விளக்க உரை

சமயபுரம் மாரியம்மன் பூஜை முறை

பூஜைகளில் எல்லாம் மிக சிறப்பானது அம்பிகை வழிபாடு, கேட்டது கிடைக்கவும் எதிரிகள் தொல்லை தீரவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் யாவும் தீரவும் சமயபுரம் மாரியம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இந்த வழிபாடு ராஜாக்கள் காலத்திலிருந்தே மிகவும் பிரசித்தி பெற்று இருந்திருக்கிறது. மன்னர்கள் போருக்கு போகும் முன்னர் அம்பிகையை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.
பூஜை முறை
இந்த விரதமானது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செய்ய வேண்டிய வழிபாடு குறிப்பாக ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். அதிலும் வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். பூஜை செய்யும் அன்று முடிந்தால் காலை முதல் அம்மனை நினைத்து விரதம் இருந்து மாலை ராகு காலத்தில் இந்த பூஜையை செய்யலாம். இதற்க்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை இரண்டு, மாரியம்மன் புகைப்படம் அல்லது உருவ சிலை, பானகம், இளநீர், சிவப்பு நிற மலர்கள், நெய் விளக்கு. முதலில் பூஜை அறையில் எந்த இடத்தில் பூஜை செய்யப்போகிறோம் என்பதை தேர்வு செய்து கொண்டு ஒரு எலுமிச்சையை அறுத்து அந்த இடத்தில் பிழிந்து அந்த இடத்தை கையாலே சுத்தப்படுத்த வேண்டும், அது அந்த இடத்தை புனிதமாக்கும். அந்த இடம் சதுரமானாதாக இருக்கும் படி பார்த்துகொள்ளுங்கள், பின்னர் அந்த இடத்தில் மஞ்சள் தூவி அதை கையினால் தடவி விட வேண்டும், இப்போது மஞ்சள் நிற சதுரம் உண்டாயிருக்கும், அதன் நான்கு மூலையிலும், சதுரத்தின் நடு பகுதியிலும் குங்குமம் வைக்க வேண்டும் . அதன் பின்னர் அம்மனின் புகைப்படத்தையோ அல்லது சிலையையோ சுத்தபடுத்தி அலங்கரித்து அந்த சதுரத்தின் நடுவில் வைக்க வேண்டும், அதன் பக்கத்தில் பானகம்,இளநீர்,எலுமிச்சை கண்டிப்பாக இருக்க வேண்டும். நெய்வேத்தியம் பொங்கல், தயிர் சாதம் போன்றவை வைக்கலாம். உங்கள் மனதில் உள்ள வேண்டுதலை அம்மனிடம் வைத்து அம்மனின் 108 போற்றிகளை சொல்ல வேண்டும் அப்போது சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்சிக்க வேண்டும், பின்னர் அம்மன் பாடல்கள் தெரிந்தால் பாடலாம் அதன் பின் தூப தீபம் காட்ட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர அனைத்து பிரச்சனைகளும் உங்கள் கண் முன்னே தீருவதை நீங்களே பார்க்கலாம். பூஜை முடிந்ததும் பானகத்தை வீட்டில் உள்ளவர்கள் குடிக்கலாம். வீட்டில் எலுமிச்சை விளக்கு ஏற்றக்கூடாது.

மேலும்

புலிப்பாணி சித்தர்
View Details
பிண்ணாக்கீசர்
View Details
பதஞ்சலி
View Details
பூசலார் நாயனார்
View Details
திருமூலர்
View Details
மங்கையர்க்கரசியார்
View Details