரும்பி நாலா பக்கமும் பாம்பாட்டிச் சித்தர் பார்த்தபோது யாரையுமே காணவில்லை…. இளைஞன் கம்பீரமாக “சிரித்தது யார்? எவராக இருந்தாலும் என் எதிரில் வாருங்கள்” என்று கூவினான். அப்போது சட்டைமுனி சித்தர் ஒளி வீசும் திருமேனியுடன் இளைஞனின் முன்பு தோன்றினார். 

இளைஞன் அவரைப் பார்த்தவுடன்ரூபவ் “நீங்கள் யார்? எங்கிருந்து தோன்றினீர்கள்? எதற்காகச் சிரித்தீர்கள்? என்று கேட்டான். பாம்பாட்டிச் சித்தருக்கு தன் முன்னே இருக்கும் சித்தர் யாரென்று தெரியவில்லை.

“இந்த கேள்வியை நான் கேட்க வேண்டுமப்பா. நான் தான் இந்தக் காட்டில் வசிப்பவன். நாட்டிலிருந்து வந்த நீ தான் காட்டிற்கு வந்தக் காரணத்தைக் கூற வேண்டும்” என்றுக் கேட்டார் சட்டை முனி.

“காட்டிற்கு வேறெதுக்கு பாம்பு பிடிக்கும் வைத்தியன் வருவான்…. பாம்புப் பிடிக்கத்தான் வந்தேன்… அதற்கும் காரியத்தைச் சிரித்துக் கெடுத்து விட்டீர்”…. 

பாம்பாட்டிச் சித்தர் கேட்டதற்கு சட்டைமுனி “நான் காரியத்தைக் கெடுத்து விட்டேனா…

அப்பா! சித்தர் பரம்பரையிலேயே மிகவும் சிறியவன் நான். நான் சிரிப்பதற்கான காரணம் என்னவென்றால் எந்தவித பயனும் இல்லாத உனது செயலைக் கண்டுதான்! எந்த விதத்தில் நீ செய்து கொண்டிருக்கும் காரியம் உனக்குப் பலனைத் தரும்” என்று கூறினார். 

இளைஞன் சட்டைமுனி சித்தரிடம் “என்ன கூறினீர்? எந்த வித பலனுக்கா? உலகத்திற்கே நன்மைகளைத் தரக்கூடிய மருத்துவத்திற்காக தான் நவரத்தினப் பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இதையா பயனில்லாத செயல் என்று கூறினீர்? என்று எதிர் கேள்வி கேட்டான்.

“எனக்கு நீ எதைத் தேடி அலைகிறாய் என்பது தெரியும். ஒரு திறமைசாலி தான் நீ என்பதும் எனக்குத் தெரியும். ஒரு பாம்பு உனது உடம்பிற்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது உனக்கு தெரியுமா? அதனை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி… அதனை அடக்கி ஆள்பவர்கள் தான் சித்தர்கள்… இதனால் தான் சொல்கிறேன். வெளியில் திரியும் பாம்புகளை விட்டுவிட்டு உனது உடம்பிற்குள் இருக்கின்ற பாம்பை அடக்க வழியைத் தேடு. பாம்பு இருக்கிற இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடி அலைந்து கொண்டிருக்காதே”….

பாம்பாட்டிச் சித்தர் பயம் என்றால் என்ன என்பதை அறியாதிருந்தவர்.சட்டைமுனி சித்தரின் காலில் சாஸ்டாங்கமாக அவர் சொன்னதைக் கேட்டவுடன் பயந்து விழுந்தான். “வீணாக காடெல்லாம் பாம்புகளைத் தேடி அலைந்தேன். ஒரு பாம்பு எனக்குள் இருப்பதை நான் அறியேன். தாங்கள் தயவுச் செய்து அதனைப் பற்றி தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என்று இளைஞன் பணிவுடன் சொன்னான்.

சித்தர் அவனைப் பார்த்ததும் அவனுக்குள் ஏற்ப்பட்ட பக்குவ நிலையை உணர்ந்து இளைஞனுக்கு விளக்கமளிக்கத் தொடங்கினார்.

