ஐப்பசி பௌர்ணமி - அன்னாபிஷேகம்
ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு மிகவும் உகந்த நாள், இந்த நாளில் சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வருவதால் மிகவும் பிரகாசமாக தெரியும் அதன் போது சந்திரனுக்கு உகந்த தானியமான அரிசியை கொண்டு உணவு சமைத்து பிறைசூடும் ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்வது உணவு தட்டுபாட்டை போக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும், தீராத நோயெல்லாம் தீரும். மேலும் பிரம்மன் தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி அனைத்து இடங்களிலும் தன் கையிலிருந்த கபால பிச்சை பாத்திரத்தில் பிச்சை எடுத்தார், அது நிறைந்தால் மட்டுமே அவர் தோஷம் போகும் என்று இருக்க , இந்த ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று காசியில் அன்னபூரணியிடம் யாசகமாக உணவை பெற்றார், அவர் பாத்திரம் நிரம்பவே ஈசன் தோஷத்திலிருந்து நீங்கப்பெற்றார். அதனால் இந்த நாள் மேலும் சிறப்பு பெறுகிறது.
அன்னாபிஷேகம் செய்த உணவை அப்படியே உண்ணாமல் தயிர் அல்லது வெண்ணை கலந்து சாப்பிடுவது தான் உத்தமம். அபிசேகத்திற்கு பயன்படுத்திய காய் கனிகளையும் பக்தர்களுக்கு கொடுப்பது வழக்கம், அதையும் நாம் உண்ணலாம். அன்று யஜூர் வேதம், ருத்திரம்
கூறுவது நல்லது.