அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அருவாகி உருவாகி அனைத்துமாய்
நின்ற பிரான்
மருவாருங் குழல் உமையாள்
மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்
தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால்
உரைக்கலாம் தகைமையதோ. 1
திருக் கயிலை வீற்றிருந்த சிவபெருமான்
திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப்
பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி
மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து
ஆகும் உயர் நெறியே. 2
திருச்சிற்றம்பலம்