நாயன்மார்கள்

உருத்திர பசுபதி நாயனார்

காவிரி நதி பாயும் சோழ வளநாட்டில் திருத்தலையூர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பசுபதியார் என்ற பெயருடைய ஒரு வாழ்ந்து வந்தார். வேதத்தில் விளங்கும் உருத்திர மந்திரத்தினை உள்ளன்போடு ஓதிவிட்டு சிவபெருமான் திருவடிகளை அவர் தியானித்து வந்தார்.

அந்த ஊரில் பறவைகளும்ரூபவ் வண்டுகளும் இன்னொலிகள் எழுப்பும் ஒரு தாமரை தடாகம் ஒன்று உள்ளது. குளத்திற்கு உள்ளே வரால் மீன்கள் பிறழரூபவ் கயல் மீன்கள் நீரில் பாயும்! நெருப்பு எழுவதுபோல அந்நீரிடையே வாசைன நெகிழும்.

அந்த தாமரைத் தடாகத்தில் பசுபதியார் இறங்கிக் கழுத்தளவு உள்ள குளிர்ந்த நீரினுள் நின்றுகொண்டுரூபவ் தமது இரண்டு கைகளையும் தலைமீது குவித்துக் கொண்டு மனமுருகி உள்ளன்போடு சிவபிரானின் திருவடிகளையே குறிவைத்து அருமறைப் பயனாகிய உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவும் பகலும் இடைவிடாது இந்த மந்திரத்தை ஓதிவந்தார். அவர் சில காலம் உருத்திர மந்திரத்தை ஓதுவதையே தம் திருத்தொண்டாக நடத்திவந்தார்.

பசுபதியார் செய்துவந்த இந்தவிதமான தவத்தின் பெருமையையும்ரூபவ் உருத்திர மந்திர நியதியின் அளவு மிகுந்து நிற்றலையும் கண்ட சிவபெருமானின் திருவுள்ளம் மகிழ்ந்துரூபவ் திருவருளை அவருக்குப் புரிந்தார். பசுபதியார் அதன் விளைவாக தீதில்லாத நிலையுள்ள சிவபுரி எல்லையில் சேர்ந்து இறைவனது நிழலில் இனிதாக அமர்ந்தார்.

அவருக்கு உருத்திர பசுபதி நாயனார் என்ற பெயர்ரூபவ் உருத்திர மந்திரத்தை பெரும் அன்பால் இடைவிடாமல் ஓதி சிவபெருமானின் திருவடிகளை அடைந்ததால் வழங்கலாயிற்று.