நாயன்மார்கள்

கழற்சிங்க நாயனார்

கழற்சிங்கர் என்ற அரசர் உலகத்தில் பழமையான காடவர் (பல்லவர்) குலத்தில் வாழ்ந்து வந்தார். தம் அறிவினில் சிவபெருமானின் திருவடிகளை தவிர வேறு எதையும் நினைக்காதவர். வடபுலத்துப் பகையரசர்களை சிவபெருமானின் திருவருளினால் போர்க்களங்களுக்குச் சென்றுப் போரில் வென்றுரூபவ் அறநெறி தவறாமல் அவர்களது நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தார். 

மெய்யான திருத்தொண்டுகளை அவர் சிவபெருமானின் திருக்கோயில்கள் பலவற்றிற்கும் சென்றுரூபவ் பேரன்போடு இறைவனை வணங்கி செய்து வந்தார்.

அவர் இவ்வாறு பல சிவதலங்களை வழிபட்டு வரும்போது சிவபுரி என்று வழங்கும்படியான தென்திருவாரூயஅp;ரை அடைந்து அரசியல் ஆயத்தராகிய ஐவகைக் குழுக்கள் சூழரூபவ் திருக்கோயிலினுள் சென்றுரூபவ் புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கினார்.

அப்போது அவரது பட்டத்தரசியார் திருக்கோயிலை வலம் வரும்போது ஒரு புதிய மலர் கீழே விழுந்து கிடந்தது. அதையெடுத்து ஆவலோடு மோந்தாள்.செருத்துணையார் என்ற திருத்தொண்டர் ஆண்டவனுக்குரிய புதுமலரைப் பட்டத்தரசி முகர்ந்ததைக் கண்டு சினங்கொண்டார்.

ஒரு பெண் இறைவனுக்குரிய புதுமலரை முகர்ந்து பார்ப்பதா? இது பெரும் சிவ அபராதமாகும்… என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக சென்று கருவியொன்றை எடுத்து வந்தார். பின்பு பட்டத்தரசியின் கூந்தலைப் பிடித்து அவளை கீழே தள்ளிஅவளது மூக்கை பிடித்து அறுத்துவிட்டார்.

பட்டத்தரசியின் மூக்கிலிருந்து வந்த இரத்தத்தை கண்டு நடுநடுங்கி கீழே விழுந்து ஓவென்று புலம்பினாள். அந்த சமயத்தில் புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கிவிட்டு கழற்சிங்கர் அங்கு வந்து பார்த்தவுடன்ரூபவ் “இக்கொடிய செயலை இங்கு சிறிதும் அஞ்சாமல் செய்தது யார்?” என்று கேட்டார்.

செருத்துணை நாயனார் நடந்ததைக் கூறரூபவ் கழற்சிங்கர் உடனே “அப்படியா!இறைவனுக்குரிய பூவை எடுத்தது கையன்றோ? அதை தானே முதலில் துண்டிக்க வேண்டும்?” என்று கூறி தமது உடைவாளை எடுத்து தன் காதல் மனைவியின் கையை துண்டித்தார். 

அமரர்கள் இத்தகைய செயற்கரும் செய்கையைக் கண்டு பூமாரி பொழிந்தார்கள்.ஹர ஹர என்று திருத்தொண்டர்களும் முழக்கம் செய்தனர்.பன்னெடுங்காலம் கழற்சிங்க நாயனார் அரசாண்டு சிவத்தொண்டு புரிந்துரூபவ் சிவபெருமானின் திருவடி நிழலை இறுதியில் அடைந்தார்.

மேலும்

விறன்மிண்ட நாயனார்
View Details
சிறுத்தொண்ட நாயனார்
View Details
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details