விஜயதசமி வழிபாடு முறை
விஜயதசமி என்பது வெற்றிகளை தரக்கூடிய நாள் என்றால் அது மிகையாகாது. தமிழ் மாதங்களில் புரட்டாசி அமாவாசைக்கு பின் வரும் பத்தாம் நாள் தசமி திதி இந்த நல்ல நாளில் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. உலகை காக்கும் பொருட்டு மகிஷன் என்ற அரக்கனை அன்னை ஒன்பது நாள் கடுமையான தவம் இருந்து இந்த பத்தாம் நாளில் தான் வதம் செய்தார் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் கல்வி, வேலை, தொழில்,கலைகள் கற்ப்பது போன்ற எந்த ஒரு ஆரம்பத்திற்கும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில் அம்பிகை அரக்கனை அழித்து உலக மக்கள் அனைவருக்கும் விஸ்வரூப தரிசனம் அளித்து அவர்கள் வேண்டும் வரத்தை கொடுத்தார். அதன் படி இன்றும் குழந்தைகளுக்கு முதன் முதலில் பள்ளி படிப்பை ஆரம்பிக்கும் பொருட்டு வித்யாரம்பம் என்ற நிகழ்வானது நடைபெறுகிறது, சிலர் இதை கோவில்களில் செய்கின்றனர் சிலர் தம் இல்லத்திலேயே செய்கின்றனர். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது
இந்த நாளில் அம்மனை வேண்டி, மாணவர்களுக்கு எந்த பாடம் படிக்க கடினமாய் இருக்கிறதோ அந்த பாடத்தை எடுத்து சிறிது படிக்க அதன் பின்னர் அந்த பாடம் நல்ல முறையில் அவர்கள் மனதில் ஏறும். புதியதாக தொழில் தொடங்குபவரும் இந்த நாளில் அம்மனை மனதார வழிபட்டு ஆரம்பித்தால் நல்ல முறையில் முன்னேற்றம் அடையலாம்.
இந்த நாளில் அம்மனின் வெற்றியை கொண்டாடும் பொருட்டு தசரா பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.அதில் குறிப்பாக மைசூர் மற்றும் குலசையில் நடக்கும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தாது.