சனி மஹா பிரதோசம்
சிவனுக்கு உரிய விரதங்களில் மிகவும் குறிப்பிட தகுந்தது இந்த சனி மஹா பிரதோஷ விரதமாகும். இந்த பிரதோஷத்தை கடைபிடிப்பவர்கள் மற்றும் இந்த பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டு சிவ தொண்டு செய்பவர்கள் இந்திரனுக்கு இணையான பதவியை அடைவார்கள். இந்த நாளன்று காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு நெற்றி நிறைய விபூதி அணிந்து கொண்டு உபவாசம் இருக்கலாம், அன்று முழுவதும் ஈசனின் மந்திரத்தை கூறிக்கொண்டோ தேவாரம் திருவாசம் பாடிக்கொண்டோ இருப்பது நல்லது.முடிந்தால் காலையில் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்யலாம். மாலை பிரதோச நேரத்தில் கோவிலில் பூஜையில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த அபிசேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். கோவிலில் நெய் விளக்கு ஏற்றலாம், நெய் வீட்டில் இருந்து கொண்டு செல்வது மிகவும் சிறப்பு. சாமிக்கு வில்வ இல்லை அர்ச்சனைக்கு வாங்கி கொடுக்கலாம், அன்று ருத்திராட்ச தானம் செய்யலாம். நந்தி பகவானுக்கு பச்சரிசியும், வெல்லமும் அருகம்புல் மாலையும் வாங்கி கொடுக்கலாம், தொடர்ந்து சிவ மந்திரத்தை கூறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அபிசேக ஆரத்தி காணவேண்டும் அதிலும் ஈஸ்வரனை நந்தியின் கொம்புகளுக்கு இடையே காண வேண்டும். அந்த நேரத்தில் சோம சூக்த பிரதக்ஷணம் செய்வது நல்லது. பின்னர் உங்கள் விரத்தத்தை முடித்து கொள்ளலாம்.இது உங்கள் மனதை திடப்படுத்த உதவும் விரதம் ஆகும்.தவறாமல் கடைபிடியுங்கள்.