கோட்புலியார் என்ற பெரியார் சோழவள நாட்டின் திருநாட்டியத்தான் குடியிலே வேளாளர் மரபினில் வாழ்ந்து வந்தார். அவர் சோழ மன்னரது சேனைத் தலைவராக விளங்கி பகைவர்களை எதிர்த்துப் போரிட்டுரூபவ் புகழும் வெற்றியும் கொண்டு திகழ்ந்தார். சிவபெருமானின் திருக்கோயில்தோறும் அரசரிடம் தாம் பெற்ற சிறந்த செல்வ வளங்களை எல்லாம் கொண்டு திருவமுதுக்குரிய செந்நெல்லை வாங்கி நெல்லை மலைச்சிகரம் போல் சேமித்து வைப்பார். அவையே அவருடைய தனிப்பெரும் திருத்தொண்டு… அவர் நெடுங்காலம் அத்திருப்பணியை செய்து வந்தார்.
அவர் இவ்வாறு திருப்பணி செய்து வரும் காலத்தில் அரசனது ஆணையை ஏற்றுரூபவ் போர்முனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது தாம் திரும்பி வரும்வரையில் சிவபெருமானின் திருவமுதுக்காக தேவைப்படும் அளவு செந்நெல் நெற்கூடுகளைக் கட்டி நெல்லை அக்கூடுகளில் சேமித்து வைத்தார். பிறகு அவர் தனித்தனியாக தமது சுற்றத்தார்களை அழைத்துரூபவ் “நான் சேமித்து வைத்துள்ள இந்நெற்கூடுகளை சிவபெருமானுடைய அமுதுபடிக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும்.. உங்களின் தேவைக்கன்று… அப்படி மனதளவில் நினைத்தால் திருவிரையாக்கலி என்று சொல்லி போர் முனைக்கு இறைவன் ஆணை வைத்துவிட்டுச் சென்றார்.
அந்த நாட்டில் கோட்புலியார் போருக்குச் சென்ற சில நாட்களில் கடும் பஞ்சம் வந்தது. “உணவுப் பொருள் இல்லாமல் நாம் மாண்டுபோவதைக் காட்டிலும் இறைவரின் திருவமுதுக்காகச் சேமித்து வைத்திருக்கும் நெல்லையெடுத்துப் பயன்படுத்திக் கொள்வோம். திரும்பவும் பஞ்சம் நீங்கியபின் கொடுத்து விடுவோம்” என்று கோட்புலியாரின் சுற்றத்தார்கள் எண்ணி துணிவுடன் நெற்கூடுகளைக் குலைத்து நெல்லையெடுத்துப் பயன்படுத்தினார்கள்.
போர் முனையில் கோட்புலியார் வெற்றி கொண்டு மன்னரிடம் நிதி பெற்றுத் திரும்பினார். தம் சுற்றத்தார்கள் வழியில் செய்த பிழையை அறிந்தும் எதுவும் தெரியாததைபோல் சென்று “அச்சுற்றத்தாரை எல்லாம் வெட்டி வீழ்த்துவேன்” என்று துணிவு கொண்டு வந்தார்.
அவரது சுற்றத்தார்கள் வெற்றி வீரராகத் திரும்பிய கோட்புலியாரை எதிர்க்கொண்டு வரவேற்றார்கள். அவர்களுக்கு இனியமொழி கோட்புலிநாயனார் கூறிவிட்டு வீடு சேர்ந்தார்.
பைந்துகிலும் நிதியமும் தருவதாக அவ்வூரிலுள்ள தமது சுற்றத்தாரிடம் கூறிரூபவ் தமது மாளிகைக்கு அழைத்தார். அனைவரும் வந்து சேர்ந்ததும்ரூபவ் பெருநிதியம் அவர்களுக்கு கொடுப்பவர்போலக் காட்டித் தம் பெயருள்ள கோட்புலி என்ற காவலனை தலைவாயிலிருந்து காவல் செய்யும்படி வைத்தார். பின்புரூபவ் “இறைவரது வலிய ஆணையையும் மறுத்துரூபவ் இறiவா அமுதுக்குரிய நெல்லை அழித்து அடாத செயல்கள் புரிந்த இவர்களைக் கொல்லாமல் விடுவேனோ?” என்று சினத்தோடுரூபவ் தம் தந்தைரூபவ் தாய்ரூபவ் உடன் பிறந்தார்ரூபவ் மனைவியர்கள்ரூபவ் சுற்றத்தார்கள்ரூபவ் ஊரிலுள்ள உரிமையடிமைகள் போன்ற இன்னும் அமுதுபடி நெல்லை அழித்துண்ண இசைந்தவர்கள் எல்லோரையும் தம் உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.
ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் அ தன்பிறகு எஞ்சி நின்றது. அதையும் நாயனார் கொல்ல அதன்மீது பாய்ந்தபோதுரூபவ் அவரைப் பார்த்து வாயிற்காப்போன்ரூபவ் “பெருமானே… என்ன செய்தது இந்த குழந்தை? இது சிவன்சோற்றை உண்ணவில்லையே? ஒரே பிள்ளை ஒரு குடிக்கு! இந்தக் குழந்தையை வெட்டாது அருள் புரியும்…” என்று கெஞ்சினான்.
கோட்புலி நாயனார் அதற்குரூபவ் “சிவன் சோற்றை இந்த குழந்தை உண்ணவில்லை என்பது உண்மைதான்! ஆயினும் அந்தச் சோற்றை உண்டவளின் முலைப்பாலை உண்டது!” என்று சொல்லி அந்தக் குழந்தையை எடுத்து மேலே வீசியெறிந்துரூபவ் இரு துண்டாக வாளினால் விழும்படி வெட்டித் தள்ளினார். சிவபெருமான் அந்நிலையில் தோன்றிரூபவ் “புகழோய்… உன்னுடைய கையிலேந்திய வாளினாலே வெட்டுண்ட உன் சுற்றத்தார்கள்ரூபவ் எல்லோரும் பாசம் நீங்கப் பெற்றார்கள். அவர்கள் யாவரும் பொன்னுலகை விடச் சிறந்த உலகையடைந்துரூபவ் அதன் பிறகு நமது உலகத்தினைச் சார்வர். நம்முடன் இந்நிலையிலேயே நீ வருவாயாக…” என்று சொல்லி அன்பான கோட்புலி நாயனாரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு எழுந்தருளினார்.