அப்பூதியடிகள் சோழ வளநாட்டின் அந்தணர் குலத்தில் திங்களுரில் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானுக்கு அன்பர். அப்பூதியடிகள் திருவாவுக்கரசு சுவாமிகளை கண்டறிவதற்கு முன்னரே அவருடைய திருத்தொண்டினால் இறைவன் அதற்கு அருளிய திருவருட் பண்பையும் பற்றி அப்பூதியடிகள் கேள்விப்பட்டு மானசீகமாக நாவுக்கரசர் மீது பேரன்பு கொண்டவர். முனைவி மக்களோடு இல்லற வாழ்க்கையில் ரூடவ்டுபட்டு பொய்ரூபவ் களவுரூபவ் கோபம்ரூபவ் காமம் முதலிய குற்றங்களை வெறுத்து ஒதிக்கயவர். “திருநாவுக்கரசு” என்ற பெயரை தன்னுடைய வீட்டிலுள்ள கருவிகளுக்கும்ரூபவ் மக்களுக்கும்ரூபவ் பசுக்களும்ரூபவ் எருமைகளுக்கும் மற்றைய பொருட்கள் எல்லாவற்றுக்கும் வைத்து அன்புடன் அவற்றை அழைத்து வந்தார். இவை மட்டுமல்லாமல் தண்ணீர்ப் பந்தல்ரூபவ் அவர் அமைத்து திருமடம் போன்றவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவில்லாத அறச்செயல்களைப் புரிந்து வந்தார்.
திங்களுர் வழியாக திருநாவுக்கரசர் திருப்பழனம் என்ற சிவ தலத்தில் தரிசனம் முடித்துவிட்டுரூபவ் இதுபோன்ற பல சிவதலங்களில் தரிசிப்பதற்காக அப்பூதியடிகள் வாழ்ந்து வரும் ஊரிலுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டு அங்குச் சென்றார்.
தண்ணீர்ப் பந்தலில் மக்கள் திரள் திரளாக சென்று பயன்யடைந்ததைக் கண்ட திருநாவுக்கரசர் வியந்தார். “திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தல்” என்ற பெயர் அந்த தண்ணீர்ப் பந்தலின் பெயராக இருந்ததைப் பார்த்த திருநாவுக்கரசர்ரூபவ் இந்த பெயரை வைத்தது யார்? என்று கேட்டார்….
அங்கிருந்தவர்கள்ரூபவ் இதனையும்ரூபவ் இதுபோன்ற பல அறச் சாலைகளுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரை வைத்து வழிநடத்துபவர் அப்பூதியடிகள்.. நீங்கள் அவரிடம் இவற்றை பற்றிய விளக்கத்தை கேட்டு அறியலாம் என்றனர்.
இப்படி செய்வதற்கான காரணம் என்னவாக இருக்கும்! என்ற எண்ணத்தில் அவர் இப்போது எங்கு இருப்பார்? என்று கேட்க அங்கிருந்தோர் அப்பூதியடிகள் இப்போதுதான் வீட்டிற்குச் சென்றார். அவருடைய வீடு தொலைவில் இல்லைரூபவ் சமீபத்திலேயே உள்ளது… சென்று பாருங்கள் என்றனர்.
திருநாவுக்கரசர் அப்பூதியடிகளாரின் வாசலை அடைந்தார். அப்பூதியடிகள்ரூபவ் சிவனடியார் ஒருவர் தன்னுடைய வாசலில் நின்று கொண்டிருப்பதை கேள்விபட்டவுடன் வீட்டிற்குள்ளிருந்து விரைந்து வந்து அவரை பார்த்து திருவடிகளை வணங்க முயன்றார்.
திருநாவுக்கரசர் அதற்கு முன்பே அப்பூதியடிகளை வணங்கிணார். அப்பூதியடிகள் “நீர் கருணை வடிவமுடையவர்ரூபவ் நான் செய்த தவம் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்ததற்காக…..” என்றார்.
