வராகி அம்மன் வாழிபாடு
வராகி அம்மன் வழிபாடு என்பது மிகவும் தொன்மையான வழிபாடு ஆகும். ஆக்ரோஷ தெய்வமாக கருதப்படும் அம்மன் உண்மையாக குழந்தை மனம் படைத்தவர்கள். போர் தெய்வமாக பார்க்கப்படும் அம்மன் கையில் போர் ஆயுதங்களுடன் சேர்ந்து உழவுக்கு பயன்படும் கலப்பையும் காணப்படுவது சிறப்பு. சில இடங்களில் கோட்டையை காக்கும் தெய்வமாக அம்மன் இருந்து வந்திருக்கிறார். தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு என்று தனியே ஒரு சன்னதி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மிகவும் கலை நயத்துடன் அந்த சிற்ப்பமானது அமையப்பெற்றிருக்கும். வராகி அம்மனை வழிபட உகந்த காலமாக கருதப்படுவது ஆனி மாதம் வரும் நவராத்திரியாகும் (இது ஆஷாட நவராத்திரி ) அந்த காலத்தில் அம்மா பிராதன தேவதையாக இருந்து அருள் புரிகிறாள். அது போக தினமும் மாலை நேரத்தில் அம்மனை வழிபடுவது சிறப்பான பலனை உண்டாக்கும். அம்மனை வழிபாடும் போது கரும்பு, கரும்பு சாறு,பழச்சாறு போன்றவை படைத்து வழிபடுவது உத்தமமாகும் .
பெரும்பாலும் வராகி அம்மனுக்கு கோவில் இருக்கும் ஊர்களில் நல்ல மழை சரியான காலங்களில் பெய்து ஊரில் விவசாயம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதே போல காவல் பணிகளில் இருப்பவர்கள் வராகியை வழிபாடும் போது அதீத தைரியம் உண்டாகும். வீட்டில் அம்மனின் உருவப்படத்தை வைத்து பூஜை செய்யலாம். வாராகியம்மனை நாம் நினைத்த உடன் பூஜை செய்ய முடியாது என்று கூறப்படுகிறது, மாறாக அம்மனின் அருளும் அவர்களது கருணையும் இருக்கும் பட்சத்தில் தான் அம்மனை வழிபடமுடியும். அம்மனுக்கு பூஜை செய்யும் போது சிவப்பு நிற மலர்கள் கொண்டு பூசிப்பது நல்லது அதிலும் குறிப்பாக சிவப்பு நிற தாமரை மலர்களை கொண்டு பூசிப்பது நன்மை பயக்கும். அம்மனுக்கு பச்சரிசிமாவினால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றுவது சுகமளிக்கும். வெள்ளி செவ்வாய் கிழமைகள் அம்மனை வழிபட உகந்த கிழமைகள் ஆகும்.
வராகி அம்மனை வழிபட்டு நீண்ட வாழ்க்கையும் நீடித்த செல்வமும் பெற்று வாழ்வீர்களாக.