நெடுமாறன் என்ற அரசர் ஏழுலகங்களிலும் தமது பெருமை விளங்கும்படி பாண்டிய நாட்டில்ரூபவ் மதுரை மாநகரில் ஆண்டு வந்தார். சமண நெறியையே அவர் தவநெறியென்று கருதினார். சைவத்தைரூபவ் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் திருவடிகளை அடைந்து அவற்றை மேற்கொண்டுரூபவ் சிவமணம் பெருக பாண்டிய நாடு முழுவதிலும் செய்தார். சைவ நெறியை திருவைந் தெழுத்தின் நெறியாக காத்தார்.
நெல்வேலிப் போர்க்களத்தில் பாண்டிய நெடுமாறனார் தம்முடன் போர் செய்ய வந்த வடநாட்டுப் பகையரசரோடுரூபவ் நால்வகைச் சேனைகளையும் தம்மோடு அணிவகுத்துச் சென்று போரிட்டார். இருதிறத்துப் படைவீரர்களும் அதன் பிறகு போரிட்டு வெட்டி வீழ்த்திய யானைகளின் உடற்றுண்டங்களும்ரூபவ் குதிரைகளின் உடல்கள் அறுபட்ட துண்டங்களும்ரூபவ் மலை போலக் குவிந்த போர் வீரர்களின் தலைகளும் ஆகிய இவற்றினின்றும் வரும் இரத்தப் பெருக்குக் கலக்கப்பெற்ற கடலானது.
இதற்கு முன்னே உக்கிர குமார பாண்டியன் பெருகி வந்த கடல் சுவர் வேல் வாங்கியது போலரூபவ் மீளவும் இவர் வேல் வாங்கும்படி பெருகி நின்றது. ஊழிக் காலத்து மேகங்களின் முழக்கம் போல குதிரைகளின் கனைப்பு ஒலியும்ரூபவ் வீரர்களின் படைக் கலங்களின் ஒலியும்ரூபவ் யானைகளின் பிளிற்றொலியும்ரூபவ் இசைக் கருவிகளின் ஒலியும் கேட்டது. அவற்றைச் சிறையிடுதற்கு விலங்கை விடுக்கும்படி உக்கிரகுமார பாண்டியன் போல ஒலித்தன. பூதங்களும்ரூபவ் பேய்களும் போர்க்களத்தில் வெட்டுண்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவில் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடின. இத்தகைய பாண்டிய மன்னனின் சேனைகளிடம் வடபுலத்தரசனுடைய சேனைகள் சிதைந்து தோற்றுப் போயின. அப்போது தமது வேப்ப மாலையுடன் வாகை மாலையையும் சேர்த்து பாண்டிய பெருமானாகிய நெடுமாறனார் அணிந்தார்.
நெடுமாறனார் சோழ மன்னரின் திருமகளாராகிய மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்து இல்லறத்தில் மகிழ்ந்து சிவத்தொண்டுகளையெல்லாம் சிறப்புறும்படி விளங்கச் செய்தார். பின்பு சிவனருள் பெருகும்படி ஆட்சி புரிந்தார். நெடுங்காலமாக உலகில் திருநீற்று நெறியாகிய சிவநெறி விளங்க அரசு புரிந்தபின்ரூபவ் எல்லாராலும் போற்றப்படும் சிவபெருமான் திருவருளாலே பெரிய சிவலோகத்தையடைந்து பணிந்து இன்புற்றிருந்தார்.