திருவிளையாடல் புராணம்

கடலை வற்றடித்தல்

         அபிஷேக பாண்டியன் ஆலவாய் பெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்டிருந்தான்.  தினமும் பால், நெய், பஞ்சாமிர்தம், சந்தானம் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்து, பனிநீர் கலந்த கர்ப்பூரக் குழம்பைப் பூசி, நைவேத்தியமாக தயிர், பால், வடை, பழங்கள் போன்ற பொருட்கள் அடங்கிய தாம்பூலம் கொடுத்து வெகு சிறப்பாக பூஜை செய்வான்.  இவரின் கர்ப்பூரக் குழம்பு அலங்காரத்தினால் இறைவனுக்கு கர்ப்பூர சுந்தரம் என பெயர் வந்துவிட்டது.

     இந்திரன் ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று இரவு பூஜை செய்ய வந்தான்.  அப்போது அரசன் செய்த வழிபாட்டை கண்டு வியந்து போனான்.  அரசன் பூஜை செய்துவிட்டு கிளம்பிய பின்னர் தன்னுடைய பூஜையை செய்து அவனும் விண்ணுலகம் சென்றான்.

     அரசனின் பூஜையை கண்டு பொறாமை கொண்டான் இந்திரன்.  அச்சமயம் வருணன் அங்கே வந்தான்.  

     வருணன் தன்னுடைய தீராத வயிற்று வழியை தீர்க்க ஒரு வழி சொல்லும்படி இந்திரனை  வேண்டினான்..  அதற்கு இந்திரன் மதுரையிலுள்ள சுந்தரேசரை வணங்கி பொற்றாமரையில் நீராடினால் நோய் தீரும் என கூறினார்.  

     பின் இந்திரன் வருணனிடம் நான் அந்த பெருமானுக்கு விமானம் கட்டியும், பொன்னாலான மலர்களை கொண்டு பூஜை செய்தும் அபிஷேக பாண்டியனின் பெருமை எனக்கு கிடைக்கவில்லை என கூறி வருந்தினான்.  பின் அபிஷேக பாண்டியனின் சிறப்பை சோதித்துப் பார்க்கவேண்டும் என கூற வருணனும் ஒப்புக்கொண்டான்.

     மதுரையை விழுங்க செய்ய நீ சமுத்திரத்தை அழைக்க வேண்டும் என கூற, வருணனும் சமுத்திரத்தை அழைத்து மதுரையை மூழ்கடிக்க செய்தான்.  இதை அறிந்த மன்னன் மக்களோடு கோவிலில் வந்து வேண்டினான்.

     அவர்களின் வேண்டுதலை அறிந்த ஆலவாய் பெருமான் அவர்கள் முன் தோன்றி எதற்கும் அஞ்சவேண்டாம் என கூறி தன் சடா முடியிலிருந்து நான்கு மேகங்களை உருவாக்கி கடல் நீர் முழுவதைக்கும் உறுஞ்சும்படி செய்தார்.  இறைவன் அருளால் நகரம் பழைய நிலைக்கு திரும்பியது.  மதுரை நகரில் உண்டான கடல் நீர் முழுவதையும் வற்ற செய்ததே ஈசனின் 18 -ஆம் திருவிளையாடல்.

    ஈசனின் 18 -ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் நோய் நீங்கி நல்ல உடல் நலம் பெறுவர்.  மழை பெய்து நாடு செழிக்கும்.       

மேலும்

குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
பத்திரனுக்குப் பலகையிடல்
View Details
ரசவாதம் புரிதல்
View Details