“அப்பா…. இந்த உடம்பு தான் இறைவனின் படைப்புகளிலேயே அற்புதமான ஒன்றாகும். ஒரு பாம்பு தலைகீழாக அந்த உடம்புக்குள் ஆதியிலிருந்தே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் குண்டலினி…”

“எப்பொழுதுமே தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அறிவைத் தடுத்து அறியாமை இருளை எழுப்புகிறது. இதனால் தான் யாராலும் இவற்றினுடைய நுட்பத்தை அறிய முடியவில்லை. இந்தப் பாம்பின் உறக்கம்தான் மக்களின் துயரத்திற்கு மூல ஆதாரம்…”

“சுவாசம் என்பது பரமனை உணர்ந்து பாடுபவர்களுக்கு ஒடுங்கும். குண்டலினி என்னும் பாம்பு அதனால்தான் விழித்துக் கொள்ளும். அதுவே சிவத்தில் ஒடுங்கும். இதற்கு பிறகு தான் ஆன்மா சுதந்திரமடைந்து அறிய வேண்டியவைகiளா அறிந்து ஆனந்தமயமாக ஆகும்” என்று சட்டைமுனி என்ற சித்தர் சொல்லி முடித்தார்.

இளைஞன் சித்தரை வணங்கி “குருநாதா! நான் இனி இந்த உத்தமமான வழியை விட்டு விலக மாட்டேன்” என்றான். சட்டைமுனி சித்தர் இந்த இளைஞன் இப்போது பக்குவமடைந்துவிட்டான் என எண்ணி அவனுக்கு அருள்புரிந்துவிட்டு அங்கிருந்து உடனே மறைந்தார்.

இளைஞன் தன்னுடைய கண் எதிரிலே இருந்த ஆத்திமரத்தின் அடியில் அமர்ந்து யோக சாதனையில் சித்தரின் அருள் வாக்குபடி ரூடவ்டுபட்டான். யோகம் கைக்கூடி குண்டலினி அசைந்தாடியது. இப்போது அவன் கண்களுக்கு உலகம் முழுவதும் ஒளிமயமானதாகத் தோன்றியது.

இளைஞனின் கண் முன் ஒருநாள் உபதேச குருவான சட்டைமுனி சித்தர் தோன்றிரூபவ் “அப்பா… உனது பெயர் என்ன? நான் அதனைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டார்.

இளைஞன் என்னப் பெயரைச் சொல்வது என்று சிந்தித்து கொண்டிருந்தான். ஏனென்றால் தூலமான பாம்புகளை இதுவரை பிடித்துக் கொண்டிருந்த தாம் இப்போது குண்டலினி என்ற பாம்பைப் பிடித்திருக்கிறோம்ரூபவ் நாம் அப்போதும் பாம்பாட்டிரூபவ் இப்பொழுதும் பாம்பாட்டி தான் என்கிற சிந்தனை அவனுக்கு தோன்றியவுடன் சட்டைமுனி சித்தரிடம்ரூபவ் “குருதேவா… பாம்பாட்டி தான் எனது பெயர்..” என்றான்.

சிரித்தபடியே சட்டைமுனி சித்தர்ரூபவ் “உண்மைதான்ரூபவ் நீ பாம்பாட்டிச் சித்தன்தான்” என்று அவனை ஆசிர்வதித்துவிட்டு மகிழ்ச்சியோடு அங்கிருந்து மறைந்தான். பாம்பாட்டி சித்தரை அனைத்து வகையான சித்துக்களும் வந்தடைந்தன. 

சாதாரணமாக இரசவாதம் கைக் கூடியது. பாம்பாட்டிச் சித்தருக்கு எதைத் தொட்டாலும் பொன்னாக மாற்றும் ஆற்றல் கை வந்த கலையாகியது. பாம்பாட்டிச் சித்தருக்கு இந்த சித்துக்கள் அனைத்தும் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

நான் நவரத்தினப் பாம்பைத் தேடினேன். நவரத்தினங்களாக கற்களை மாற்றும் சக்தி கிடைத்திருக்கிறது. வேண்டும் என்று நினைத்த இரத்தினக் கற்களை தூக்கி வீசினார். பல இடங்களில் இரவு பகலாகப் பல நாடுகளில் சுற்றினார்.மூலிகைகளால் மக்களின் வியாதிகளை குணமாக்கினார்.

அழுகைக் குரல் ஒன்று ஒருநாள் இவர் வான்வழியே சென்று கொண்டிருக்கும்போது இவர் காதுகளுக்குக் கேட்டது. தீயவர்களின் சேர்க்கையால் மன்னன் ஒருவன் பல தீய காரியங்களைச் செய்துரூபவ் மன்னனை திருத்த அவரது மனைவி எவ்வளவோ முயன்றும் முடியாமல்ரூபவ் அந்த மன்னன் திருந்தாமலேயே இறந்து போனான். எல்லோரும் அவன் பிணத்தைச் சுற்றி அழுது கொண்டிருந்த குரல் தான் பாம்பாட்டிச் சித்தருக்குக் கேட்டது.

