நாயன்மார்கள்

புகழ்த்துணை நாயனார்

புகழ்த்துணை நாயனார் செருவிலிப்புத்தூரில் (கும்பகோணத்திற்கு தெற்கில் உள்ளது) சிவவேதியர் குலத்தில் தோன்றி அகம்படிமைத் தொண்டை மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு செய்து வந்தார்.

சிவபெருமானை சிவாகம விதிப்படி புகழ்த்துணையார் அர்ச்சித்து வழிபட்டு வரும் நாளில் உலகில் பஞ்சம் தோன்றியதால் உணவின்றி மக்கள் யாவரும் பசியால் மிகவும் வருந்தினர். “எமது பெருமானை நான் விடுவேனல்லேன்” என்று புகழ்த்துணையார் குளிர்ந்த நீரினால் பன்மலரை கொண்டு இரவு பகலாக இறைவனை அர்ச்சித்து வந்தார்.

அவர் ஒருநாள் சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் நீராட்டிக் கொண்டிருக்கும்போதுரூபவ் மிகுந்த பசியால் வருந்திரூபவ் நிலை தளர்ந்துரூபவ் திருமஞ்சனக் குடத்தைத் தூக்க முடியாமல் கைதவறிரூபவ் சிவபெருமானுடைய திருமுடியின்மீது விழுந்து உடையும்படி கை நழுவவிட்டு விட்டுரூபவ் நடுநடுங்கிச் சோர்ந்து தாமும் விழுந்தார்.

கனவில் சிவபெருமான் தோன்றிரூபவ் “உனக்கு நான் இந்தப் பஞ்சகாலம் தீரும்வரை இங்கு ஒவ்வொரு பொற்காசு வைப்பேன்!” என்று சொல்லிவிட்டு மறைந்தார். துன்பம் நீங்கி துயில் நீங்கி புகழ்த்துணை நாயனார் எழுந்தார். சிவபெருமான் அப்போது தமது பீடத்தின் கீழேரூபவ் ஒரு பொற்காசை வைத்தருளினார். புகழ்த்துணையார் பெரும்பசியினால் வாடியதால் அந்தக் காசைக் கைக்கொண்டு முகமலர்ச்சி பெற்று மகிழ்ந்தார்.

இறைவன் நாள்தோறும் அளித்து வந்த பொற்காசைக் கொண்டு பஞ்சம் நீங்கும்வரை துன்பத்தை நீக்கினார். அகம்படித் தொண்டை சிவபெருமானுக்கு புரிந்து புகழ்த்துணையார் பலகாலம் வாழ்ந்தார். பின்பு தேவர்கள் சேரும்படியான சிவபெருமானின் திருவடியில் சேர்ந்து இன்புற்றார். 

மேலும்

விறன்மிண்ட நாயனார்
View Details
சாக்கிய நாயனார்
View Details
மானக்கஞ்சாற நாயனார்
View Details