பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 23. மும்முத்தி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி

ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்

மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்

ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.  1 

 

 

ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்

ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்

ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று

ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.  2 

 

 

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்

தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்

துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்

சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.  3 

 

 

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய

சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த

சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்

பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.  4 

 

திருச்சிற்றம்பலம்