பிரேதசாபம் ஒரு விளக்கம்
பிரேதசாபம் என்பது ஜோதிடரீதியில் பார்த்தால் ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் சனி அல்லது ராகு இருப்பதை குறிக்கும். இதில் நமக்கு குழப்பம் வருவது இயல்பு தான், ஒன்பதாவது வீட்டில் சனி அல்லது ராகு இருப்பதால் மட்டும் நான் பிரேத சாபம் பெற்றவன் என்று எப்படி சொல்லமுடியும். சற்று விரிவாக அது ஏன் ஏற்படும் என பார்ப்போம். மரணம் நிகழ்ந்த ஒரு வீட்டுக்கு செல்கிறோம் அப்போது அங்கு தேவை இல்லாமல் பிரச்சனை செய்தால் இந்த சாபம் வரும் என கூறப்படுகிறது , அது போக இறப்பு நடந்த வீட்டில் நின்று கொண்டு இறந்த நபரை பற்றி தவறாக பேசுவது, பிரேதம் கொண்டு செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்துவது, பிரேதத்தை தாண்டுவது, பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டுவது (எலும்பை திருட), இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய மறுப்பது, வீட்டில் வளர்த்த உயிரினம் இறந்துவிட்டால் அதை புதைக்காமலோ, எரிக்காமலோ அதை அழுக விடுவது போன்றவை பிரேதசாபம் ஏற்படுத்தும். இதனால் இந்த சாபம் வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.