பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

039 சோமாசி மாற நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சூதம் பயிலும் பொழில் 

  அம்பரில் தூய வாய்மை

வேதம் பயிலும் மறையாளர் 

  குலத்தின் மேலோர்

ஏதம் புரியும் எயில் 

  செற்றவர்க்கு அன்பர் வந்தால்

பாதம் பணிந்தார் அமுது 

  ஊட்டு(ம்) நற் பண்பின் மிக்கார்.  1 

 

 

யாழின் மொழியாள் தனிப் 

  பாகரைப் போற்றும் யாகம்

ஊழின் முறைமை வழுவாது 

  உலகங்கள் ஆன

ஏழும் உவப்பப் புரிந்து 

  இன்புறச் செய்த பேற்றால்

வாழும் திறம் ஈசர் மலர்க் 

  கழல் வாழ்த்தல் என்பார்.  2 

 

 

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு 

  அன்பர் என்றால்

அத் தன்மையர் தாம் நமை 

  ஆள்பவர் என்று கொள்வார்

சித்தம் தெளியச் சிவன் 

  அஞ்செழுத்து ஓதும் வாய்மை

நித்தம் நியமம் எனப் 

  போற்றும் நெறியில் நின்றார்.  3 

 

 

சீரும் திருவும் பொலியும் 

  திருவாரூர் எய்தி

ஆரம் திகழ் மார்பின் 

  அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்

சாரும் பெரு நண்பு 

  சிறப்ப அடைந்து தங்கிப்

பாரும் விசும்பும் பணியும் 

  பதம் பற்றி உள்ளார்.  4 

 

 

துன்றும் புலன் ஐந்துடன் 

  ஆறு தொகுத்த குற்றம்

வென்று இங்கு இது நல்நெறி 

  சேரும் விளக்கம் என்றே

வன் தொண்டர் பாதம் 

  தொழுதான சிறப்பு வாய்ப்ப

என்றும் நிலவும் சிவலோ கத்தில் 

  இன்பம் உற்றார்.  5 

 

 

பணையும் தடமும் புடை 

  சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்

துணையும் தாமும் பிரியாதார் 

  தோழத்தம் பிரானாரை

இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் 

  மென்பணை தோள் எய்துவிக்க

அணையும் ஒருவர் சரணமே 

  அரணமாக அடைந்தோமே 6

 

திருச்சிற்றம்பலம்