இரக்கத்தால் சித்தரின் இதயம் விம்மியது. பூமியில் உடனே இறங்கினார்.ஒரு பக்கம் தனது உடம்பைப் பத்திரமாக வைத்தார். இறந்து போன மன்னனின் முன்பு அமர்ந்திருந்தவர்கள் கூட்டத்தில் இறந்து போன பாம்பு ஒன்றை எடுத்து வீசினார். பதறி அடித்துக் கொண்டு எல்லோரும் விலகி ஓடினர். அரசனின் உடலை விட்டு அரசியார் மட்டும் நகரவேயில்லை…

பாம்பாட்டிச் சித்தர் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலமாக அரசனது உடம்பில் புகுந்தார். இறந்த நிலையிலிருந்த மன்னரின் கை கால்கள் அசைந்தன. மெல்லக் கண்கள் திறந்தன. அரசிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது.

மன்னன் மட்டும் அங்கு நடந்த ஆரவாரங்களில் பங்கேற்கவேயில்லை. செத்துக் கிடந்த பாம்பின் மீதே மன்னனின் கவனம் முழுவதும் இருந்தது. “நான் எழுந்து விட்டேன் பாம்பே… நீயும் எழுந்திரு..” என்றார். இறந்த கிடந்த பாம்பு மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அந்தப் பாம்பு கூட்டத்தை விட்டு விலகி வெளியேற முயற்சி செய்தது.

அதைப் பார்த்த மன்னர்ரூபவ் “என்ன அவசரம் பாம்பே…? நீ இறந்து நிலையிலிருந்து எழுந்து விட்டாய். உன் ஆசை இன்னும் விடவில்லை. உனக்கு உன் மனைவி நியாபகம் வந்துவிட்டதா? உலக வாழ்வில் நீ ஏமாந்து போகாதே” என்று கூறியவர் “ஆடு பாம்பே” என ஆணையிட்டார்.

பாம்பு அவர் கட்டளையின்படி ஆடியது. தான் ஒரு சித்தர் என்பதை அற்புதமான பல தத்துவக் கருத்துக்களை பாடல்களாக பாம்பை முன்னிலைப்படுத்தி வெளிப்படுத்தியும்ரூபவ் குறிப்பால் மன்னன் உடம்பில் புகுந்திருப்பதையும் உணர்த்தினார். யாருக்குமே இது புரியவில்லை.

தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே – சிவன்

சீர் பாதம் தெளிந்து ஆடு பாம்பே

ஆடு பாம்பே தெளிந்து ஆடு பாம்பே சிவன்

ஆடியினைக் கண்டோம் என்று ஆடுபாம்பே.

-(பாம்பாட்டிச் சித்தர் பாடல்)

 

மன்னர் இறந்து பிழைத்தாலும்கூட அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது போலும்… இறந்து போன பாம்பைப் பிழைக்க செய்து ஆடச் சொல்கிறார். அவர் சொல்லுக்கு மகுடிக்குக் கட்டுப்பட்டாற்போல் தப்பாமல் ஆடுகிறது. எப்படி இது? நாட்டு மக்களில் ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போனார்கள். 

அரசிக்கு இதையெல்லாம் பார்த்தபோது ஒன்றுமே புரியவில்லை. அரசியின் மனம் அதிர்ந்தது. ஆடுகின்ற பாம்பையும்ரூபவ் அதனை ஆட்டி வைக்கும் மன்னனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

திரண்ட சொத்துக்கு அதிபதியான நாடாளும் மன்னன்…. இந்த அரசர் செத்துப் பிழைத்தப் பிறகு மூடத்தனம்ரூபவ் மூர்க்கத்தனத்தால் இவரால் எப்படி இவ்வளவு தத்துவ அறிவோடு பேசமுடிகிறது… இது எப்படி? மன்னனிடமிருந்து கேள்வி கேட்க நினைத்தவருக்கு பதில் சொல்வது போல பாடல் வெளிப்பட்டது.

“நாடுரூபவ் நகர்ரூபவ் வீடு மாடுரூபவ் நற்பொருள் எல்லாம்

நடுவன் வரும் போது நாடி வருமோ?...

கூடு போன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ?

கூத்தன் பதங் குறித்து நின்று ஆடாய் பாம்பே!

யானை சேனை தேர் பரி யாவும் அணியாய்

யமன் வரும் போது துணையாமோ அறிவாய்”

அதிர்ந்து போனாள் அரசி… இவர் பாடுவது நாம் நினைப்பதற்கு பதில் சொல்வது போல உள்ளது… முக்கனியும் பாலும் முழுநேரமும் பெண்கள் சுகம் என்று பொழுதைக் கழித்தவர் இன்று இப்படிப் பேசுகின்றாரே…

பதில் பாடலாய் அதற்கும் வந்தது.

