விளக்க உரை

விபூதி எப்படி பூச வேண்டும்

விபூதி என்பது ஈஸ்வர சொரூபம், ஆன்மீக பாதையில் அதற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, இவ்வுலகில் பிறந்த யாவரும் இறுதியில் ஒரு பிடி சாம்பல் தான் என உணர்த்தும் வகையில் விபூதி பார்க்கப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த விபூதியை வலதுகையில் வாங்கி இடதுகைக்கு மாற்றி தரிக்க வேண்டாம், விபூதியை மோதிர விரலில் எடுத்து தரிப்பது மிகவும் சிறப்பானது, அல்லது ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் என்று மூன்று விரலையும் சேர்த்து விபூதி பூசுவது நன்மையளிக்கும். சிலர் வாங்கியவுடன் உள்ளங்கையில் வைத்தபடியே நெற்றி நிறைய பூசுவார்கள் அதுவும் புண்ணியத்தை கொடுக்கக்கூடிய ஒன்று தான். மிகவும் முக்கியம் காலை மாலை இருநேரத்திலும் விபூதி அணியும் போது தண்ணீர் கலக்காமல் பூச வேண்டும் அது நம்மை சுற்றியுள்ள நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையது, குளித்து முடித்தவுடன் நீரில் குழைத்து பூசுதல் தலையில் நீர் கோர்க்காமல் இருக்க உதவும். முடிந்த அளவு கோசாலையில் தயாரிக்கப்படும் தூய்மையான திருநீறை பயன்படுத்துங்கள்.

மேலும்

வைகையாற்று வெள்ளம்
View Details
கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர்
View Details
நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
காரைக்காலம்மையார்
View Details
ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர்
View Details
புலிப்பாணி சித்தர்
View Details