தியானித்து உறையக்கூடிய பல அற்புத மலைத்தலங்களில் ஒன்று தான் தேனிமலை சித்தர்கள் மிகவும் விரும்பி வந்த மலை. இம்மலை புதுக்கோட்டையிலிருந்து காரையூரிலிருந்து அதாவது பொன்னமராவதியில் அமைந்துள்ளது. குடகுப் பாறை தெய்வ ரகசியங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள். இவர் தேனிமலையில் தியானம் புரிந்து தெய்வ ரகசியங்களை அறிந்து கொண்டவர்.
கொப்புப் பாறைக் கஷாயம், கொப்பு பஸ்மம், கொப்புக் குளிகை, கொப்பு வாகடம்,கொப்பு லேகியம், கொப்பு மாத்திரை ஆகிய ஆறுவகைப் பாறை மூலிகைத் துறையில் முருகப்பெருமானிடமிருந்து அருள்பெற்று தீராத நோய்களை தீர்க்கக்கூடிய சித்து வல்லமையை பெற்றவர்.
இவர் இன்றும் தேனிமலையில் ஜீவசமாதி அடைந்து தம்மை அண்டிவரும் அனைவரின் தீராத நோய்களை தீர்த்து வைக்கிறார். கொடிநீர் காவடி சித்தர், முக்தியானந்த பரல்மூர்த்தி சித்தர், கலம்பு மாடக்குடுவைசித்தர் போன்ற சித்தர்களுக்கு குருவாக விளங்கினார். இன்று இந்தியா முழுவதும் கொப்புப் பாறை மருத்துவம் எனும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மருத்துவ முறை இவர் உருவாக்கிய 110 வைத்திய முனிகள் தான்.
திருமண தோஷங்கள் நீங்கிட திங்கள் கிழமை கார்த்திகை அன்றும்,செவ்வாய்க்கிழமை ராகுகாலத்திலும், பௌர்ணமிஅன்றும் தேனிமலையினை கிரிவலம் வர வேண்டும். முருகப்பெருமானின் அருளால் பல்வேறு அதிஅற்புதங்களை புரிந்தவர் ஸ்ரீ பெருமானந்த சித்தர்.ஒவ்ஷத ருத்ர பூஷணத்தை அறிந்தவர்.
ஸ்ரீதன்வந்திரி பெருமானின் ஒவ்ஷத மாதவ லோகத்தில் ஸ்கந்த ஜோதியாய்ப் பிரகாசிக்கிறார்.பல சித்தர்களுக்கு குருகுல வாசம் பெற்றுத் தந்தவர் இவர்.இவருடைய உறக்கநிலையில் (மானுட) சூட்சம தரணி ஜீவஜோதி, ஸ்கந்த லோகத்தில் பெருந்தவம் பூண்டிருக்கும்.தேவாதி தேவர்கட்கு ஓர் அற்புத ஜீவாலயமாக இவரின் ஜீவாலயம் இன்றும் புதுக்கோட்டை அருகே தேனிமலை அடிவாரத்தில் அருளுகின்றது.