“யாம் திருப்புனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வருகிறேன். நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை பார்த்தவுடன்ரூபவ் நீர் செய்துவரும் அறச் செயல்களை பற்றிக் கேள்விபட்டுரூபவ் உம்மைக் காண்பதற்காக இங்கு வந்தோம்” என்றார் கோதில் மொழிக் கொற்றவராகிய திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் “அப்பூதியடிகளே…. சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலுக்கும் உமது பெயரை வைக்காமல் வேறொரு பெயரை வைக்க காரணம் என்னவோ!” என்று கேட்டார்
“சிவனடியாரே! சமணர்களுடன் சேர்ந்துக் கொண்டு பல்லவ மன்னன் இழைத்த சூழ்ச்சிகளையெல்லாம் தமது திருத்தொண்டின் வலிமையினாலே திருநாவுக்கரசர் வென்றார்… நீர் அத்தகையவரின் திருப்பெயரையாரூபவ் வேறொரு பெயர் என்றீர்!” என்று அப்பூதியடிகள் வெகுண்டு கேட்டார்.
கடலில் கட்டிப்போட்ட கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து கரையேறியவர் திருநாவுக்கரசர்! இந்தப் புவனத்தில் அந்தப் பெரியாரின் பெருமையை அறியாதார் யார்தான் உண்டு? நீர் எங்கே வசிப்பவர்? நீர் மங்கலமான சிவனடியார் வேடத்துடன் இருந்தும் இவ்விதமாக வெம்மை மொழி பேசிவிட்டீர்! யார் நீர்? சொல்லுங்கள்… என்று சினத்துடன் கேட்டார்.
அப்பூதியடிகள் கேட்டதற்கு திருநாவுக்கரசர்ரூபவ் “யாம் புறச்சமயமான சமணத் துறையினின்றும் கரையேறும் பொருட்டுரூபவ் சிவபெருமானால் பெருஞ் சூலைநோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு உயர்ந்தவன் நான்…” என்றார்.
அப்பூதியடிகள்ரூபவ் இவர் தான் திருநாவுக்கரசர் என்று புரிந்து கொண்டு அவரின் திருவடிகளை வணங்கினார். திருநாவுக்கரசரும் அப்பூதியடிகளை எதிர் வணங்கினார். திருநாவுக்கரசரின் வருகையை தமது மனைவிரூபவ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துவிட்டு அவரை தமது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று மனைவிரூபவ் மக்களால் அவரது கால்களை நீரால் சுத்தம் செய்தார். அந்த நீரை அவர்கள் அனைவரும் தங்கள் தலைமீது தெளித்துக்கொண்டு புரோஸனம் செய்து மகிழ்ந்தார்கள்.
அவரை ஒருபீடத்தில் அமர்த்திவிட்டு அவரிடம் “திருவமுது செய்தருளல் வேண்டும்” என்று வேண்டியவுடன் திருநாவுக்கரசர் உடன்பட்டார்.உணவு பரிமாறுவதற்காக இலையை தமது மூத்தப் பிள்ளை திருநாவுக்கரசனை அழைத்து கொண்டு வரச் சொன்னார். அறுசுவை உணவும் தயாராகியது. திருநாவுக்கரசன் கொல்லைப்புறத் தோட்டத்திலிருந்த வாழை மரத்தின் குருத்திலையை அறுத்தான். அதிலிருந்த பாம்பு அவனை தீண்டிற்று. அதைக் கூறினால் திருவமுது உண்பது நின்றுவிடும் என எண்ணி யாரிடமும் கூறாமல் இலையை தாயாரிடம் கொடுத்தான்.
