பிரதோஷ விரதம் இருக்கும் முறை
ஆயிரம் துன்பம் வந்தாலும் ஈஸ்வரன் துணை இருந்தால் எல்லா பிரச்சனைகளும் தவிடு பொடியாகிவிடும் என்பது நாம் அறிந்த ஒன்றே. அப்படிப்பட்ட சிவனுக்கு உகந்த நாட்கள் பல இருந்தாலும் இந்த பிரதோஷ நாள் மிகவும் சிறப்பானது , இந்தநாளில் விரதம் இருந்தால் எந்த தோசமாக இருந்தாலும் தீர்ந்து போகும், தீராத கடனும் தீரும்,கிடைக்காத பொக்கிஷமும் கிட்டும்.பிரதோஷ விரதம் மேற் கொள்பவர்கள் காலை எழுந்து குளித்து விட்டு நெற்றி நிறைய திருநீறு அணிந்து காலை சிவனை வீட்டிலியே பூஜை பண்ணலாம் முடிந்தால் உண்ணாவிரதம் இருக்கலாம். அன்றைய நாள் முழுவதும் சிவநாமம் கூறிக்கொண்டு இருக்கவேண்டும். முடிந்தால் சிவன் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்யலாம். இந்நாளில் சிவனடியார்களுக்கு சேவை செய்வது மிகவும் சிறப்பானது.மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று பிரதோச பூஜையில் பங்கு கொள்ளலாம், சிவன் அபிசேக பிரியர் அதனால் அன்று உங்களால் முடிந்த அபிசேக பொருளை பூஜைக்கு வாங்கிகொடுங்கள். பூக்கள் வாங்கிக்கொடுங்கள் குறிப்பாக தும்பை பூ கிடைத்தால் மாலை கட்டி கொடுக்கலாம்.இதில் எதுவும் வாங்க முடியவில்லை என்றாலும் வில்வம் மட்டும் வாங்கிகொடுங்கள் அது சிறப்பான பலனை உண்டாக்கும். பூஜை முடிந்த பின் விரத்தத்தை முடித்து கொள்ளலாம். அன்று தேவாரம் திருவாசகம் அல்லது சிவனை போற்றி படக்கூடிய பாடல்களை பாடுவது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும்.