நாயன்மார்கள்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

ஐயடிகள் காடவர்கோன் என்ற மன்னர் பல்லவர்களின் குல மரபில் வாழ்ந்து வந்தார். வறுமைரூபவ் பகை அவற்றால் வரும் துன்பங்கள் ஆகியவற்றைப் போக்கிரூபவ் சைவ நெறி போற்றும் வழியை அறிந்துரூபவ் காஞ்சிபுரத்திலிருந்து அவர் ஆட்சி புரிந்து வந்தார். பெருஞ்செல்வத்தால் அவர் செங்கோல் செலுத்தி புகழ்பெற்று விளங்கினார். பெருமையுடன் உலகிலுள்ள எல்லா உயிர்களும் இனிமையாக வாழ வேண்டுமென்றுரூபவ் அறநெறி தழைத்தோங்க ஆட்சி புரிந்தார். அவர் சைவ நெறியும்ரூபவ் வேத நெறியும் விளங்கச் செய்து பகைப்புலங்களை வென்றுரூபவ் தமக்கு அடங்கி ஒடுங்கியிருக்கச் செய்தார். தமது ஏவல் வழியிலே பிற அரசர்களைப் பணி செய்திருக்க செய்தார். அவர் வல்லவராய் வடமொழி தென்மொழி நூல்களிலும்ரூபவ் கலை ஞானங்களிலும் திகழ்ந்தார்.

இவ்வாறு சிறந்த ஆட்சியை புரிந்து வந்த ஐயடிகள் சிவனெறியிலும் சிறந்து விளங்கினார். அரசாட்சியைரூபவ் “இந்த அரசியல் இன்னல் தருவதாகும்!” என எண்ணி தமது மைந்தனுக்கு முடிசூட்டிவிட்டுச் சிவனெறியிலே திருத்தொண்டு செய்ய முனைந்தார். இவர் சிவபெருமான் திருக்கோயில்கள் எல்லாவற்றையும் தரிசித்துரூபவ் வணங்கித் திருத்தொண்டு புரிந்துரூபவ் தாம் சென்ற ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொரு வெண்பா பாடித் துதித்து வந்தார்.

சிதம்பர நகருக்கும் அவர் பொங்கியெழும் காதலுடன் சென்று சிவபெருமானின் திருக்கூத்தைக் கண்டு கும்பிட்டுச் செந்தமிழ் வெண்பாவாகிய மலரினைப் புனைந்தார்.

ஐயடிகள் இவ்வாறுரூபவ் திருவருளை தில்லைக் கூத்தரை வணங்கி வழிபட்டுப் பெற்றுரூபவ் சிலநாள் அங்கு தங்கியிருந்தார். பின்பு சிவதலங்கள் எல்லாவற்றிற்கும் சென்றுரூபவ் வெண்பாக்கள் பாடித் துதித்தார். தமக்கிசைந்த திருப்பணிகளை சிவனடியார்கள் இன்பமுறுவதற்காக பன்னெடுங்காலம் செய்தபின் இவ்வுலக வாழ்வை அவர் நீத்துரூபவ் சிவபெருமான் திருவடியின் கீழே வழிவழி நிற்கும் அன்பர்களோடு கூடி இருந்தார்.

மேலும்

சோமாசி மாற நாயானார்
View Details
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
View Details
ஏனாதிநாத நாயனார்
View Details