தலைக்கேறிய பாம்பின் விசத்தால் அவன் சுருண்டு விழுந்ததைக் கண்ட பெற்றோர்கள் திகைத்து போனார்கள். திருநாவுக்கரசனின் கையிலிருந்த காயத்தைக் கண்டு பாம்பு தீண்டியதால்தான் மாண்டு விழுந்தான் என்பதை கண்டறிந்தனர். அப்பூதியடிகளும்ரூபவ் மனைவியாரும் சிறிதும் இதனை வெளிக்காட்டாமல் மகனின் சவத்தை ஒரு பாயில் சுருட்டி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு திருவமுது செய்வதை கவனித்தனர். இலையை விரித்து அனைத்து வகையான காய்கறிகளையும் வைத்துவிட்டு திருநாவுக்கரசரை திருவமுது உண்பதற்கு அழைத்தனர். அவர் எழுந்து கை கால்களை கழுவிவிட்டு இலைக்கு முன் அமர்ந்து ஆசனம் செய்துவிட்டு திருநீறை அவர் இட்டுக்கொண்டு அப்பூதியடிகளுக்கும்ரூபவ் அவரது மனைவிக்கும் கொடுத்துவிட்டு அவர்களுடைய மூத்த மகனை அழைக்கச் சொன்னார்.
அப்பூதியடிகள்ரூபவ் இப்போது அவன் இங்கு உதவமாட்டான் என்று கூறரூபவ் பதைத்து போன திருநாவுக்கரசர் இறைவன் திருவருளால் ஒருவிதத் தடுமாற்றம் அவருக்குள் உண்டாயிற்று. திருநாவுக்கரசர் நடந்ததை அப்பூதியடிகளிடம் வினவ பயந்து அனைத்தையுயம் சொல்லிவிட்டார். திருநாவுக்கரசர் உடனே அங்கிருந்து எழுந்து அவர்களுடைய மகனின் முன்பு சென்றுரூபவ் “ஒன்றுகொலாம் என்ற திருப்பதிகத்தை” பாடி பாம்பின் விடத்தை நீக்கினார். மூத்த மகனான திருநாவுக்கரசன் எழுந்து அவருடைய திருவடிகளை வணங்கினான். அவர் அவனுக்கு தூய வெண்ணீறு (விபூதி) கொடுத்தார்.
அப்பூதியடிகளும்ரூபவ் அவரது மனைவியும் “ சுவாமிகள் அமுது செய்தருள்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான்!” என்று மனம் வருந்தினர்.
திருநாவுக்கரசர் திருஅமுது உண்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தார். கோமயத்து நீரால் தரையைப் பொலியுறுமெழுகிரூபவ் வெண் சுண்ணத்தால் கோலமிட்டுரூபவ் மங்கலத் தீபமேற்றிரூபவ் வாழை இலையை விரித்துரூபவ் நன்னீரால் கழுவி சம்பிரதாயப்படி வலது பக்கம் வைத்தார்கள். அப்பூதியடிகளாரையும்ரூபவ் அவரது புதல்வர்களையும் தம்முடன் உணவருந்த வேண்டியவுடன் அவர்களும் சேர்ந்து அமுதுண்டனர். திருநாவுக்கரசர் பலகாலம் அவருடன் நட்புப் பெருகியவராய் ஒருமையோடு தங்கியிருந்தார்.
இதற்கு பிறகு திருநாவுக்கரசர் திருப்பழனம் என்னும் சிவத்தலத்திற்குச் சென்று சிவபிரானை வணங்கிப் பாமாலை பாடினார். அப்பூதியடிகளின் திருத்தொண்டின் பெருமையை “சொன்மாலை” என்ற திருப்பதிகத்தின் கடைக்காப்பில் சிறப்பித்துப் பாடினார். இத்தகைய பாக்கியத்தைப் பெற்ற அப்பூதியடிகள்ரூபவ் அறச் செயல்களை புரிந்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய பெருநிலையை தில்லையம்பலத்துள் ஆடும் நடராஜப் பெருமானின் திருவடி நிழலை அடைந்து பெற்றார்.
“ஒரு நம்பி அப்பூதியடியார்க்கும் அடியேன்”
- சுந்தரர்