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவை பண்டங்களும் முந்தியுண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோமென்று ஆடாய் பாம்பே!

என்று மன்னரிடமிருந்து ராணியின் எண்ணத்திற்குப் பாடலில் பதில் வந்தது.ஆடிப்போய் விட்டது ராணியின் உடம்பு. இருந்தாலும் இப்போது நேரடியாக மன்னரைப் பார்த்து கேள்விகள் கேட்கத் தொடங்கினாள்.

“சுவாமி…. யார் தாங்கள்? இந்த உடம்பில் புகுந்திருப்பது எங்கள் மன்னரா அல்லது யாராவது மகானின் ஆத்மாவா?” பதிலை பணிவுடன் கேட்ட அரசிக்கு மன்னர் சொல்லத் தொடங்கினார்.

“அரசியே… உமக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. செத்துப் போன மன்னனைச் சுற்றி அழுது கொண்டிருந்த உங்களின் துயரத்தைப் போக்குவதற்காகத்தான் மன்னனின் உடம்பில் புகுந்திருக்கிறேன். பாம்பாட்டிச் சித்தர் என்று என்னை அழைப்பார்கள்” என்றார்.

அரசி உண்மையை உணர்ந்துரூபவ் “சுவாமி…. தெய்வமாக வந்து எங்களுக்கு உதவி செய்தீர்! தாங்கள் எங்களுக்கு தெளிவான வழியைக் காட்டி அருள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டாள்.

பல பாடல்கள் உபதேசமாகரூபவ் தத்துவமாக மன்னரிடமிருந்து வெளிவந்தன. அரசி இந்த பாடல்களை உள்ளத்தில் பதித்து கொண்டு அதன் மூலம் அமைதி கொண்டாள். உண்மை அனைவருக்கும் புரிந்து விட்டதே.. இந்த வேஸம் இனி எதற்கு? என்று நினைத்த சித்தர் அரசனின் உடம்பிலிருந்து வெளியேறியவுடன் அரசனின் உடம்பு கீழே விழுந்தது. அங்கு அதுவரை ஆடிக்கொண்டிருந்தப் பாம்பு மறைந்தது.

அரசி மன்னனுக்குரிய இறுதிச் சடங்கை முடித்தாள். அரசி சித்தரின் உபதேசங்களைக் கருத்தில் கொண்டு அதன்படி நடந்துக் கொண்டு உயர்வடைந்தாள். 

பாம்பாட்டிச் சித்தர் அரசனின் உடம்பிலிருந்து வெளியேறியவுடன் மறைத்து வைத்திருந்த தனது உடலில் புகுந்தார். பலவித அறிவுரைகளை மக்களுக்கு புகட்டினார். ஆனால் விழலுக்கிறைத்த நீராய் அனைத்தும் போனது. இவர்களுக்குத் தேடிப் போய் உதவி செய்தும் திருந்தவில்லையே என வருந்திய பாம்பாட்டிச் சித்தர் யாருடைய கண்ணிற்கும் படாமல் மறைந்தார். மருதமலையில் இவர் தவம் செய்த குகை காணப்படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர் சித்தி நிலையை மருதமலையில் அடைந்தார் என்று சிலரும்ரூபவ் துவாரகையில் சித்தி அடைந்தார் என்று சிலரும்ரூபவ் விருத்தாசலத்தில் (பழமலை) சித்தி அடைந்தார் என்று சிலரும் சொல்லுகின்றனர். எனினும் இவரது நினைவிடம் மேற்கூறிய மூன்று தலங்களிலும் உள்ளது.

பாண்டிய நாட்டில் பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்தார் எனவும்ரூபவ் மருதமலையில் வாழ்ந்தார் எனவும் சொல்லப்படுகிறது. அவர் வாழ்ந்ததற்கு அடையாளமாக மருதமலையில் பாம்பாட்டிச் சித்தர் குகைரூபவ் சுணை போன்றவைகள் காணப்படுகின்றன.

ஒரு நூலில் பாம்பாட்டிச் சித்தர் திருக்கோகர்ணத்தில் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பாம்பாட்டிச் சித்தரின் நூல்கள்: பாம்பாட்டிச் சித்தர் பாடல்ரூபவ் சித்தராரூயஅடம் மற்றும் சில வைத்திய நூல்கள் முதலியன…..