பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

065 பரமனையே பாடுவார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

புரம் மூன்றும் செற்றானைப் 

  பூணாகம் அணிந்தானை

உரனில் வரும் ஒரு பொருளை 

  உலகு அனைத்தும் ஆனானைக்

கரணங்கள் காணாமல் கண் 

  ஆர்ந்து நிறைந்தானைப் 

பரமனையே பாடுவார் தம் 

  பெருமை பாடுவாம்.  1 

 

 

தென் தமிழும் வட கலையும் 

  தேசிகமும் பேசுவன

மன்றினிடை நடம் புரியும் 

  வள்ளலையே பொருள் ஆக

ஒன்றிய மெய்யுணர் வோடும் 

  உள் உருகிப் பாடுவார்

பன்றியுடன் புட்காணாப் 

  பரமனையே பாடுவார்.  2

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

வேலால் கடலைச் சிதைத்தல்
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details
தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு
View Details